ஏன் புல்லட் ரயில கூட பார்த்துருப்பீங்க... ரோடு ரயில பார்த்துருக்கீங்களா!

Written By:

அதிகரித்து வரும் சரக்கு பரிமாற்றத் தேவைகளை மனதில் வைத்து, விரைவாகவும் மிகுந்த எரிபொருள் சிக்கனத்திற்காகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் மல்டி ஆக்ஸில் சரக்கு வாகனங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால், சில வெளிநாடுகளில் மல்டி ஆக்ஸில் வாகனங்களை தாண்டி, பல ட்ரெயிலர்களை இழுத்துச் செல்லும் டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது கருப்பு ஏற்றிச் செல்வதற்காக இரண்டு ட்ரெயிலர்களை இழுத்துச் செல்லும் டிராக்டர்களை நாம் பார்த்திருந்தாலும், இவை பல டிரெயிலர்களை இழுத்துச் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றைத்தான் ரோடு ரயில் என்று அழைக்கின்றனர். அவற்றை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களுடன் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

 பயன்படுத்தும் நாடுகள்

பயன்படுத்தும் நாடுகள்

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த ரோடு ரயில் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Photo Source

சரக்கு போக்குவரத்து

சரக்கு போக்குவரத்து

பொது போக்குவரத்து சாலைகளிலும் அல்லது அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளிலும் இவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. சுரங்கங்களில் இருந்து தாது பொருட்களை பரிமாற்றத்திற்காகவும், துறைமுகங்களிலும் குறைந்த தூரத்திற்கு மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு பெருமை

ஆஸ்திரேலியாவுக்கு பெருமை

முதல்முறையாக ஆஸ்திரேலியாவில்தான் இந்த ரோடு ரயில்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டன.19ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் அகஸ்ட்டா துறைமுக பகுதிகளில் இந்த ரோடு ரயில் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இங்கிலாந்து ராணுவத்தில்...

இங்கிலாந்து ராணுவத்தில்...

1900ம் ஆண்டில் இங்கிலாந்து ராணுவத்தில் ரோடு ரயில்கள் ஆயுத பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை 4 ட்ரெயிலர்களை கொண்டதாக இருக்கின்றன.

ரோடு ரயில் வகைகள்

ரோடு ரயில் வகைகள்

ரோடு ரயில்கள் A,B,C,D,E,F,G,H மற்றும் K ஆகிய ஆங்கில எழுத்துக்களில் வகைப்படுத்தப்படுகின்றன. நீளம் மற்றும் அதில் கோர்க்கப்படும் ட்ரெயிலர் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு இவை குறிப்பிடப்படுகின்றன. A என்பது ஒரு சிறிய மற்றும் ஒரு பெரிய என இரண்டு ட்ரெயிலர்களை கொண்ட ரோடு ரயிலை குறிக்கும். B என்பது இரண்டு சிறிய மற்றும் ஒரு பெரிய என மூன்று ட்ரெயிலர்களையும், C என்பது இரண்டு பெரிய ட்ரெயிலர்களையும் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றன. D என்பது ஒரு பெரிய, நடுவில் ஒரு சிறிய மற்றும் கடைசியில் ஒரு பெரிய ட்ரெயிலர்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதர வகைகள்

இதர வகைகள்

E என்பது இரண்டு சிறிய மற்றும் இரண்டு பெரிய ட்ரெயிலர்கள் இணைக்கப்பட்டிருக்கும். F என்பது ஒரு பெரிய, நடுவில் இரண்டு சிறிய மற்றும் ஒரு பெரிய ட்ரெயிலர்களை கொண்டது. G என்பது மூன்று பெரிய ட்ரெயிலர்கள் இணைக்கப்பட்டிருக்கும். H என்பதில் முதலில் இரண்டு பெரிய ட்ரெயிலர்கள், அடுத்து ஒரு சிறிய ட்ரெயிலர் இறுதியில் ஒரு பெரிய ட்ரெயிலர் இணைக்கப்பட்டிருக்கும். K வகையில் தலா மூன்று பெரிய ட்ரெயிலர்கள் முதலிலும், கடைசியிலும் இணைக்கப்பட்டிருக்கும். நடுவில் ஒரு சிறிய ட்ரெயிலர் கொண்டிருக்கும். இதுதான் உலகிலேயே மிக நீளமான ரோடு ரயில்.

நீளமான ரோடு ரயில்

நீளமான ரோடு ரயில்

உலகிலேயே மிக நீளமான ரோடு ரயில் ஆஸ்திரேலியாவில்தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, முந்தைய ஸ்லைடில் கண்ட K வகை ரோடு ரயில்தான் அது. இதனை Power Train அல்லது Body and Six என்று அழைக்கின்றனர்.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

உலகின் மிக நீளமான ரோடு ரயில் 460 டன் எடை பாரம் வைக்கப்பட்ட ட்ரெயிலர்களை இழுத்துச் செல்லும் திறன் கொண்டது. ஆஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள தங்க சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

உலகின் மிக நீளமான கே வகை ரோடு ரயிலில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முதன்மையான எஞ்சின் 600 எச்பி பவரையு அளிக்க வல்ல 19.0 லிட்டர் கம்மின்ஸ் எஞ்சினும், பின்புற ட்ரெயலரில் 400 எச்பி பவரை அளிக்கும் மற்றொரு கம்மின்ஸ் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மொத்தமாக 1000 எச்பி பவரை அளிக்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

 அதிகபட்ச பாரம்

அதிகபட்ச பாரம்

உலகின் அதி நீளமான ரோடு ரயிலில் சராசரியாக 460 டன் எடையை சுமந்து செல்லும். மேலும், 100 கிலோமீட்டர் தூரத்திற்கு இடையில் தாது பொருட்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. சுரங்க வளாகத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பொது போக்குவரத்து சாலைகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

ரோடு ரயில் சில விதிகள்

ரோடு ரயில் சில விதிகள்

ஆஸ்திரேலியாவில் ரோடு ரயில்களுக்கு அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்திலும், பின்புறத்திலும் வாகனங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளும் விதத்தில், ரோடு ரயில் என 7.1 இன்ச் அளவுடைய எழுத்துக்களில் எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

சாதனைகள்

சாதனைகள்

உலகின் நீளமான ரோடு ரயில்களை இயக்கி சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1989ல் முதல்முறையாக 12 ட்ரெயிலர்களை இணைத்து இயக்கப்பட்ட ரோடு ரயில் அப்போதைய நீளமான ரோடு ரயில் என்ற பெருமையை பெற்றது. தற்போது பட்டத்துக்கு யார் சொந்தக்காரர் என்பதை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

Photo Source

உலகின் நீளமான ரோடு ரயில்

உலகின் நீளமான ரோடு ரயில்

2006ம் ஆண்டு குயின்ஸ்லாந்திலுள்ள கிளிஃப்டன் சாலையில், 112 ட்ரெயிலர்கள் இணைக்கப்பட்ட உலகின் மிக நீளமான ரோடு ரயிலை 328 அடி தூரம் இயக்கி புதிய சாதனை படைத்தார் ஜான் அட்கின்ஸன். இதுவே தற்போது உலகின் மிக நீளமான ரோடு ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த ரோடு ரயில் 1,474.3 மீட்டர் நீளம் கொண்டிருந்தது. அதாவது, கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நீளம் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A road train, roadtrain or land train is a trucking vehicle of a type used in remote areas of Argentina, Australia, Mexico, the United States, and Canada to move freight efficiently
Story first published: Tuesday, December 29, 2015, 13:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark