மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

Written By:

தமிழக சினிமா, அரசியல் என இரண்டிலும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக நிறைந்திருக்கிறார். அவர் மறைந்தாலும், அவரது நினைவுகள், நற்செயல்கள் எல்லா தரப்பினராலும் நினைவுகூறப்படுகிறது.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

அவர் பயன்படுத்திய பொருட்கள், சென்னை ஆற்காடு சாலையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஏராளமானோர் கண்டு பரவசப்பட்டு செல்கின்றனர். அதில், குறிப்பாக, அவர் பயன்படுத்திய நீல நிற அம்பாசடர் கார் பலரையும் கவர்ந்து இழுந்து வருகிறது.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

கடைசியாக அவர் பயன்படுத்திய இந்த கார் புனரமைக்கப்பட்டு அவரது நினைவில்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மிகவும் விசேஷமான அம்சமே, அதன் பேன்சி எண்தான்.

Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark
எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

ஆம். தான் பயன்படுத்திய காருக்கு TMX 4777 என்ற பேன்ஸி பதிவு எண்ணை அவர் பெற்றது அப்போது அரசியல் உலகில் பரபரப்பான விஷயம். எம்ஜிஆருக்கு 7ம் எண் ராசி என்பதால்தான் காரின் கூட்டுத் தொகை 7 வருமாறு பதிவு எண் வாங்கியதாக கூறப்பட்டது.

அவர் பதவியேற்ற தினத்தை குறிக்கும் வகையில், வாங்கப்பட்டதையும் எமது வாசகர் தாஸ் நினைவூட்டி இருக்கிறார்.

Photo Credit - Palavagaisuvarasiyangal

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

எம்ஜிஆர் முதல்வரான பிறகு பெரும் தொழிலதிபர்கள் பலர் பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை பரிசாக கொடுத்தனர். தொழிதிபர் ஏ.சி.முத்தையா புத்தம் புதிய கான்டெஸ்ஸா கிளாசிக் காரையும் பரிசாக கொடுத்தார். ஆனால், அவற்றை அன்போடு மறுத்துவிட்டார்.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

அவர் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அம்பாசடர் காரையே பயன்படுத்தினார். முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் வழங்கப்பட்ட பெட்ரோல் படி, பயண படி உள்ளிட்ட அரசு வழங்கும் சலுகைகளையும் பெற மறுத்தவர்.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

எம்ஜிஆர் திரைத்துறையில் இருந்தபோதே கார் பிரியராக இருந்தார். புத்தம் புதிய கார்களை வாங்குவது அவருக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. அம்பாசடர் தவிர்த்து, ஃபியட், செவர்லே கார்களையும் பயன்படுத்தி இருக்கிறார். அந்த கார்கள் ராமாவரம் தோட்ட இல்லத்தில் இருக்கின்றன.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

மேலும், ஓய்வு நேரங்களில் சில்க் ஜிப்பா, லுங்கியுடன் காரை சென்னை சாலைகளில் தானே ஓட்டிச் செல்வதையும் பொழுதுபோக்காக கொண்டிருந்தாராம். அப்போது தொப்பி, கண்ணாடி அணியாமல் செல்வாராம்.

எம்ஜிஆர் பயன்படுத்திய கார்களும், சுவாரஸ்யங்களும்... !!

இதைவிட மற்றொரு விஷயம், எம்ஜிஆர் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருந்ததாக தகவல் வலைப்பூ தகவல் ஒன்று தெரிவிக்கிறது. பெங்களூரில் உள்ள கார் சேகரிப்பாளர் ஒருவர் அந்த காரை பய பத்திரமாக பாதுகாத்து வருவதாகவும் அந்த வலைப்பூ தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Photo Credit: Othisaivu

எம்ஜிஆர் கார்கள்

இந்த காரின் பதிவு எண் MGR 111 என்பதாகும். எம்ஜிஆர் அணிந்திருந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஓடும் சப்தம் சமாதிக்குள் இருந்து வருவது போல, இந்த காரில் இருந்தும் கியர் மாற்றும் சப்தமும், ஹாரன் சப்தமும் கேட்பதாக கட்டுக்கதை இருக்கிறது.

Photo Credit: Othisaivu

எம்ஜிஆர் கார்கள்

எனினும், இதுகுறித்து உறுதி செய்வதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. எப்படி இருந்தாலும், திரைத்துறையிலும், சினிமாத் துறையிலும் கொடி கட்டி பறந்த எம்ஜிஆருக்கு கார் ஆர்வம் மிகுந்த என்பதால், ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி பயன்படுத்தி இருப்பார் என்று நம்பலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
எம்ஜிஆர் கார், எம்ஜிஆர் வரலாறு

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark