புல்லட் ரயில்கள் பற்றி சுவாரஸ்யமான தொழில்நுட்பத் தகவல்கள்!

By Saravana

உலகின் பல நாடுகள் புல்லட் ரயிலை விட்டு பல காலங்கள் ஆகிவிட்ட நிலையில், நம் நாட்டில் இப்போதுதான் புல்லட் ரயில்கள் இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

இந்தநிலையில், புல்லட் ரயிலின் சில தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. பிரேக் சிஸ்டம்

01. பிரேக் சிஸ்டம்

ஜப்பானில் ஓடும் சிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிலநடுக்கம் வந்தால் உடனடியாக, தானியங்கி முறையில் நின்று விடும் பிரேக் சிஸ்டம் கொண்டது. அவசர நிலைகளில் கூடுதலாக 15 சதவீதம் பிரேக் ஆற்றல் செலுத்தப்பட்டு வழக்கத்தைவிட 20 சதவீதம் குறைவான தூரத்திலேயே ரயில் நின்றுவிடும். இதனை ஆட்டோமேட்டிக் ட்ரெயின் கன்ட்ரோல் என்று குறிப்பிடுகின்றனர்.

 02. தானியங்கி வேகக் கட்டுப்பாடு

02. தானியங்கி வேகக் கட்டுப்பாடு

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜப்பானின் சிங்கன்சென் புல்லட் ரயில்களில், வழித்தடத்திற்கு தகுந்தவாறு வேகத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் தொழில்நுட்பமும் இருக்கிறது. இது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

03. தனி எஞ்சின் இல்லை

03. தனி எஞ்சின் இல்லை

புல்லட் ரயில்களில் ஒவ்வொரு பெட்டிகளின் கீழ்பாகத்தில், மின்சாரத்தில் இயங்கும் டிராக்ஷன் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. 32 மோட்டார்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. அதுநேரடியாக, ஆக்சில்கள் வழியாக சக்கரங்களுக்கு நேரடியாக சக்தியை அளிக்கும். இதனால், உடனடி பிக்கப் கிடைப்பதுடன், தனியாக எஞ்சின் சேர்ப்பதும் தவிர்க்கப்படுகிறது. பெட்டிகளிலும் அதிக இடவசதியை பெற முடியும்.

04. பவர்

04. பவர்

புல்லட் ரயிலில் ஒவ்வொரு டிராக்ஷன் மோட்டாரும் அதிகபட்சமாக 800 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். ஒரு புல்லட் ரயிலில் இருக்கும் மோட்டார்களின் மொத்த சக்தியானது 19 மெகாவாட் சக்தியை வெளிப்படுத்தும்.

05. ஓட்டுனர்

05. ஓட்டுனர்

நம்மூர் மின்சார ரயில் போலவே, ஒரேயொரு ஓட்டுனர் மூலமாக புல்லட் ரயிலை இயக்கலாம். மேலும், சிறிய அறைதான் ஓட்டுனருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதி அனைத்தும் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இருபுறத்திலும் ஓட்டுனர் அறை இருப்பதால், எஞ்சினை மாற்றும் அவசியமும் இல்லை.

 06. பெட்டிகள்

06. பெட்டிகள்

புல்லட் ரயில்களில் 10 முதல் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் புல்லட் ரயில்கள் கால் கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

 07. எடை

07. எடை

ஒவ்வொரு ரயிலிலும் அதிகபட்சமாக 1,200 பேர் வரை பயணிக்க முடியும். பயணிகள் எடை, பொருட்கள் எடை சேர்த்து ஒவ்வொரு ரயிலும் 1,000 டன் எடை கொண்டதாக இருக்கும்.

08. பிரேக் திறன்

08. பிரேக் திறன்

அதிகபட்ச வேகத்தில் இருந்து புல்லட் ரயில் நிற்பதற்கு 3.86 கிமீ தூரம் தேவைப்படும்.

09. வளைவுகள்

09. வளைவுகள்

அதிவேக ரயில்களுக்கான பாதையில் அதிக வளைவுகள் இருக்கக்கூடாது என்பதும் முக்கியமான பாதுகாப்பு விஷயம். 200 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களுக்கு தண்டவாளத்தின் அரைவட்ட வளைவு 4.5 கிமீ.,க்கு மேலாகவும், அதற்கு மேல் அல்லது 300 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்களுக்கு வளைவின் அரை வட்டம் 6.9 கிமீ தூரத்திற்கு மேலானதாகவும் இருக்க வேண்டும்.

 10. தாமதமா?

10. தாமதமா?

ஜப்பானில் ஓடும் புல்லட் ரயில்கள் வேகத்தில் மட்டுமல்ல, நேரத்தை கடைபிடிப்பதிலும் கில்லாடிகள். அதிகபட்சமாக 36 வினாடிகள் மட்டுமே தாமதமாக வருமாம். அந்தளவுக்கு தொழில்நுட்பத்தில் கில்லியாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 19, 2015, 13:19 [IST]
English summary
Interesting Technical Details Of Bullet Trains.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+