ஸ்டெப்னி வீல் பின்னால் ஒரு சுவாரஸ்ய வரலாறு!

By Saravana

ஸ்டெப்னி என்றவுடன் சிலருக்கு வேறு ஞாபகம் வருவது இயற்கை. டயர் பஞ்சராகும்போது மற்றும் சமயங்களில் வெடித்துவிடும்போதும் ஆபத்பாந்தவனாக ஸ்டெப்னி பயன்படுகிறது.

மேலும், ஸ்பேர் வீலை பெரும்பாலும் ஸ்டெப்னி என்றே நம்மூரில் அழைக்கிறோம். ஆனால், ஸ்டெப்னி வீலின் பின்னால் ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கிறது. அது என்ன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

பஞ்சர்

பஞ்சர்

அந்த காலத்தில் சாலைகள் மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கவில்லை. மேலும், மோட்டார் வாகனங்களின் டயர்களை சாலையில் கிடக்கும் குதிரையின் நகங்கள் பதம் பார்த்துவிடும். இதனால், அவ்வப்போது பஞ்சர் என்பது கார் வைத்திருப்பவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.

ஸ்டெப்னி

ஸ்டெப்னி

அப்போது கார் தயாரிப்பாளர்கள் ஸ்பேர் வீலை காருடன் வழங்குவதில்லை. எனவே, பஞ்சரால் அவதிப்பட்டு வந்த கார் உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக ஸ்பேர் வீலை உருவாக்கினர் இங்கிலாந்தை சேர்ந்த சகோதரர்கள் வால்டர் மற்றும் டாம் டேவிஸ்.

ஸ்பேர் வீல்

ஸ்பேர் வீல்

1904ம் ஆண்டு வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் ஸ்டெப்னி வீலை தனியாக உரிமையாளர்களிடம் விற்பனை செய்தனர். அவர்களது ஸ்பேர் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான் ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்.

 பிரபலம்

பிரபலம்

மோட்டார் வாகன உரிமையாளர்களிடம் ஸ்டெப்னி வீல் பிரபலமடைந்தது. காரின் முன்புற ஃபென்டரிலும், பக்கவாட்டில் இருந்த ஃபுட் போர்டிலும் ஸ்டெப்னி வீல்கள் பொருத்தப்பட்டன. பின்னர், கார் தயாரிப்பு நிறுவனங்களே ஸ்பேர் வீலை காருடன் சேர்த்து வழங்க துவங்கின. தாமஸ் பி ஜெஃப்ரி நிறுவனம்தான் முதன்முதலாக காருடன் ஸ்பேர் வீலை காருடன் வழங்கியது. ஆனால், அதற்கு ஒரு முட்டுக் கட்டை ஏற்பட்டது.

 ஸ்பேர் வீலுக்கு தடை

ஸ்பேர் வீலுக்கு தடை

இரண்டாம் உலகப் போரின்போது ரப்பருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக புதிய கார்களில் ஸ்பேர் வீலை வழங்குவதற்கு அமெரிக்க அரசு தடைவிதித்தது. இதேபோன்ற ஒரு தடை 1951ம் ஆண்டில் கொரிய போரின்போதும் அமெரிக்க அரசு விதித்தது.

இந்தியாவில்தான் ஸ்டெப்னி

இந்தியாவில்தான் ஸ்டெப்னி

அந்த சமயத்தில் இங்கிலாந்து ஆட்சியாளர்களின் கையில் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகள் இருந்ததால், ஸ்டெப்னி நிறுவனம் எளிதாக நுழைந்தது. அப்போதிலிருந்து இந்தியாவில் ஸ்பேர் வீல் ஸ்டெப்னியாகியது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் ஸ்பேர் வீலை ஸ்டெப்னி என்று அழைக்கும் வழக்கம் இப்போதும் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2014, 9:53 [IST]
English summary
Interesting facts about Stepney tyre. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+