பதான்கோட்டில் தீவிரவாதிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவிய ஹெரோன் உளவு விமானம்!

By Saravana

பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு 6 விமானப்படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஹெரோன் ஆள் இல்லா விமானத்தின் பங்கும் மிகவும் மகத்தானதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், 2,000 ஏக்கரில் பரந்து விரிந்த பதான்கோட் விமானப்படை தளத்தின் பின்பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ஹெரோன் ஆள் இல்லா உளவு விமானம் மூலமாகத்தான் முதலில் கண்டறிந்துள்ளனர். இந்த ஹெரோன் உளவு விமானத்தின் சிறப்புகளை காணலாம்.

கண்டுபிடித்தது எப்படி?

கண்டுபிடித்தது எப்படி?

மனித உடலின் வெப்ப அளவை வைத்து, ஆள் நடமாட்டத்தை ஹெரோன் விமானம் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, பாதுகாப்புப் படையினர் உஷாரானார்கள்.

 தயாரிப்பு நாடு

தயாரிப்பு நாடு

ஹெரோன் ஆள் இல்லா உளவு விமானம் இஸ்ரேல் நாட்டு தயாரிப்பு. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாட்டு பாதுகாப்புப் படைகளில் சேவையாற்றி வருகிறது.

தானாக திரும்பி வரும்

தானாக திரும்பி வரும்

இதனை கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக வெகு எளிதாக இயக்க முடியும். ஒருவேளை, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டால், தானாகவே, விமானப்படை தளத்துக்கு வந்து தரையிறங்கிவிடும்.

தெர்மோகிராஃபிக் கேமரா

தெர்மோகிராஃபிக் கேமரா

இந்த உளவு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தெர்மோகிராஃபிக் கேமரா மூலமாக மனித நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும். மனித உடலின் வெப்ப அளவை வைத்து நடமாட்டத்தை கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்கும்.

 சிறப்பாக செயல்படும்

சிறப்பாக செயல்படும்

இந்த ஆள் இல்லா உளவு விமானத்தை மிக மோசமான வானிலைகளில் கூட இயக்க முடியும். அனைத்து கால நிலைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படும் என்பதும் இதன் தனிச்சிறப்புகளில் ஒன்று.

இதர பயன்பாடு

இதர பயன்பாடு

இந்திய விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளிலும், ஹெரோன் டிரோனின் பயன்பாடு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது.

பறக்கும் நேரம்

பறக்கும் நேரம்

சோதனையின்போது அதிகபட்சமாக 52 மணிநேரம் பறந்து சாதனை புரிந்தது. அதிகபட்சமாக 10.5 கிமீ உயரம் வரை பறக்கும்.

 வடிவம்

வடிவம்

ஹெரோன் டிரோன் 8.5 மீட்டர் நீளமும், 16.60மீட்டர் அகலமும் கொண்டது. அதிகபட்சமாக 350 கிமீ தூரம் வரை செலுத்த முடியும்.

வேகம்

வேகம்

மணிக்கு 207 கிமீ வேகம் வரை பறக்கும். இந்த ஆள் இல்லா உளவு விமானம் 250 கிலோ எடை வரை சுமந்து செல்லும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு ஹெரோன் டிரோனின் விலை மதிப்பு 10 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் ஹெரோன்

சூப்பர் ஹெரோன்

ஹெரோன் ஆள் இல்லா உளவு விமானத்தின் மேம்பட்ட மாடலாக சூப்பர் ஹெரோன் அல்லது ஐஏஐ ஐயிட்டன் என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு டன் வரையிலான வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை பொருத்தி தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 5, 2016, 12:46 [IST]
English summary
IAF's Heron-1 played a crucial part in search operations in recent Pathankot airbase station terrorist attack. Here are given some interesting bits about Heron drone.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+