380 டன் சாமி சிலை வைக்கப்பட்ட டிரெயிலரை இழுத்து செல்லும் வால்வோ புல்லர் வாகனத்தின் சிறப்பம்சங்கள்!

மும்பையை சேர்ந்த ரேஷம் சிங் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் கோதண்டராமர் சிலையை வந்தவாசியிலிருந்து பெங்களூர் கொண்டு செல்லும் சவாலான பணியை கையில் எடுத்துள்ளது.

பெங்களூர், ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே கல்லில் 64 அடி உயரமும், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட பிரம்மாண்டமான கோதண்டராம சாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேஷன் சிலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலையை ராட்சத பீடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டது. பீடத்துடன் சேர்த்து இந்த சிலை 108 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இதற்காக, வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையில் இருந்து பிரம்மாண்டமான பாறை தனியாக வெட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. கோதண்டராமர் சிலைக்காக 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரமும் 380 எடை கொண்ட பாறையும், ஆதிசேஷன் சிலை 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரமும் 230 டன் எடையுடைய பாறையும் எடுக்கப்பட்டன.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

அதில் கோதண்டராமர் சிலை உருவம் செதுக்கும் பணிகள் நடந்தன. சாமி சிலையின் முகம் செதுக்கப்பட்ட நிலையில், பெங்களூர் கொண்டு சென்று அந்த சாமி சிலையை முழுமையாக செதுக்க முடிவு செய்யப்பட்டது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

எனினும், இந்த பிரம்மாண்டமான சாமி சிலையை கொண்டு செல்வது என்பது மிக மிக சவாலான காரியமாக இருக்கிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ரேஷம் சிங் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்த சிலையை கொண்டு செல்லும் சவாலான பணியை கையில் எடுத்துள்ளது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இதற்காக, தன்னிடம் உள்ள ராட்சத டிரெயிலர் வாகனத்தை பயன்படுத்துகிறது. ஏற்கனவே, 150 சக்கரங்கள் கொண்ட டிரெயிலர் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது 240 சக்கரங்கள் பொருத்தப்பட்ட ராட்சத டிரெயிலர் வாகனத்தை பயன்படுத்தி சிலையை கொண்டு பணி நடந்து வருகிறது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

மலையிருந்த பகுதியிலிருந்து மண் சாலை வழியாக ஒரு கிமீ தூரத்தில் உள்ள தார் சாலைக்கு கொண்டு வருவதற்கு 20 நாட்கள் பிடித்தது. மேலும், பல டயர்கள் வெடித்து பெரும் சவால்களை சந்தித்து ஒருவழியாக தார் சாலையை அடைந்துவிட்டது. அங்கிருந்து பெங்களூர் நோக்கி கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

தார் சாலைக்கு வந்தவுடன், சவால்கள் முடிந்துவிடவில்லை. சிலை மிக பிரம்மாண்டமாக இருப்பதால், வழியில் இருக்கும் கடைகள், வீடுகள், மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றை கடந்து கொண்டு செல்வதிலும் பல்வேறு சவால்கள் இருந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த பிரம்மாண்ட சிலையை தங்கு தடையில்லாமல் இழுத்து வருவதற்கு ராட்சத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த சிலையானது ரயில் பெட்டிகள் போல ஹைட்ராலிக் சிஸ்டத்தின் மூலமாக இணைக்கப்பட்ட மிக நீண்ட டிரக்குகளில் எடுத்து வரப்படுகிறது. கோல்டுகோஃபர் நிறுவனத்தின் டிரெயிலர்கள்தான் இந்த பணியில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண டிரெயிலர் போல அல்லாமல், இந்த டிரெயிலர்களின் அனைத்து ஆக்சில்களையுமே, ஹைட்ராலிக் சிஸ்டத்தின் மூலமாக சக்கரங்களை திருப்ப முடியும்.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

டிரெயிலரின் முன்னும் பின்னும் உள்ள ஹைட்ராலிக் கட்டுப்பாட்டு லிவர்கள் மூலமாகவே, டிரெயிலர் திருப்பப்படுகிறது. இதற்காக, பிரத்யேக டிரைவர்களும் தனியாக பணியில் இருக்கிறார். அதாவது, டிரெயிலருடன் இணைக்கப்பட்ட வால்வோ வாகனம் (புல்லர் டிரக் என குறிப்பிடப்படுகிறது) இழுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

முன்பகுதியில் இழுவை வாகனமாக மட்டுமின்றி, டிரெயிலரின் பின்புறத்திலும் ஒரு வால்வோ வாகனம் பிணைக்கப்பட்டு பின்னால் இருந்து டிரெயிலரை முன்னோக்கி தள்ள உதவுகிறது. சாதாரண சாலைகளில் முன்னும், பின்னும் இரு வாகனங்கள் மூலமாக நகர்த்தப்படும். ஏற்றமான சாலைகளில் முன்னால் கூடுதல் டிராக்டர்கள் இணைக்கப்பட்டு டிரெயிலர் இழுத்துச் செல்லப்படும்.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த 380 டன் எடையுடைய பிரம்மாண்ட சிலையை இருக்கும் கோல்டுகோஃபர் டிரெயிலரை வால்வோ FH 520 6*4 புல்லர் எனப்படும் டிராக்டர்தான் இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வால்வோ டிராக்டரில் 520 பிஎச்பி பவரையும், 2200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 12.8 லிட்டர் யூரோ-3 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

அதாவது, மிக குறைந்த எஞ்சின் சுழல் வேகத்திலேயே மிக அதிக டார்க்கையும், சக்தியையும் இதன் எஞ்சின் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. இந்த வால்வோ 520 புல்லர் வாகனமானது அதிகபட்சமாக 200 டன் எடையை இழுத்துச் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், சிலை 380 டன் இருப்பதால் இரண்டு வாகனங்கள் முன்னும் பின்னும் பயன்படுத்தப்படுகிறது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த வால்வோ எஃப்எச் 520 டிராக்டரில் சக்திவாய்ந்த எஞ்சினுடன் இணைந்து செயல்படும் விதத்தில், 14 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தியையும், டார்க்கையும் சிந்தாமல் சிதறாமல் 2 ஆக்சில்கள் மூலமாக பின்புறத்தில் உள்ள சக்கரங்களுக்கு செலுத்தும் விசேஷ தொழில்நுட்பத்துடன் சிறப்பான கியர் ரேஷியோவையும் கொண்டது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த வால்வோ டிராக்டர் வாகனத்தில் மிக வலிமையான ஆக்சில்கள் மற்றும் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக தரைப்பிடிப்பை வழங்குவதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த புல்லர் டிரக்கில் 445 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிரக்கின் இழுவை திறன்தான் முக்கியமாக பார்க்கப்படும். வேகம் அல்ல. எனினும், இந்த டிரக் அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

380 டன் ராமர் சிலையை அசால்ட்டாக இழுத்து வரும் வால்வோ புல்லர் டிரக்!

இந்த டிரக் விலை மட்டும் இந்தியாவில் ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நேர் போட்டியாளராக ஸ்கானியா ஆர்580 டிரக் சந்தையில் உள்ளது. ஆனால், எரிபொருள் சிக்கனம், நீடித்த உழைப்பு, சிறந்த பிரேக்குகள், விற்பனைக்கு பிந்தைய சேவை என வால்வோ இந்த மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கிறது.

கோதண்டராம சாமி சிலை கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிரெயிலர் மற்றும் வால்வோ டிரக்குகளை லாவகமாக இயக்கும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு கூட்டு முயற்சியாகவே பார்க்க முடியும். இந்த சிலை பெங்களூர் சென்றடைய 50 நாட்கள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Things About Volvo Trucks Thats Pulls 380 Ton Kodandaramar Statue from Vandavasi to Bangalore. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X