20 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய காத்திருக்கும் பிஎஸ்எல்வி பற்றிய சுவாரஸ்யங்கள்!

Written By:

விண்வெளி ஆய்விலும், தொழில்நுட்பத்திலும் அளப்பரிய சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ நாளை புதிய சாதனை ஒன்றை தனது மணி மகுடத்தில் சூட இருக்கிறது. ஆம், ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களுடன் தனது பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட்டை நாளை ஸ்ரீஹரிகோட்டா ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.

இதற்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று துவங்கியது. இஸ்ரோவின் இந்த புதிய முயற்சியை உலக நாடுகள் ஆர்வமுடனும், சற்று பொறாமையுடனும் உற்று நோக்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த பிஎஸ்எல்வி ராக்கெட்தான் இந்த 20 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய இருக்கிறது. இந்த ராக்கெட்டின் சுவாரஸ்யமான விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரம்மாண்டம்...

பிரம்மாண்டம்...

Polar satellite Launch Vehicle என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ராக்கெட்டை சுருக்கமாக PSLV என்று குறிப்பிடுகின்றனர். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது. கிட்டத்தட்ட 12 அடுக்குகள் கொண்ட கட்டடத்தின் உயரம் உடையது. இந்த ராக்கெட் 2.8 மீட்டர் விட்டமும், 295 டன் எடையும் கொண்டது. முழுமையாக சுமை நிரப்பப்பட்ட சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தை விட சற்று கூடுதல் எடை கொண்டதாக இருக்கும்.

02. பூஸ்டர்களின் திறன்

02. பூஸ்டர்களின் திறன்

ஒவ்வொரு பிஎஸ்எல்வி ராக்கெட்டிலும் 6 பூஸ்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உருளைகள் போன்று ராக்கெட்டின் கீழ்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும், இந்த பூஸ்டர்களின் வேலை என்பது, ராக்கெட்டை தரையிலிருந்து மேலே உந்தி கிளப்புவதற்காக பயன்படுகிறது. முதலில் 4 பூஸ்டர்கள் மட்டுமே இயங்கும். 25 வினாடிகளில் மேலும் 2 பூஸ்டர்கள் இயங்கும்.

பூஸ்டர்களின் வல்லமை

பூஸ்டர்களின் வல்லமை

புதிய பிஎஸ்எல்வி வரிசை ராக்கெட்டான பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட்டில் இருக்கும், ஒவ்வொரு பூஸ்டர் எஞ்சினும் 720 கேஎன் மேல் நோக்கி எழும்புவதற்கான உந்து சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதாவது, தேஜஸ் போர் விமானத்தில் இருக்கும் ஜிஇ எஃப்-404 டர்போஃபேன் எஞ்சினைவிட 9.2 மடங்கு கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும்.

04. ராக்கெட்டின் நிலைகள்

04. ராக்கெட்டின் நிலைகள்

பிஎஸ்எல்வி ராக்கெட் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை மூலமாக, 4,800 கேஎன் மேல் நோக்கி எழும்புவதற்கான உந்து சக்தியையும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது எரிபொருள் நிலைகள் மூலமாக முறையே 800 கேஎன், 240கேஎன் மற்றும் 15.2கேஎன் உந்து சக்தியையை பெற்றுக் கொள்ளும்.

05. முதல் முயற்சி

05. முதல் முயற்சி

1993ம் ஆண்டு முதல்முறையாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியில் முடிந்தது. ஆனால், அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றியை பெற்றன. மொத்தமாக இதுவரை ஏவப்பட்டதில் ஒன்று தோல்வியும், ஒன்று பாதி தோல்வியும் கண்டிருக்கிறது. மற்ற அனைத்து பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

06. ஏவும் செலவு

06. ஏவும் செலவு

உலக அளவில் மிகவும் குறைவான செலவில் செயற்கைகோள்களை ஏவுவதற்கான வெற்றிகரமான ராக்கெட்டாக பிஎஸ்எல்வி மாறியிருக்கிறது. ஒருமுறை ஏவுவதற்கு ரூ.90 கோடி செலவாகிறது. கடந்த 2014ம் ஆண்டு வரை 40 வெளிநாட்டு செயற்கைகோள்களையும், 31 உள்நாட்டு செயற்கைகோள்களையும் சுமந்து சென்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியிருக்கிறது.

07. ஆர்வம்

07. ஆர்வம்

மிக குறைவான கட்டணம், நம்பகமானது என்பதால் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக தங்களது செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு உலகின் பல நாடுகள் கியூ கட்டி நிற்கின்றன. தொழில்நுட்பத்திலும் ஜாம்பவானாக விளங்கும் அமெரிக்காவிலிருந்தும் சில நிறுவனங்கள் பிஎஸ்எல்வியை பயன்படுத்தி செயற்கைகோள்களை ஏவி வருகின்றன.

08. வாடிக்கை நாடுகள்

08. வாடிக்கை நாடுகள்

பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பாந், ஐரோப்பிய யூனியன், நெதர்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, துருக்கி, அல்ஜீரியா, நார்வே, ஆஸ்திரியா, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து உள்பட 19 நாடுகளின் செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி மூலமாக ஏவப்பட்டுள்ளது.

09. எடை சுமக்கும் வல்லமை

09. எடை சுமக்கும் வல்லமை

பிஎஸ்எல்வி ராக்கெட் அதிகபட்சமாக 3.2 டன் எடையை சுமந்து கொண்டு வினாடிக்கு 1,560 கிமீ டெர்மினல் வேகம் என்ற அளவில் பறக்கும். அதாவது, வினாடிக்கு 7.8 கிமீ வேகம் என்ற அளவில் பறக்கும்.

10. முந்தைய சாதனை

10. முந்தைய சாதனை

கடந்த 2008ம் ஆண்டு ஒரே நேரத்தில் 10 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி9 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 20 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் நாளை விண்ணில் பாய காத்திருக்கிறது.

11. புதிய முயற்சி

11. புதிய முயற்சி

நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி- சி34 ராக்கெட் ஏவப்பட்ட 8 வினாடிகளில் நான்காவது நிலை எஞ்சின் இயங்க துவங்கும். அந்த எஞ்சின் ராக்கெட்டை 514 கிமீ உயரத்திற்கு கொண்டு சென்று, 20 செயற்கைகோள்களையும் 3,000 வினாடிகள் இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே வட்டப்பாதையில் நிலைநிறுத்தும். 20 செயற்கைகோள்களும் 1,288 கிலோ எடை கொண்டது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!

பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting facts about PSLV Rocket.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark