ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் போயிங் 737 விமானத்தின் முன்சக்கரங்களுக்கு இடையே வினாயகர் படத்தை வைத்து தேங்காய் பழம் படைத்து முதல் விமானத்தை ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்துள்ளது.

By Saravana Rajan

பழைய விமானங்களுக்கு பதிலாகவும், புதிய வழித்தடங்களில் இயக்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்தது. 10 மில்லியன் டாலர் மதிப்பில் மொத்தம் 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்து ஆர்டர் செய்தது. அதன்படி, முதல் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை டெலிவிரி பெற்றிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் போயிங் 737 விமானத்தின் முன்சக்கரங்களுக்கு இடையே வினாயகர் படத்தை வைத்து தேங்காய் பழம் படைத்து முதல் விமானத்தை ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்துள்ளது. படிப்படியாக இந்த புதிய விமானங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. இந்த விமானத்தில் நீங்களும் பயணிக்கும் வாய்ப்பு கிட்டலாம். அதற்கு முன்னதாக இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

போயிங் 737 மேக்ஸ் விமானம் இருக்கை எண்ணிக்கையை பொறுத்து 737 மேக்ஸ் 7, மேக்ஸ் 8, மேக்ஸ் 9 மற்றும் மேக்ஸ் 10 ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. மேக்ஸ் 7 மாடலில் 138 முதல் 172 பேர் பயணிக்கலாம். மேக்ஸ் 8 அல்லது மேக்ஸ் 200 என்ற மாடலில் 162 முதல் 210 பேர் பயணிக்கலாம். மேக்ஸ் 9 மாடலில் 178 பேர் முதல் 220 பேர் செல்லலாம். மேக்ஸ் 10 மாடலில் 230 பேர் வரை பயணிக்கலாம். உள்நாட்டு வழித்தடங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் இரண்டு CFM இன்டர்நேஷனல் லீப் -1பி எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எஞ்சின்கள் இணைந்து அதிகபட்சமாக 119 முதல் 130 KN முன்னோக்கு விசையை அளிக்க வல்லது. மணிக்கு 839 கிமீ வேகத்தில் பயணிக்கும் வல்லமையை பெற்றிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் முக்கிய அம்சம் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம் தரும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பழைய 737 விமானத்தைவிட இந்த விமானம் 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரவல்லது. எரிபொருளுக்கான செலவீனம் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை குறைவு.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்தில் மற்றொரு சிறப்பம்சம், மாசு உமிழ்வு 50 சதவீதம் வரை குறைவு என்று தெரிவிக்கப்பட்டடு இருக்கிறது. இந்த விமானத்தின் எஞ்சினில் டைட்டானியம் பிளேடுகளுக்கு பதிலாக புதிய கார்பன் ஃபைபர் பிளேடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசிறியின் விட்டமும் 176 செமீ ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இதன் திறன் வெகுவாக மேம்பட்டு இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்தின் இறக்கைகள், வால் துடுப்பு பகுதியின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஏரோடைனமிக்ஸ் திறன் சிறப்பாக இருப்பதும், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு வழி செய்துள்ளது. இதனால், பயணக் கட்டணம் மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பையும் வழங்கும்.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், மேக்ஸ் 7 மாடல் 7,130 கிமீ தூரமும், மேக்ஸ் 8 மாடல் 5,000 கிமீ தூரமும், மேக்ஸ் 9 மாடல் 6,750 கிமீ தூரமும்,மேக்ஸ் 10 மாடல் 6,110 கிமீ தூரமும் பயணிக்கும். 41,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

புதிய போயிங் 737 மேக்ஸ் மாடல் நேரடி போட்டியாளரான ஏர்பஸ் ஏ320 விமானத்தைவிட 2.2 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டது. அத்துடன் உட்புறத்தில் செய்யப்பட்டு இருக்கும் டிசைன் மாற்றம் காரணமாக, சக இருக்கை பயணிகளோடு கையோடு, கை இடித்துக் கொண்டு செல்வது போல அதிக நெருக்கடி இருக்காது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

பெரிய ஜன்னல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இருக்கைகளின் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், பழைய மாடலைவிட சவுகரியமாக இருக்கும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன், டேபிலெட் கம்ப்யூட்டல் அல்லது லேப்டாப் கொண்டு வருவதால், இருக்கைகளில் டிவி திரை கொடுப்பதை தவிர்க்க போயிங் முடிவு செய்திருக்கிறது. அதற்கு பதிலாக, சேட்டிலைட் டிவியை பயணிகள் பயன்படுத்தும் வசதியை அளிக்க முடிவு செய்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

அதேபோன்று, வைஃபை இணைய தொடர்பு வசதியையும் இந்த விமானங்களில் கொடுப்பதாக போயிங் தெரிவித்திருக்கிறது. இதனை கட்டணமில்லா சேவையாக வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு யோசனை தெரிவித்துள்ளது போயிங்.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

எஞ்சின் விட்டம் அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கு தக்கவாறு, இந்த விமானத்தின் முன்புற லேண்டிங் கியர் உயரம் 20 செமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

போயிங் 787 மற்றும் ஏர்பஸ் ஏ380 உள்ளிட்ட விமானங்களில் பெரிய இறக்கை அமைப்பும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக, தண்ணீரை சிதறடிப்பது குறைவாக இருக்கும். ஆனால், போயிங் 737 போன்ற விமானங்களில் அதிகமாக சிதறடிக்கும். இந்த குறையை போக்கும் விதத்தில், விசேஷ வடிவமைப்பு மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

பழைய மாடலைவிட இந்த புதிய விமானம் 40 சதவீதம் வரை சப்தம் குறைவானது. இதனால், நிம்மதியான, சவுகரியமான பயண அனுபவத்தை பெறுவதற்கு இந்த விமானம் உதவும் என்று போயிங் தெரிவிக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக இந்த புதிய மாடலை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது. இது நிச்சயம் இந்திய விமானப் பயணிகளுக்கு சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.

Article Published On: Tuesday, June 26, 2018, 14:12 [IST]
English summary
Interesting Things About New Boeing 737 Max Jetlner.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+