செங்குத்தாக மேலே எழும்பும் இந்திய கடற்படையின் போர் விமானம்!

Written By:

தற்போது உலக அளவில் செங்குத்தாக மேலே எழும்பி பறக்கும் திறன் கொண்ட போர் விமானத்தை இயக்கி வரும் ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால், அந்த பெருமை இன்னும் சில நாட்களுக்குத்தான். ஆம், இந்திய கடற்படையில் சேவையாற்றி வரும் செங்குத்தாக மேலே எழும்பும் திறன் படைத்த சீ ஹாரியர் போர் விமானத்திற்கு ஓய்வு கொடுக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.

பராமரிப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருதியும், மேம்படுத்த இயலாத காரணங்களால் இந்த சீ ஹாரியர் விமானங்களை சேவையிலிருந்து ஓய்வு கொடுக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இந்த விமானத்தின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

இங்கிலாந்து தயாரிப்பு

இங்கிலாந்து தயாரிப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹாக்கர் சிட்லே நிறுவனம் இந்த சீ ஹாரியர் விமானத்தை தயாரித்து. 1978ம் ஆண்டு இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.

சேவை

சேவை

முதலில் ராயல் நேவி என்று அழைக்கப்படும் இங்கிலாந்து கடற்படையில்தான் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், தற்போதைய நிலையில், இந்தியா மட்டுமே இந்த விமானங்களை இதுவரை இயக்கியது.

கடற்படைக்கு உகந்தது

கடற்படைக்கு உகந்தது

இந்த விமானங்கள் பெரும்பாலும் நடுத்தர வகை விமானம் தாங்கி கப்பல்களில் வைத்து இயக்கும் வகையில் சிறப்பை பெற்றிருந்தது. அதாவது, குறைந்த தூர டெக்கிலேயே டேக ஆஃப் செய்யவும், தரையிறக்கவும் முடியும். இதனால், கடற்படையில் சேர்க்கப்பட்டன.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த போர் விமானத்தை விமானம் தாங்கி போர்க்கப்பல்களிலிருந்து செங்குத்தாக மேலே எழும்பவும், தரையிறங்கவும் முடியும். தற்போது உலகிலேயே இந்த வகை போர் விமானங்களை இயக்கும் ஒரே நாடு இந்தியாதான். ஆனால், இங்கிலாந்தில் பயிற்சிக்காக பயன்பாட்டில் உள்ளது.

பிரத்யேக அம்சம்

பிரத்யேக அம்சம்

இந்த விமானத்தின் எக்சாஸ்ட் குழாய் வடிவமைப்பு பிரத்யேகமானது. விமானத்தை சாதாரணமாக ஓடி மேலே எழும்பும்போது இதன் எக்சாஸ்ட் குழாய் பக்கவாட்டிலும், செங்குத்தாக மேலே எழும்பும்போது இந்த எக்சாஸ்ட் குழாயை கீழ் நோக்கியும் திருப்ப முடியும்.

மொத்த விமானங்கள்

மொத்த விமானங்கள்

1983ம் ஆண்டு மூன்று சீ ஹாரியர் விமானங்களை இந்தியா வாங்கியது. சீ ஹாக் விமானங்களுக்கு மாற்றாக இது சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் வாயிலாக 30 சீ ஹாரியர் போர் விமானங்களை இந்தியா வாங்கி சேர்த்தது.

மாடல்கள்

மாடல்கள்

அவ்வப்போது சீ ஹாரியர் விமானங்களை மேம்படுத்தி வந்தது. இதில், 25 விமானங்கள் ஒற்றை இருக்கையுடன் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சங்களையும், 5 விமானங்கள் இரட்டை இருக்கையுடன் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது.

பயன்பாடு

பயன்பாடு

ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விராத் கப்பல்களில் இந்த விமானங்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஐஎன்எஸ் விராத் ஓய்வுபெறுவதையடுத்து, இந்த விமானங்களும் ஓய்வு பெற இருக்கின்றன.

விபத்து

விபத்து

மொத்தம் வாங்கப்பட்ட 30 சீ ஹாரியர் போர் விமானங்களில் பெரும்பாலான விமானங்கள் விபத்தில் சிக்கி, நொறுங்கிவிட்டன. இதனால், தற்போது 12 சீ ஹாரியர் விமானங்கள் மட்டுமே இருக்கின்றன. சீ ஹாரியர் விமான விபத்துக்களால் 17 வீரர்களை கடற்படை இழந்துள்ளது. அனைத்து விமானங்களுமே பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு

ஓய்வு

வரும் 11ந் தேதியுடன் இந்திய கடற்படையிலிருந்து சீ ஹாரியர் போர் விமானங்களை விலக்கிக் கொள்ள இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அதிக பராமரிப்பு, நவீனப்படுத்துவதில் உள்ல சிரமங்களை கருதி, இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதன்மை பணி

முதன்மை பணி

விமானதாங்கி கப்பல்களிலிருந்து சென்று வான் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், தரை தாக்குதல்களிலும் ஈடுபடும் வல்லமை கொண்டது. மேலும், விமானம் தாங்கி கப்பல்களின் பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

 வடிவம்

வடிவம்

இந்த விமானம் 14.2 மீட்டர் நீளமும், 7.6 மீட்டர் அகலமும், 3.71 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் பீகாசஸ் டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக 1,182 கிமீ வேகத்தில் பறக்கும். 1,000 கிமீ சுற்றளவுக்கு தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். அதிகபட்மாக 3,600 கிமீ தூரம் வரை பறக்கும் வல்லமை கொண்டது.

 ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த விமானத்தின் அடிப்பாகத்தில் இரண்டு 30 மிமீ ADEN Cannon துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் 130 ரவுண்டுகள் சுடும் வல்லமை கொண்டவை. இந்த விமானத்தி்ல 18 SNEB 68மிமீ ராக்கெட்டுகளை பொருத்த முடியும்.

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

இந்த போர் விமானத்தில் வானிலிருந்து வான் இலக்கை தாக்கக்கூடிய, ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் பொருத்த முடியும். 3 கிலோ முதல் 14 கிலோ எடையுடைய வெடிகுண்டுகளையும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும்.

வெளிநாடுகள் வியப்பு

வெளிநாடுகள் வியப்பு

வெளிநாடுகளுடன் கூட்டு போர் பயிற்சிகளின்போது இந்த விமானங்களின் செயல்திறனை கண்டு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் கடற்படையினர் ஆச்சரியம் தெரிவித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புதிய ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்கப்பல் பற்றிய தகவல்கள்!

இந்தியாவின் புதிய ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்கப்பல் பற்றிய தகவல்கள்!

Source: Wikipedia 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts Of Sea Harrier Fighter Jet.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark