சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

Written By:

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களை ராயல் கரிபீயன் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்து ஒரு பிரம்மாண்டமான சொகுசு கப்பலை ராயல் கரிபீயன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பிரம்மாண்டத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

ராயல் கரிபீயன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கப்பலுக்கு சிம்பொனி ஆஃப் தி சீஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. 16 அடுக்குகள் கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலைவிட 3,000 டன் எடை அதிகம் கொண்டது.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

இந்த கப்பல் 1,188 அடி நீளமும், 215 அடி அகலமும் கொண்டது. 2.30 லட்சம் டன் எடை கொண்டது. இந்த கப்பலில் 5,494 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணிக்க முடியும். இந்த கப்பலில் 2,775 அறைகள் இருக்கின்றன. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலைவிட கூடுதலாக 28 அறைகள் இருக்கின்றன.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த சொகுசு கப்பலிலும் இடம்பெற இருக்கிறது. குறிப்பாக, 10 மாடிகளிலிருந்து கீழே வரும் நீர் சறுக்கு விளையாட்டு அமைப்பு, ரோபோ மூலமாக மது பானங்கள் வழங்கும் பயோனிக் பார் உள்ளிட்டவை இருக்கும்.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

இந்த புதிய கப்பல் மேலும் சில தனித்துவ சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் என ராயல் கரிபீயன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலை ராயல் கரிபீயன் நிறுவனம் டெலிவிரி பெற இருக்கிறது.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

அதனைத்தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள கட்டுமானத் தளத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள மியாமியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சொகுசு கப்பல் துறைமுகத்திற்கு முதல் பயணமாக வர இருக்கிறது.

 சிம்பொனி ஆஃப் தி சீஸ்... உலகின் மிகவும் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்!

இந்த துறைமுகம் மியாமியின் க்ரீடம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இந்த துறைமுக அமைப்பே க்ரீடம் போல கட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த துறைமுகம் திறக்கப்படும்போது, சிம்பொனி ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பலும் அங்கு வர இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Royal Caribbean's Symphony Of The Seas cruise ship will be the biggest of all time.
Story first published: Friday, June 16, 2017, 12:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark