மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடந்து போர் அடிக்கிறதா? அப்போ வாங்க மைசூர் ரயில் மியூசியத்திற்கு ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம்.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றம் செய்யப்பட்டன.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, இந்திய ரயில்வே இத்தகைய சிறப்பான நடவடிக்கைகயை மேற்கொண்டது. இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் இந்திய ரயில்வே-க்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அசத்தலான காரியத்தை இந்திய ரயில்வே செய்துள்ளது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரயில் மியூசியத்தில், கோச் ரெஸ்டாரெண்ட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டியைதான் இந்திய ரயில்வே உணவகமாக மாற்றி, மைசூர் ரயில் மியூசியத்தில் நிறுத்தியுள்ளது. பொதுமக்களின் சௌகரியத்திற்காக ட்ரெயின் கோச், ரெஸ்ட்டாரென்ட்டாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்த கோச் ரெஸ்டாரெண்ட்டில், 20 பேர் வரை அமர்ந்து உணவருந்த முடியும். லாபமும் வேண்டாம், நஷ்டமும் வேண்டாம் என்ற அடிப்படையில் (No-profit, No-loss Model) இந்த ரெஸ்டாரெண்ட் நடத்தப்படவுள்ளது. ரயில் மியூசியத்தை பார்வையிட வருபவர்களின் வசதிக்காக, இந்த கோச் ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட்டுள்ளது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல் இன்று (ஜூன் 24) பகிரப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள ரயில் மியூசியம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அதனை பார்வையிட பலர் வந்து செல்லும் நிலையில், அவர்களின் சௌகரியத்தை கருத்தில் கொண்டு, ட்ரெயின் கோச் ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட்டுள்ளது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

மைசூர் ரயில் மியூசியம் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விண்டேஜ் கார், பைக்குகளை போல், இங்கு விண்டேஜ் லோகோமோட்டிவ்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மியூசியம், இந்திய ரயில்வேயால் கடந்த 1979ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. டெல்லியில் இருக்கும் தேசிய ரயில்வே மியூசியத்திற்கு அடுத்தபடியாக, அதுபோல் அமைக்கப்பட்ட 2வது மியூசியம் இதுவாகும்.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

கிருஷ்ணராஜ சாகர் சாலையில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எதிரே இந்த ரயில் மியூசியம் அமைந்துள்ளது. இந்தியாவில் ரயில்வே அடைந்த வளர்ச்சியை சித்தரிக்கும் விதமாக, லோகோமோட்டிவ்கள் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் பெயிண்ட்டிங்குகள் அடங்கிய கேலரியும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

அத்துடன் ரயில்வே சிக்னல்கள் மற்றும் லைட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கே உள்ள மினி ரயில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பேட்டரியில் இயங்கும் இந்த மினி ரயிலில், குழந்தைகள் ஜாலியாக ஒரு ரவுண்டு சென்று வர முடியும். மைசூர் ரயில் மியூசியத்திற்குள் நீங்கள் நுழைந்தவுடன், ES 506 4-6-2 உங்களை வரவேற்கும்.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இதுதான் எண்ட்ரண்ஸில் வைக்கப்பட்டிருக்கும் முதல் லோகோமோட்டிவ் ஆகும். இதேபோல் மைசூர் ரயில் மியூசியத்தில், ஆஸ்டின் ரயில்-மோட்டார் காரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 1925ம் ஆண்டு மாடல் ஆஸ்டின் கார் ஆகும். இது உண்மையில் மற்ற கார்களை போல் சாலையில் ஓட்டுவதற்காகதான் வடிவமைக்கப்பட்டது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இருந்தாலும் பின் நாட்களில் ஸ்கிராப் டீலர் ஒருவருக்கு இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. அந்த ஸ்கிராப் டீலரிடம் இருந்து ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த காரை பெற்று வந்து மாடிபிகேஷன் செய்தார். அந்த காரின் சக்கரங்களை கழற்றி விட்டு, ரயில் சக்கரங்களை பொருத்தியதுதான், அவர் செய்த மாற்றங்களிலேயே மிகவும் முக்கியமானது.

மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள்! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இதன்பின் ரயில் காராக அது தனது பயணத்தை தொடங்கியது. ரயில்வே தண்டவாளத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகளை சுமந்து செல்வதற்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டது. இந்த காரில் 6 பேர் வரை பயணிக்க முடியும். இதேபோல் இன்னும் ஏராளமான சுவாரஸ்ய அம்சங்கள், மைசூர் ரயில் மியூசியத்தில் பொதிந்து கிடக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts About Mysore Rail Museum. Read in Tamil
Story first published: Wednesday, June 24, 2020, 20:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X