சென்னையில் இயக்கப்பட்ட உலகின் மிக பழமையான நீராவி ரயில் எஞ்சின்!

Written By:

உலகின் மிக பழமையான நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் நேற்று சென்னையில் இயக்கப்பட்டது. பாரம்பரிய பயணம் என்ற பெயரில் சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இந்த நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் பார்ப்போரை சிலிர்க்க வைத்தது. இந்த ரயில் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

சேவையில் இருக்கும் உலகின் மிகப்பழமையான நீராவி ரயில் எஞ்சின் என்ற பெருமை ஃபேரி குயின் என்ற எஞ்சினுக்கு உள்ளது. இந்த எஞ்சின் EIR-21 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. தலைநகர் டெல்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற இடத்திற்கு இரண்டு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த நிலையில், அதனுடன் தயாரிக்கப்பட்ட EIR-21 என்ற வரிசை எண் கொண்ட நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்தான் நேற்று சென்னையில் இயக்கப்பட்டது. 162 ஆண்டுகள் பழமையான இந்த நீராவி எஞ்சின் மீண்டும் இயக்கப்பட்டது ரயில் பிரியர்களை சிலிர்க்க வைத்தது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த ரயில் எஞ்சின் 1855ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் என்ற இடத்தில் தாம்சன் மற்றும் ஹெவிட்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர், கப்பல் மூலமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த EIR- 21 நீராவி எஞ்சின் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

1855ம் ஆண்டு இறுதியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுராவிற்கும், ரானேகஞ்ச் என்ற இடத்திற்கும் இடையில் இந்த ரயில் எஞ்சின் சேவையில் இருந்தது. 1909ம் ஆண்டு இந்த நீராவி ரயில் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயன்பாட்டுக்கு தகுந்ததல்ல என்ற முடிவுடன் ஓய்வு கொடுக்கப்பட்டது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

பின்னர், பீஹாரில் உள்ள ஜமால்பூர் லோகோ ஒர்க்ஷாப்பிலும், ஹவுராவிலிருந்து காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து இந்த நீராவி ரயில் எஞ்சினுக்கு சென்னை பெரம்பூர் ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் புத்துயிர் கொடுக்கும் பணிகள் நடந்து, மீண்டும் இயங்கும் நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த ரயிலுக்கான உதிரிபாகங்களை மிகவும் சிரத்தை எடுத்து தயாரித்து, மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர் பெரம்பூர் ரயில் எஞ்சின் தொழிற்சாலை ஊழியர்கள். தெற்கு ரயில்வே துறையின் மூத்த பொறியாளர்களில் ஒருவரான கார்மேலஸ் தலைமையிலான சிறப்பு பணியாளர் குழு இந்த ரயில் எஞ்சினை மேம்படுத்தி இருக்கின்றனர்.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

திருச்சி பொன்மலை ரயில் எஞ்சின் ஆலை நிபுணர்Kள் மற்றும் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை பொறியாளர்களும் இந்த மேம்படுத்தும் குழுவில் இணைந்து செயலாற்றியுள்ளனர். துருப்பிடித்த பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், ஏர் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த ரயிலில் ஒரு டன் நிலக்கரி நிரப்புதற்கான அறையும், தலா 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தொட்டிகளும் இருக்கின்றன. இந்த நீராவி ரயில் எஞ்சின் 40 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக 40 கிமீ வேகத்தில் செல்லும்.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இதன் சகோதரியாக குறிப்பிடப்படும் ஃபேரி குயின் ரயிலின் நீராவி எஞ்சினின் முக்கிய பாகங்கள் திருடிச் செல்லப்பட்டதால், அதன் இயக்கம் நின்றுபோனது. பின்னர், அந்த நீராவி எஞ்சினை பெரம்பூர் ரயில் எஞ்சின் ஆலை பணியாளர்கள்தான் புதுப்பித்து ஓடும் நிலைக்கு மேம்படுத்தினர். அந்த அனுபவத்தை வைத்தே இந்த EIR-21 நீராவி எஞ்சினையும் மேம்படுத்தி உள்ளனர்.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த ரயில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் பாரம்பரிய பயணம் என்ற பெயரில் குறிப்பிட்ட தூரம் இயக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது இயக்கப்படாமல், நேற்று இயக்கப்பட்டது.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த ரயிலை காண்பதற்காக ஏராளமானோர் எழும்பூர், கோடம்பாக்கம் இடையிலான ரயில் நிலையங்களிலும், ரயில் தடத்தின் ஓரத்திலும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரேயொரு பெட்டி இணைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில் பயணிகளுக்கு அனுமதி இல்லை. ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் பயணித்தனர்.

சென்னைவாசிகளை கண்களுக்கு விருந்தளித்த நீராவி எஞ்சின் ரயில்!

இந்த நீராவி ரயிலில் ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. தேசிய கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் வர்ணம் பூசப்பட்டு இருந்தது. 2013ம் ஆண்டிற்கு பின்னர் இந்த ரயில் நேற்று இயக்கப்பட்டதால், ரயில் நிலையங்களில் ஏராளமானோர் கூடி கண்டு ரசித்ததுடன், தங்களது மொபைல்போன்களில் பதிவு செய்து கொண்டனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About World's oldest working Steam Locomotive EIR - 21
Story first published: Monday, September 11, 2017, 16:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark