ஒலிம்பிக் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கின் உண்மை முகம்! இப்படிப்பட்டவரா அவரு! கொஞ்சம் கூட நம்ப முடியல!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics) விறுவிறுப்பான கட்டத்தை அடைய தொடங்கியுள்ளன. இதன் துப்பாக்கி சுடுதல் (Shooting) போட்டிகளில் இந்தியா தற்போது பதக்க வேட்டையை நடத்த தொடங்கியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவிற்கான முதல் பதக்கம் துப்பாக்கி சுடுதலில் இருந்துதான் கிடைத்தது. அதை தேசத்திற்காக வென்று கொடுத்த வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker) ஆவார். மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (10m Air Pistol) பிரிவில், வெண்கல பதக்கத்தை (Bronze) மனு பாக்கர் வென்று தந்தார்.

இந்த மகிழ்ச்சியில் நாடே திளைத்திருக்கும் சூழலில், இந்தியாவிற்கு தற்போது 2வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவும் அதே துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்தான் கிடைத்துள்ளது. இதுவும் கூட வெண்கல பதக்கம்தான். ஆனால் ஒரே ஒரே வித்தியாசம் என்னவென்றால், இது கலப்பு இரட்டையர் பிரிவு ஆகும்.

Sarabjot Singh

முதல் பதக்கம் பெண்கள் பிரிவில் கிடைத்த நிலையில், 2வது பதக்கம் கலப்பு இரட்டையர் பிரிவில் கிடைத்துள்ளது. இதை வென்று கொடுத்தது மனு பாக்கர்-சரப்ஜோத் சிங் (Manu Bhaker-Sarabjot Singh) கூட்டணி ஆகும். முதல் பதக்கத்தை வென்ற போதே மனு பாக்கரை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரியவந்து விட்டன.

தற்போது 2வது பதக்கம் கிடைத்துள்ள சூழலில், சரப்ஜோத் சிங்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சூழலில் சரப்ஜோத் சிங் பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்கள் எங்களுக்கு தெரிய வந்துள்ளன. அவற்றை இந்த செய்தியின் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Sarabjot Singh With His Cars

சரப்ஜோத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளதால், இளம் வயதில் இருந்தே அவர் துப்பாக்கி சுடுதல் மீது காதல் கொண்டவர் என பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இளம் வயதில் இருந்து தற்போது வரை சரப்ஜோத் சிங் காதலித்து கொண்டிருப்பது கார்கள் மற்றும் கார் பந்தயங்களைதான்! நீங்கள் நம்பாவிட்டாலும் கூட, இதுவே உண்மை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் சரப்ஜோத் சிங்கே இந்த தகவலை கூறியிருந்தார். ''இளம் வயதில் இருந்தே கார்கள் மற்றும் கார் பந்தயங்கள் மீது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. அதற்கு பிறகுதான் துப்பாக்கி சுடுதல் வந்தது'' என சரப்ஜோத் சிங் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

எதில் ஆர்வம் அதிகம் என்ற கேள்வியை சரப்ஜோத் சிங்கிடம் கேட்டீர்கள் என்றால், உங்களுக்கு என்ன பதில் கிடைக்கும் தெரியுமா? கார்களுக்கு அடுத்தபடியாகதான் அவர் துப்பாக்கி சுடுதலை கொண்டு வருவார். கார்கள், அதற்கு அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதல் என்ற வரிசையில்தான் எனது ஆர்வம் உள்ளது என்பதை சரப்ஜோத் சிங்கே ஒரு முறை ஒப்பு கொண்டுள்ளார்.

சரப்ஜோத் சிங் தனது குடும்பத்திற்காக சமீபத்தில் எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக அவருக்காக ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) ஒன்றை வாங்கும் திட்டமும், சரப்ஜோத் சிங்கிடம் உள்ளது. சரப்ஜோத் சிங்கின் இந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேற எங்களுடைய வாழ்த்துக்கள்!

நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாடகைக்கு கார் எடுத்து கொண்டு, புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு (Buddh International Circuit) செல்வது, சரப்ஜோத் சிங்கிற்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும். அத்துடன் ஃபார்முலா 1 (Formula 1) கார் பந்தயங்களை பார்ப்பதும் கூட, சரப்ஜோத் சிங்கிற்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றுதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் சரப்ஜோத் சிங் சாதனை படைத்துள்ளார். இதை கௌரவிக்கும் வகையில், பெரிய கார் நிறுவனங்களோ அல்லது தொழில் அதிபர்களோ அவருக்கு ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினால் நன்றாக இருக்கும். இது அவரின் கனவை நிறைவேற்ற உதவி செய்வதாகவும் இருக்கும்!

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 17:55 [IST]
English summary
Interesting facts about sarabjot singh car lover becomes olympics bronze medalist
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+