ஏழை பங்காளன்... அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்தியோதயா என்ற மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

கடந்த 2016ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்பதிவு இல்லா அதிவிரைவு ரயில் சேவையாக இதனை நாட்டிற்கு அர்ப்பணிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

கூட்ட நெரிசல் உள்ள முக்கிய வழித்தடங்களில் இந்த மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

மார்ச் 5ந் தேதி முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 7[இன்று], மார்ச் 12, 14ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு கும்பகோணம் வழியாக மெயின் லைனில் இயக்கப்படும் இந்த ரயில் இரவு 10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

அதேபோன்று, மார்ச் 6 முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 8, 13, 15ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடையும். மார்ச் 15ந் தேதிக்கு பின்னர் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.

இந்த ரயிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இருப்பதால், பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும். பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி தகவல் பலகைகள், ரயிலின் வேகம் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து தெரிவிக்கும் எல்இடி தகவல் பலகைகள் என பல நவீன எக்ஸ்பிரஸ் ரயில்களோடு போட்டி போடுகிறது.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன எல்எச்பி பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தை வழங்குவதுடன், சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பையும் இந்த ரயில் பெட்டி பெற்றிருக்கிறது.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

இந்த ரயிலில் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். தாம்பரம்- செங்கோட்டை இடையில் 16 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

தாம்பரம் - செங்கோட்டை இடையே இந்த ரயிலில் பயணிப்பதற்கு ரூ.200 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் ரூ.650 வரை கட்டணமாகவும், ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலிவு கட்டண அதிவேக ரயில்கள் தென்மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

தாம்பரம் செங்கோட்டை இடையிலான இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தவிர்த்து, தாம்பரம் - திருநெல்வேலி இடையில் மற்றொரு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் சொகுசு ரயில்களில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

நட்சத்திர விடுதிகளில் இருப்பது போன்ற வசதிகளுடன் பல சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வேத் துறை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் ஓர் இரவு பயணிப்பதற்கு லட்சங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த சிறப்பு சொகுசு ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். இந்த ரயில்களில் ரெஸ்டாரண்ட், தனி படுக்கை அறை, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், உபசரணைகளும் நடத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கின்றன.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

இந்த சுற்றுலா ரயில்களில் பயணிப்பதற்கு வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த சுற்றுலா ரயில்களில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. மேலும், கட்டணம் அதிகம் இருப்பதால், பயணிகள் மத்தியிலும் அதிக வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு இந்திய ரயில்வேத் துறை முடிவு செய்தது. அதன்படி, சுற்றுலா ரயில்களில் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

சுற்றுலாவை இணைந்து நடத்தும் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் தொகையை இந்திய ரயில்வேத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

பேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சாரியாட், மஹாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி மற்றும் ராயல் ஓரியண்ட் ஆகிய சுற்றுலா ரயில்களில் ஏழு நாட்கள் கொண்ட சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூ.7.56 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

ஆனால், இனி ரூ.3.63 லட்சமாக கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்னமும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

இதுவும் மிக அதிகம்தான். குழுவாக வருவோர் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு கட்டணத்தை வெகுவாக குறைத்தால், இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

சுற்றுலா ரயில்கள் மட்டுமின்றி, சலூன் என்று குறிப்பிடப்படும் சொகுசு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயன்படுத்துவதற்கும் விசேஷ திட்டங்களை இந்திய ரயில்வேத் துறை வழங்குகிறது. இந்த சலூன் ரயில் பெட்டிகளில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகள் இருக்கும். இந்த பெட்டிகளில் இரண்டு குடும்பத்தினர் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!

அதேநேரத்தில், இந்த சலூன் பெட்டிகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் வழக்கமான ரயில்களில் மட்டுமே இணைக்க முடியும். எனவே, ஓர் இரவு பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things About Antyodaya Express.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark