வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் ஒரு ரகசிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் சீன அதிபரை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை தயாரித்து அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில், பதட்டத்தை தணிக்கும் விதத்தில் அண்மையில் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்பாக ரகசிய கவச ரயிலில் சீனா சென்று, அந்நாட்டு அதிபரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் மீண்டும் சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜிங் பின்னை சந்தித்துள்ளார் கிம் ஜாங் உன். விமானப் பயணத்தை இதுவரை தவிர்த்து வந்த கிம் ஜாங் உன், முதல்முறையாக தனது சீக்ரெட் விமானத்தில் சீனாவுக்கு பயணித்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக சீன அதிபருடன் அவர் ஆலோசனை நடத்த ரகசிய பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவர் பயணித்த தனி விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

கிம் ஜாங் உன் விமானம் சீனாவின் டாலியன் நகர விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது, அங்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. கிம் ஜாங் உன் வந்த தனி விமானத்துடன் மற்றொரு சரக்கு விமானமும் வந்துள்ளது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

பொதுவாக வடகொரிய விமான நிறுவனங்களின் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில், வடகொரிய விமானங்கள் மிகவும் பழமையாகவும், அதிக மாசு உமிழ்வு எஞ்சின்களுடன் இருப்பதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த விமானங்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில்லை என்பதால், பராமரிப்பும் குறைவாக இருக்கின்றன.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த சூழலில், வடகொரிய அதிபர் பயணித்த விமானமும் மிக மிக பழமையான விமானம்தான். வடகொரிய அதிபராக இருந்த அவரது அப்பா காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட இருக்கிறது. சோவியத் யூனியன் தயாரிப்பான இலூசின் ஐஎல்-62 என்ற விமான மாடல்தான் அது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

அமெரிக்க அதிபருக்கான தனி விமானம் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்று அழைக்கப்படும் நிலையில், கிம் ஜாங் உன் பயன்படுத்தும் தனி விமானம் ஏர்ஃபோர்ஸ் உன் என்று அவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது. இதனை ஏர்கோர்யோ நிறுவனம் பராமரித்து இயக்குகிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

1963ல் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் உலகின் மிகப்பெரிய ஜெட் விமானம் என்ற பெருமைக்குரியதாக இருந்தது. 1994ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. 2008ம் ஆண்டு வரை ரஷ்யா உள்ளிட்ட ஒறு சில விமான நிறுவனங்கள் இந்த விமானங்களை சேவையில் வைத்திருந்தன.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

தற்போது பயன்பாட்டில் இருந்து வழக்கொழித்துவிட்ட, இந்த விமானத்தை வெறும் 65,000 யூரோ விலைகளுக்கு கூட விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிம் ஜாங் உன் தனது தந்தை பயன்படுத்திய, கார், ரயில் மற்றும் விமானத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

பழமையான விமானம் என்றாலும் வசதிகளுக்கு குறைச்சல் இல்லை. சாதாரணமாக பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படும், இலூசின் ஐஎல்-62 விமானத்தில் 200 பேர் பயணிக்க முடியும். 174 அடி நீளம் கொண்ட இலூசின் ஐஎல்-62, விமானம், போயிங் 757 விமானத்திற்கு இணையான ரகத்தை சேர்ந்தது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

ஆனால், ஆடம்பர பிரியரான கிம் ஜாங் உன் தனி விமானத்தில் படுக்கை வசதி, ஆலோசனை அரங்கம், பாதுகாப்பு அதிகாரிகள் செல்வதற்கான இருக்கை வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் மது பிரியர். எனவே, விமானத்தில் விசேஷ பார் வசதியும் உண்டு.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த விமானத்தில் அவசர தொடர்புக்கான சேட்டிலைட் போன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. தென்கொரிய அதிபருடன் பேச்சு நடத்த சென்றபோது டாய்லெட் வசதியுடன் கூடிய காரை உடன் எடுத்துச் சென்றார். அதேபோன்று, இந்த விமானத்திலும் கிம் ஜாங் உன் விருப்பப்படி அமைக்கப்பட்ட ரெஸ்ட் ரூம் உள்ளது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த விமானத்தில் பொழுதுபோக்கு சாதனங்கள் உண்டு. ஆனால், கிம் ஜாங் உன்னை புகழ்பாடும் பாடல்கள்தான் ஒலிபரப்படுமாம். மேலும், இந்த விமானங்கள் அதிக இரைச்சலை வெளிப்படுத்துவதால், பாடல்களை கேட்பதும் சிரமமான விஷயமாக கூறப்படுகிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

கிம் ஜாங் உன் சீனாவுக்கு ரகசியமாக பயணித்த இலூசின் ஐஎல்-62 விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 901 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. சாதாரணமாக மணிக்கு 820 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 10,000 கிமீ தூரம் வரை பணிக்கும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக 39,400 அடி உயரம் வரை பறக்கும். இந்த விமானத்தை 5 பேர் கொண்ட விமானிகள் குழு இயக்கும். கேப்டன், முதன்மை அதிகாரி, விமான எஞ்சினியர், நேவிகேஷன் அதிகாரி மற்றும் ரேடியோ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு இயக்கும்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த விமானத்தை கைதேர்ந்த விமானிகள் மூலமாக ஏர்கோர்யோ நிறுவனம் இயக்குகிறது. மேலும், கிம் ஜாங் உன்னிற்கு விமானம் ஓட்டும் கலையிலும் அத்துப்படி. எனவே, அவரது மேற்பார்வையில் தேர்வு செய்யப்படும் விமானிகள் இந்த விமானத்தை இயக்கி இருக்கின்றனர். ஏற்கனவே வந்த தகவல்கள்படி, விமானம் ஓட்டுவதில் கிம் ஜாங் உன் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

பழமையான இந்த விமானத்தில் சொகுசு வசதிகள் இருந்தாலும், பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. எனவே, எதிரிநாடுகள் விமானத்தை எளிதாக வீழ்த்தும் வாய்ப்பு இருப்பதால், கிம் ஜாங் உன் பயணம் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

கிம் ஜாங் உன் அரசுமுறையாக விமானத்தில் பயணித்தது இதுவே முதல்முறையாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பெரும்பாலும் கவச ரயிலேயே பயன்படுத்துகிறார். அந்த ரயிலில்தான் முந்தைய சீன பயணம் மேற்கொண்டார். அந்த ரயிலின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

பொதுவாக குண்டு துளைக்காத கார்களை அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கிம் ஜாங் உன் பயன்படுத்தும் ரயில் குண்டு துளைக்காத வசதி கொண்ட கவச ரயில்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக விசேஷ பாதுகாப்பு வசதிகளுடன் 90 விசேஷ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இவை மூன்று ரயில்களாக பயன்படுத்த முடியும். இந்த ரயில்கள் மிக ரகசியமான இடத்தில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை வெளியில் காண்பது அரிது. வெளிநாட்டு உளவுத் துறையால் கூட மோப்பம் பிடிக்க முடியாது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

அதுபோன்ற, விசேஷ ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயிலில்தான் கிங் ஜாங் உன் அண்மையில் சீனாவுக்கு வந்துள்ளார். இந்த ரயில் அடர் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் கலவை பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த ரயில் பெட்டிகள் குண்டு துளைக்காத வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் சேட்டிலைட் போன் உள்ளிட்ட அதிநவீன தொடர்பு வசதிகள் உள்ளன.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

ஆயுத தாக்குதல்களின்போது பயணிக்கும் தலைவர்களை காப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோன்று, ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பாதிப்பு ஏற்படாத அம்சங்களை பெற்றிருப்பதுடன் ரயில் பெட்டியின் உள்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட காற்றை பெறும் வசதியும் உண்டு.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இந்த ரயிலின் ஒருப் பெட்டியில் சிறிய ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. கவச வாகனங்களை பயன்படுத்த இயலாத சூழலில் இந்த ஹெலிகாப்டர் மூலமாக தலைவர்கள் தப்பிக்க இயலும்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

ரயில் புறப்படுவதற்கு முன்பாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சோதனைகளுக்கு பின்னரே பயணத்தை துவங்கும். அதேபோன்று, ரயில் செல்லும் வழித்தடத்திலும் கண்காணிப்பு மற்றும் தண்டவாளத்தில் மிக தீவிரமான சோதனைகள் செய்யப்படுகின்றன.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங் இல் இந்த ரயிலை பலமுறை பயன்படுத்தி இருக்கிறார். 1994 முதல் 2011ம் ஆண்டு வரை சீனா மற்றும் ரஷ்ய பயணங்களுக்கு இதே ரயிலை பயன்படுத்தினார் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங் உன் வினோத பழக்கம் கொண்டவர். அந்த வகையில், அவர் அண்மையில் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது, டாய்லெட் வசதி கொண்ட காரை பயன்படுத்தினார். இது உலக அளவில் மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக மாறியது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

கிம் ஜாங் உன்னிற்கு உலகில் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு இருப்பதால் அவரது உடல்நிலை குறித்து பரிசோதனைகள் நடந்து கொண்டே இருக்கும். பலர் இவரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் கொல்ல முற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை. அவருக்கு வழங்கப்படும் உணவுகளில் இருந்து அவரது கழிவுகள் வரை மிக ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். அவரது கழிவுகள் கூட மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

அவரது கழிவுகளில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இருப்பதால் அதை மிகவும் அதிக அளவில் பாதுகாத்து வருகின்றனர். அவரது வீடு மட்டுமல்லாமல் அவர் வெளியில் செல்லும் போதும் அவர் பயன்படுத்தக்கூடிய வகையில் அவரது பென்ஸ் காரிலேயே டாய்லெட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு அவரது கழிவுகள் சேரிகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபடுகிறது. ஆனால் அவரது எந்த காரில் அந்த வசதியுள்ளது. என யாருக்கும் தெரியாத வகையில் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அவர் இது வரை பொது கழிப்பறையை பயன்படுத்தியதே இல்லையாம்.

வடகொரிய அதிபர் சீனா செல்ல பயன்படுத்திய சீக்ரெட் விமானத்தின் மறுபக்கம்!!

இத்தகவல் அந்நாட்டு பத்திரிக்கையில் வந்த சிறிய தகவல் மூலம் வெளியலகிற்கு தெரியவந்துள்ளது. கிம் ஜாங் உன் எந்த காரணத்திற்காகவும் காரை தேவையில்லாமல் நிறுத்தமாட்டார். அது அவரின் பாதுகாப்பும் கூட என்ற தகவல்கள் மட்டுமே அதில் வெளியாகியிருந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things About KIm Jong Un's Private Jet.
Story first published: Wednesday, May 9, 2018, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X