ஒரு பைலட் செத்துட்டார்னு இன்னொரு பைலட் வேணும்னே சொல்லுவாரா! ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க

விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்வது நிச்சயமாக சலிப்பை ஏற்படுத்தும். பயணிகளான நமக்கு மட்டுமல்லாது, நம்மை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள பைலட்களுக்கும் கூட, வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது ஒரு சில சமயங்களில் சலிப்பு ஏற்படும். ஆம், உண்மைதான்.

பைலட்கள் அனைத்து நேரங்களிலும் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில சமயங்களில் அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்காது. அந்த அளவிற்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால் பெரிதாக வேலை இல்லாத சமயங்களில், சலிப்பு ஏற்படும் என பைலட்கள் கூறுகின்றனர்.

Pilots

அப்போது பைலட்கள் என்ன செய்வார்கள் என உங்களுக்கு தெரியுமா? உண்மையில் இந்த விஷயம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவேதான் இந்த செய்தியை வழங்கியுள்ளோம். வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது சலிப்பாக இருந்தால், பைலட்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.

சமூக வலை தளங்களில் தற்போது ப்ராங்க் வீடியோக்களை அதிகமாக காண முடிகிறது. இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில், பைலட்கள் ப்ராங்க் செய்வார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் விமானம் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது!

Airplane

ஆனால் இது உண்மைதான். பொதுவாக விமானங்களில் 2 பைலட்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் திடீரென உயிரிழந்து விட்டதாக, தலைமை விமான பணிப்பெண்ணிடம், மற்றொரு பைலட் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துவாராம். ஆனால் இந்த விஷயம் மற்ற விமான பணிப்பெண்களுக்கும், பயணிகளுக்கும் தெரிய கூடாது எனவும் கூறி விடுவாராம்.

ஆனால் சற்று நேரத்தில் இந்த விளையாட்டை பைலட்கள் முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்களாம். என்ன கொடுமை சரவணன் இது? ஒரு சில பைலட்கள் இப்படி நடந்து கொள்ளும் நிலையில், வேறு சில பைலட்கள் சுடோகு போன்ற புதிர் விளையாட்டுகளை விளையாடி டைம் பாஸ் செய்வார்களாம்.

அதே நேரத்தில் வேறு சில பைலட்களோ, தாங்கள் சலிப்பாக இருக்கும் சமயங்களை, இன்னும் பயனுள்ளதாக மாற்றி கொண்டுள்ளனர். தேர்வுகளுக்கு படிப்பது மற்றும் தங்களுக்கு தெரியாத மொழிகளை எல்லாம் கற்று கொள்ள முயற்சி செய்வது போன்ற விஷயங்களை அவர்கள் விமானத்திலேயே செய்கின்றனர். கங்குராஜூலேஷன்ஸ் பாஸ்!

அதே சமயம் வேறு சில பைலட்கள், நம்மை போலவே கிசுகிசுக்களை பேசி கொண்டிருப்பார்களாம். தாங்கள் வேலை செய்யும் விமான நிறுவனத்தில் கிளம்பியுள்ள புரளிகள்தான், அவர்கள் அதிகம் பேசும் விஷயமாக இருக்குமாம். இதில் முட்டாள்தனமான விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும் என்பதை நிறைய பைலட்கள் ஒப்பு கொள்கின்றனர். ஏய்... என்னப்பா சொல்றீங்க!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியிலும், பைலட்கள் இப்படி ரிலாக்ஸாக வேலை செய்வது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. விமானத்தில் பயணம் செய்வது என்றாலே, பயந்து கொண்டிருக்கும் நபர்கள் இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களும் ரிலாக்ஸாக டிராவல் பண்ணுங்க பாஸ்!

Article Published On: Thursday, May 4, 2023, 13:47 [IST]
English summary
Interesting things airplane pilots do when they are bored
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+