சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

சந்திராயன்-2 விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட்ட லேண்டர் சாதனம் நாளை அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதன்மூலமாக இஸ்ரோ அமைப்பு உலக அரங்கில் புதிய வரலாறை எழுத இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனங்கள் அனைத்துமே வட துருவப் பகுதியில்தான் தரை இறங்கி உள்ளன. ஆனால், உலக விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக சந்திராயன்-2 திட்டத்தின் மூலமாக நிலவின் தென்துருவ பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்த இருக்கிறது இஸ்ரோ அமைப்பு.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

இதற்காக, கடந்த ஜூலை மாதம் 22ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் பல்வேறு சவால்களை கடந்து நிலவில் தரை இறங்குவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. புவி வட்டப் பாதையில் இருந்து 5 முறை வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14ந் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகிய சந்திராயன் 2 விண்கலம் விலகி, கடந்த மாதம் 20ந் தேதி நிலவு வட்டப்பாதையை அடைந்தது.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

இதைத்தொடர்ந்து, நிலவை மேற்பரப்பை நெருங்கும் வகையில் சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2ந் தேதி, சந்திராயன்-2 விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. இந்த நிலையில், நிலவுக்கு 30 கிமீ உயரத்தில் வரும்போது, விக்ரம் என்ற பெயரிலான லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க உள்ளது.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

இந்த நிலையில், இறுதிக்கட்டமாக, நாளை அதிகாலை 1.40 மணி முதல் 1.55 மணிக்குள்ளாக நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள மான்சினஸ்- சி மற்றும் சிம்பிலியஸ்-எஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இரண்டு பெரிய பள்ளங்களுக்கு நடுவில் விக்ரம் என்ற அந்த லேண்டர் சாதனம் 70 டிகிரி கோணத்தில் தரையிறக்கப்படும்.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

தரையிறங்கும்போது விக்ரம் லேண்டர் கருவியானது வினாடிக்கு 7 கிமீ அல்லது மணிக்கு 21,600 கிமீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கும். அதாவது, சாதாரண விமானங்களை விட 40 மடங்கு கூடுதல் வேகத்தில் அது பயணிக்கும். அதேவேளையில், நிலவை நெருங்கும் தருணத்தில், தனது வேகத்தை வினாடிக்கு 2 மீட்டர் அல்லது மணிக்கு 7 கிமீ வேகத்திற்கு குறைத்துக் கொள்ளும்.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

இதன்மூலமாக, மிக பாதுகாப்பாக விக்ரம் என்ற அந்த லேண்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட உள்ளது. லேண்டரின் வேகத்தை குறைப்பதுதான் மிக அதிக சவால்களை கொண்ட விண்வெளி ஆராய்ச்சிப் பணியாக கருதப்படுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உலகமே ஆவலாக உற்று நோக்கி வருகிறது.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

விக்ரம் என்ற பெயரிடப்பட்ட அந்த லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய பின்னர், நாளை அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள், அதில் உள்ள பிரக்யான் என்ற கருவி வெளிவரும். இந்த கருவி நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று நிலவின் மேற்பரப்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கிறது.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆதாரம், பனிக்கட்டிகளின் தடிமன், நிலநடுக்க வாய்ப்பு, கனிம வளங்கள், தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பிரக்யான் கருவி மொத்தம் 15 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்டது. அதற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்கும்.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

இந்த சவாலான சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ அமைப்பு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற இருக்கிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் நிலவு ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை விட இது 20 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 2 ... ஆகாயத்தில் புதிய வரலாறு எழுதப்போகும் இஸ்ரோ!

அமெரிக்கா, சீனா மற்றும் ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனத்தை தரை இறக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற இருக்கிறது. அத்துடன், இந்த பெருமைமிகு திட்டத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட பல்வேறு தமிழ் விஞ்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2019, 12:10 [IST]
English summary
India's second mission to the moon, Chandrayaan-2, is scheduled to make a soft landing on the surface of the moon between 1:30 am to 2:30 am on Saturday, 7th September 2019, the Indian Space Research Organization (ISRO) said.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+