இந்தியாவில் இந்திய அரசால் கைப்பற்ற முடியாத ஆங்கிலேயர்களின் ரயில்வே வழித்தடம்

Written By: Azhagar

இந்தியாவில் அமைக்கப்பட்டு இருக்கும் ரயில்வே வழித்தடங்கள் சிறப்பு வாய்ந்தவையாகவும், பலதரப்பட் மக்களின் சிறந்த போக்குவரத்து சாதனமாகவும் விளங்குகின்றன. ஆனால் எந்த ரயில் வழித்தடங்களுக்கு இல்லாத சிறப்பு மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயன்பாட்டிலுள்ள ஒரு ரயில்வே வழித்தடத்திற்கு உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஓடும் ஆங்கிலேயருக்கு சொந்தமான ரயில்

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1951ம் ஆண்டில் நாட்டிலிருந்த அனைத்து ரயில்வே வழித்தடங்களையும் தேசியமையமாக்கப்பட்டது. ஆனால் மஹாராஷ்ட்ராவின் அமராவதி மாநிலத்தில் குறுகிய ரயில் பாதையில் ஆங்கிலேயர்கள் அமைத்த ஒரு வழித்தடத்தை மட்டும் இந்திய அரசால் இதுவரை தேசியமயமாக்கலின் கீழ் கொண்டு வர இயலவில்லை.

சுதந்திர இந்தியாவில் ஓடும் ஆங்கிலேயருக்கு சொந்தமான ரயில்

சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு இருக்கும் இந்த ரயில்வே வழித்தடம் அமராவதி மாவட்டத்தின் யவத்மால், அச்சல்பூர் போன்ற பகுதிகளிருந்து மும்பை நகருக்கு பருத்தியை எடுத்து செல்ல கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு சொந்தமான கில்லிக்-நிக்சன் என்ற நிறுவனம் 1910ம் ஆண்டில் இந்த ரயில்வே வழித்தடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டது.

சுதந்திர இந்தியாவில் ஓடும் ஆங்கிலேயருக்கு சொந்தமான ரயில்

விதர்பாவின் ராணியாக வாழ்ந்த சகுந்தலா மறைவிற்கு பிறகு இந்த வழித்தடம் கட்டப்பட்டதால், அதற்கு சகுந்தலா ரயில்வே என ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர். இங்கிலாந்தின் லிவர்பூல் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட சகுந்தலா ரயில், முன்னதாக நீராவியில் இயங்கி தற்போது, டீசல் தொடர்வண்டியாக பயன்பாட்டில் உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஓடும் ஆங்கிலேயருக்கு சொந்தமான ரயில்

மும்பை-நாக்பூர்-கொல்கத்தா அகல ரயில்ப் பாதை வழித்தடத்தில் உள்ள முர்திசாபூரில் துவங்கி, யவத்மால் வரை குறுகிய ரயில்பாதை தடத்தில் இந்த ரயில் பயணிக்கிறது. 190 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்துவிடும் இந்த வழித்தடம் தான் குறைந்த விலையில் அதாவது 25 ரூபாயில் மக்களுக்காக இயங்கும் ஒரே போக்குவரத்து ஊர்தியாக உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஓடும் ஆங்கிலேயருக்கு சொந்தமான ரயில்

சகுந்தலா ரயில் பயணிக்கும் பெரும்பாலான வழித்தடங்கல் பெரும்பாலும், மலை, ஈரக்காற்று நிறைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சம் பகுதிகளாக உள்ளன. வெறும் வரலாறு, அடையாளம் ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், யவ்வத்மால், அச்சல்பூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் சுமந்து செல்கிறது சகுந்தலா ரயில்வே.

மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரின் படங்கள்:

English summary
The train which travels a distance of 190 kms in about four hours is the lifeline for the people of Yavatmal and Achalpur (Amravati district) of Maharashtra
Story first published: Tuesday, March 7, 2017, 16:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark