டால்கோ ரயிலை இழுத்துச் சென்ற WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்!

By Saravana

மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட டால்கோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் டால்கோ ரயில் பெட்டிகளை இஸாத்நகர் ரயில் பணிமனையில் இணைக்கும் பணிகள் முடிவடைந்ததால், திட்டமிட்டதற்கு இரு நாள் முன்பாகவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

டால்கோ ரயிலை இந்தியாவின் WDP-4 டீசல் எஞ்சினை இணைத்து முதல் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டால்கோ ரயிலில் இணைக்கப்பட்ட WDP-4 ரயில் எஞ்சினின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இஸாத் நகர் டெப்போவிலிருந்து புறப்பட்ட டால்கோ ரயில் எதிர்பார்த்தபடியே, மணிக்கு 115 கிமீ வேகம் வரை இயக்கி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்த சோதனை ஓட்டங்களின்போதுதான் இந்த ரயில் இந்திய நிலைகளிலும், ஏற்கனவே உள்ள தண்டவாள அமைப்புகளில் எவ்வாறு செல்கிறது என்பது தெரிய வரும்.

அமெரிக்க தயாரிப்பு

அமெரிக்க தயாரிப்பு

WDP-4 டீசல் எஞ்சின் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் EMD நிறுவனத்தின் தயாரிப்பு. 2001ம் ஆண்டு சில எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர், உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டன.

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

2012ம் ஆண்டு உற்பத்தி உரிமம் பெறப்பட்டு இந்தியாவிலேயே முதல் WDP-4 எஞ்சின் தயாரிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரயில் எஞ்சினுக்கான மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளை சீமென்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த டீசல் எஞ்சினில் இரண்டு முக்கிய குறைபாடுகள் கூறப்படுகிறது.

 குறைபாடுகள்

குறைபாடுகள்

ஒருபுறம் மட்டுமே ஓட்டுனருக்கான காக்பிட் இருப்பதன் மூலமாக, மற்றொரு புறத்தை முன்னால் வைத்து செலுத்தும்போது பார்வை குறைபாடு ஏற்படுகிறது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டதாம்.

உந்துசக்தி திறன்

உந்துசக்தி திறன்

இந்த எஞ்சினில், 6 ஆக்சில்கள் இருந்தும் 4 டிராக்ஷன் மோட்டார்கள் மட்டுமே இருப்பதும் போதிய உந்து சக்தி கிடைக்காத நிலை ஏற்பட்டு வழுக்குவதுண்டு. குறைந்தபட்சம் 6 டிராக்ஷன் மோட்டார்கள் இருந்தால் சிறப்பன உந்துசக்தியை வழங்கும். அதேநேரத்தில், தரைப்பிடிப்புத் திறன் குறைந்து வழுக்குவதை தவிர்ப்பதற்காக கம்ப்யூட்டர் கட்டுப்பாடு மூலமாக கூடுதல் சக்தி சக்கரங்களுக்கு செலுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பமும் உள்ளது.

புதிய மாடல்

புதிய மாடல்

டால்கோ ரயிலின் சோதனை ஓட்டத்தின்போது, WDP-4 டீசல் எஞ்சினின் EMD GT46PAC என்ற மாடல் பயன்படுத்தப்பட்டது. WDG-4 டீசல் எஞ்சினின் சிறப்பம்சங்களை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகள் ரயிலுக்கான சிறப்பம்சங்களை பெற்றது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த டீசல் ரயில் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் டிராக்ஷன் மோட்டார்கள் சக்தியை சீராக வெளிக்கொணர்வதை மைக்ரோபிராசர் கன்ட்ரோல் யூனிட் கட்டுப்படுத்துகிறது. பழுதுகள் குறித்து கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள்

அதிகபட்ச சக்தி

அதிகபட்ச சக்தி

இந்த ரயிலில் இருக்கும் V16 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 4,000 எச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பிரத்யேகமான எஞ்சின் சப்தம் விமானத்தை போன்று இருப்பதாக ரயில் துறை நிபுணர்கள் சிலாகித்து கூறுவதுண்டு.

மாசு குறைவு

மாசு குறைவு

இந்த 2 ஸ்ட்ரோக் எஞ்சின் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாகவும், குறைவான மாசுவை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் எஞ்சினில் 6,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது.

வேகம்

வேகம்

இந்த ரயில் எஞ்சின் 24 ரயில் பெட்டிகளை இணைக்கும்போது மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், 8 ரயில் பெட்டிகளை இணைக்கும்போது மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். எனவே, டால்கோ ரயிலின் முதல் கட்ட சோதனை ஓட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

 பணிமனைகள்

பணிமனைகள்

நாடு முழுவதும் உள்ள ஒன்பது ரயில் எஞ்சின் பணிமனைகளில் இந்த ரயில் எஞ்சின் பராமரிக்கப்படுகிறது. ஹூப்ளி, கிருஷ்ணாராஜபுரம், பொன்மலை, இட்டார்சி, துக்ளகாபாத், கூட்டி, சிலிகுரி, புனே, இஸாத்நகர் ஆகிய பணிமனைகளிலிருந்து இயக்கப்படுகிறது.

முதல் எஞ்சின்

முதல் எஞ்சின்

முதல் WDP-4 ரயில் எஞ்சின் சென்னை- ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயன்படுத்தப்பட்டது. இதுதவிர, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

டீசல் ரயில் எஞ்சின்களில் உள்ள ராட்சத டீசல் எஞ்சின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர், அந்த மின்சாரத்தை பயன்படுத்தி, சக்கரங்களில் உள்ள டிராக்ஷன் மோட்டார்கள் என குறிப்பிடப்படும் மின் மோட்டார்கள்தான் ரயிலை செலுத்துவதற்கு பயன்படுகிறது. எனவே, இது ஒரு நடமாடும் ராட்சத மின் உற்பத்தி நிலையம் போன்றே செயல்படுகிறது.

 அடுத்த சோதனை ஓட்டம்

அடுத்த சோதனை ஓட்டம்

அடுத்த கட்டமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்கிப் பார்க்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. டெல்லி- ஆக்ரா வழித்தடத்தில் உள்ள பல்வால்- மதுரா இடையில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர்த்து, டெல்லி- மும்பை வழித்தடத்தில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் மூன்றாவது கட்ட சோதனை ஓட்டம் நடக்கிறது. அப்போது, WAP-4 மின்சார ரயில் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts Of WDP-4 Locomotive.
Story first published: Saturday, May 28, 2016, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X