ஒரேநேரத்தில் 8,500 கார்களை ஏற்றும் வசதி கொண்ட உலகின் பெரிய சரக்கு கப்பல்!

By Saravana

ஒரேநேரத்தில் 8,500 கார்களை ஏற்றிச் செல்லும் சரக்கு கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல்தான் உலகிலேயே அதிக கார்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது.

முழுக்க முழுக்க கார் மற்றும் டிரக் உள்ளிட்ட வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கப்பலுக்கு ஹோயேக் டார்க்கெட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இது குறித்த சில தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களையும் சுவாரஸ்யத் தகவல்களையும் காணலாம்.

சுற்றுச்சூழல் நண்பேன்டா!

சுற்றுச்சூழல் நண்பேன்டா!

இதைப் போன்ற பிற பிரம்மாண்ட கப்பல்களுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைவான புகையை வெளியிடும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த சரக்கு கப்பல் என்று தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு எடை

சரக்கு எடை

அதிகபட்சமாக 375 டன் எடையுடைய கார் அல்லது வாகனங்களை ஏற்றிச் செல்லலாம். பக்கவாட்டில் உள்ள மேடைகளில் 22 டன் எடையுடைய சரக்குகளை ஏற்றிச் செல்ல இயலும்.

வடிவம்

வடிவம்

200 மீட்டர் நீளமும், 36.5 மீட்டர் அகலமும் கொண்டது. 14 அடுக்குகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உட்புறத்தில் 71,400 சதர மீட்டர் இடவசதி இருக்கிறது. அதாவது, மிதக்கும் அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் போன்ற அமைப்பை உடையது. அதாவது, ஒவ்வொரு அடுக்கும் 2 கால் பந்தாட்ட மைதானங்களுக்கு சமமான நீள, அகலத்தை கெண்டது.

 வசதி

வசதி

இந்த கப்பலில் இரண்டு வழிகளில் கார்களை ஏற்றி, இறக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. பின்புறமாக இருக்கும் முக்கிய வழியின் மூலமாக கார் மட்டுமின்றி, 12 மீட்டர் அகலமும், 6.5 மீட்டர் உயரமும் கொண்ட மிகப்பெரிய டிரக் உள்ளிட்ட வாகனங்களையும் எளிதாக ஏற்றும் வகையிலான வாயில் அமைப்புடையது. பக்கவாட்டில் இருக்கும் வழி 6.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் அகலமும் கொண்ட வாகனங்களை ஏற்றி, இறக்க முடியும்.

அப்படியா...

அப்படியா...

இந்த கப்பலில் இருந்து கார்களை இறக்கி வரிசையாக நிறுத்தினால் 41 கிமீ தூரத்திற்கு அந்த வரிசை நீளும். அதிகபட்சமாக 8,500 கார்களை ஏற்றிச் செல்ல முடியும்.

கட்டுமான நிறுவனம்

கட்டுமான நிறுவனம்

பின்லாந்து நாட்டை சேர்ந்த டெல்டாமரைன் நிறுவனம் டிசைன் செய்து கொடுத்தது. சீனாவை சேர்ந்த ஜியாமென் கப்பல் கட்டும் தளத்தில் இந்த பிரம்மாண்ட கப்பல் கட்டப்பட்டது. மேலும், 5 கப்பல்களும் தற்போது இங்குதான் தயாராகி வருகின்றன.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த கப்பலில் 23 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 21 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்.

உரிமையாளர்

உரிமையாளர்

நார்வே நாட்டை சேர்ந்த ஹோயேக் ஆட்டோலைனர்ஸ் நிறுவனத்திற்காக இந்த சரக்கு கப்பல் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டில்தான் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஹோயேக் ஆட்டோலைனரிடம் மொத்தம் 52 சரக்கு கப்பல்கள் உள்ளன.

மேலும் 5 கப்பல்கள்

மேலும் 5 கப்பல்கள்

ஹோயேக் டார்க்கெட்டை தொடர்ந்து இதே வடிவமைப்பில், மேலும் 5 கார் ஏற்றிச் செல்லும் சரக்கு கப்பல்களை ஹோயேக் ஆட்டோலைனர்ஸ் நிறுவனம் ஆர்டர் செய்துள்ளது. அடுத்த 5 மாதங்களில் அந்த 5 பிரம்மாண்ட கப்பல்களும் ஹோயேக் ஆட்டோலைனர்ஸ் நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய சுவாரஸ்ய செய்திகள்

01. உலகின் டாப் 25 உல்லாச கப்பல்கள்...

02. உலகின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்....

03. சரக்கு கப்பல் போக்குவரத்தில் டாப் 10 நிறுவனங்கள்...

டிரைவ்ஸ்பார்க் சமூக வலைதள பக்கங்கள்

எமது ஃபேஸ்புக் பக்கம்...

எமது டுவிட்டர் பக்கம்...

Article Published On: Thursday, October 22, 2015, 10:33 [IST]
English summary
Hoegh Target is the biggest car and truck carrier in the world, with deck space of 71,400 square meters.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+