பிரதமர் மோடியின் விமான பயணமும், சுவாரஸ்யங்களும்... !!

Written By:

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அடிக்கடி விமானத்தில் பிரதமர் மோடி பறப்பது தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

ஆனால், உண்மையில் பிரதமர் மோடி விமானத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் பின்பற்றப்படும் சில சுவாரஸ்ய விதிமுறைகள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஏர் இந்தியா ஒன்

ஏர் இந்தியா ஒன்

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மற்றும் துணைக் குடியரசு தலைவர் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக விமானத்தை ஏர் இந்தியா ஒன் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் போன்றே சகல வசதிகளும் நிறைந்த அதிகாரப்பூர்வ விமானம் இது.

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம்

இந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகள் இந்திய விமானப்படையை சேர்ந்தவர்கள். விமானத்தை வழங்குவதும், அதனை பராமரிக்கும் பொறுப்பும் ஏர் இந்தியா நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

பறக்கும் பிரதமர் அலுவலகம்

பறக்கும் பிரதமர் அலுவலகம்

இந்த ஏர் இந்தியா ஒன் விமானமானது, பறக்கும் பிரதமர் அலுவலகமாகவே குறிப்பிடலாம். பிரதமர் அலுவலகத்தில் என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ, அதற்கு இணையான பணிகள், கூட்டங்களை இந்த விமானத்தில் செய்ய முடியும். ஆனால், மோடி பிரதமராக பதவியேற்ற பின் பல சம்பிரதாய நடைமுறைகள் இந்த விமானத்தில் மாறிவிட்டதாம். அவற்றை தொடர்ந்து காணலாம்.

மதுவுக்கு அனுமதியில்லை

மதுவுக்கு அனுமதியில்லை

ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பிரதமர் மற்றும் அவருடன் பயணிப்பவர்களுக்கு மது வழங்கப்படுவதில்லை. ஆனால், அதற்கு முன் இந்த விமானத்தில் உள்ள பாரில் மது பரிமாறும் வழக்கம் இருந்தது. மேலும், உடன் செல்லும் 30 பத்திரிக்கையாளர்கள் வரை மது வழங்கும் நடைமுறை இருந்ததாம்.

நோ ரிலாக்ஸ்...

நோ ரிலாக்ஸ்...

பிரதமருடன் பயணிக்கும் அதிகாரிகள் முன்பு ரிலாக்ஸ் செய்து கொள்வதை வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த வழக்கமும் மாறிவிட்டது. பிரதமர் சுற்றுப்பயணத்தின்போது தேவைப்படும் கோப்புகளை தயாரிப்பதிலும், அப்படி இல்லையென்றால் தூங்கி பொழுதை கழிக்க வேண்டிய நிலை தற்போது அதிகாரிகளுக்கு உள்ளது.

 தூங்குவதில்லை

தூங்குவதில்லை

இந்த ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்து பிரதமர் தூங்குவதற்காக தனி படுக்கையறை உள்ளது. விமானத்திலேயே நீண்ட நேரம் பயணிப்பதால், பிரதமர் தூங்குவதற்காக இந்த ஏற்பாடு. மேலும், பிற நாடுகளுக்கு செல்லும்போது அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், விமானத்தில் ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால்...

பிரதமரின் வழக்கம்

பிரதமரின் வழக்கம்

பிரதமர் மோடி விமானத்தில் தூங்குவதை பெரும்பாலும் விரும்புவதில்லையாம். ஆம், சமீபத்தில் பன்னாட்டு சுற்றுப்பயணத்தின்போது பெரும்பாலான நேரம் வரை அவர் தூங்காமல் இருந்ததாக பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 சைவ உணவு

சைவ உணவு

பிரதமர் மோடி சைவம். அதுவும் மிக எளிமையான சைவ உணவையே விரும்புவாராம். விரத நாட்களில் விரதம் முடிந்தவுடன் பழங்களை மட்டுமே சாப்பிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காதி உடைகள்

காதி உடைகள்

ஏர் இந்தியா ஒன் விமானத்தின் பணியாளர்களுக்கு விரைவில் காதி உடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பெண் பணியாளர்களுக்கு பட்டுப்புடவையும், ஆண் பணியாளர்களுக்கு ஜோத்புரி கோட், பேண்ட் கொடுக்கப்பட உள்ளதாம்.

விமான மாடல்

விமான மாடல்

பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக இந்த ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படும் விசேஷ விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு போயிங் 747-400 விமானங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஒன்று மாற்று விமானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானங்கள் இரண்டடுக்கு கொண்டது.

மூன்று பிரிவுகள்

மூன்று பிரிவுகள்

இந்த விமானம் மூன்று பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் செல்வதற்கு முதல் வகுப்பு படுக்கைகளும், கீழ் தளத்தில் பிரதமருக்கான படுக்கையறையும், பின்புறத்தில் பாதுகாப்புப் படையினர், பணியாளர்களுக்கான இருக்கைகளும் உள்ளன. இந்த விமானத்தில் பத்திரிக்கையாளர்களுக்காக 34 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் உண்டு.

பைலட் குழு

பைலட் குழு

ஏர் இந்தியா ஒன் விமானங்களை இயக்குவதற்காக விசேஷ பயிற்சியளிக்கப்பட்ட 8 பைலட்டுகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, விமான பணியாளர்கள் குழுவும் தயார் நிலையில் இருப்பர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

விமான பாதுகாப்பு தேசிய சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்படும் தண்ணீர், பெட்ரோல் ஆகியவை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

போர் விமானத்தை போன்று...

போர் விமானத்தை போன்று...

இந்த விமானத்தில் ஏவுகணைகள் தாக்க வருவதை எச்சரிக்கும் கருவிகள், ஏவுகணைகளின் கண்ணில் மண்ணை தூவி திசை மாற்றும் வெப்ப உமிழ்வு கருவிகள் உள்ளன. பிரதமரின் படுக்கையறைக்கு வெளியே செயற்கைகோள் தொலைபேசி வசதியும் உள்ளது.

பயண தூரம்

பயண தூரம்

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 13,450 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும். மணிக்கு 988 கிமீ வேகத்தில் செல்லும்.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things About Air India One Aircraft.
Story first published: Thursday, May 5, 2016, 11:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark