அக்டோபரில் சேவைக்கு வரும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்: படங்களுடன் தகவல்கள்!

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மூன்று புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதில், ஹம்சாபர் என்று பெயரிடப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட ரயில் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரயில்வே துறையின் சேவையை புதிய கட்டத்துக்கு இழுத்துச் செல்ல இருக்கும் இந்த ஹம்சாபர் ரயில் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், இந்த ரயிலின் படங்கள் மற்றும் தகவல்களை ரயில்வே துறை வெளியிட்டு இருக்கிறது. அவற்றை இந்த செய்தித் தொகுப்பில் தொடர்ந்து காணலாம்.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன், மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ரயிலாக அறிமுகமாகிறது.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி போன்று வெளிப்புறம் பிரத்யேக வண்ணம் கொண்ட ரயில் பெட்டிகளுடன் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிறது.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

இந்த ரயிலின் உட்புறம் மிகவும் சிறப்பான வசதிகளுடன், தரமான பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படுக்கைகள் மிகவும் சொகுசாகவும், மேல் உள்ள படுக்கைகளுக்கு ஏறி, இறங்குவதற்கு எளிதாக இருக்கும் வகையில் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பெட்டி, மொபைல்போன் சார்ஜர்களும் இந்த ரயில் பெட்டிகளில் உண்டு. மேலும், விருப்பத்திற்கு தகுந்தவாறு பயணிகள் பல இந்திய உணவு வகைகளை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

அடுத்து வரும் ரயில் நிலையம் பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக ஜிபிஎஸ் வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னணு தகவல் பலகையும் பொருத்தப்பட்டிருக்கும். பார்வையற்றோருக்கு ஏதுவாக பிரெய்லி முறையிலான தகவல் பலகையும் இந்த பெட்டிகளில் உண்டு.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

ரயில் பெட்டிக்குள் கெட்ட வாடை வருவதை தவிர்ப்பதற்கான கட்டுப்பாட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. பயணிகளுக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் விதத்தில் சிசிடிவி கேமரா, தீப்பிடிப்பதை கண்டறிந்து எச்சரிக்கும் கருவிகளும் உள்ளன.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

இந்த ரயிலில் பயோ டாய்லெட் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மனிதக் கழிவுகள் தண்டவாளத்தில் கொட்டுவது தவிர்க்கப்படும்.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

இதர எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணக் கட்டணம் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தகவல்கள்!

மொத்தத்தில் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகளுக்கு புதுவிதமான பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபரில் வரும் ஹம்சாபர் சொகுசு ரயில்: படங்களுடன் விசேஷ தக

ஆன்லைனில் சில க்ளிக்குகளில் கார் இன்ஸ்யூரன்ஸ் செய்ய வேண்டுமா?

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2016, 14:52 [IST]
English summary
Interesting Things About Humsafar Express Train. Read in Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+