682 வேகன்கள், 8 எஞ்சின்கள் கொண்ட உலகின் மிக மிக நீளமான ரயில்!

By Saravana

தரைப் போக்குவரத்தில் ஒரே நேரத்தில் அதிக பயணிகள், சரக்குகளை பரிமாற்றுவதற்கு ரயில் போக்குவரத்தே சிறந்த உபாயமாக உள்ளது. தேவையை பொறுத்து ரயில்களில் பெட்டிகள் மற்றும் சரக்கு வேகன்கள் இணைக்கப்படுகின்றன.

சாராணமாக 2,000 மீட்டர் நீளம் கொண்ட ரயில்கள் பரவலாக இயக்கப்படுகின்றன. இவற்றிற்கு சக்திவாய்ந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், உங்கள் கற்பனையெல்லாம் விஞ்சும் விதத்தில் உலகின் மிக நீளமான சரக்கு ரயில் பற்றியத் தகவல்களை இங்கே காணலாம்.

சாதனை

சாதனை

கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 21ந் தேதி ஆஸ்திரேலியாவின் நியூமேன் என்ற இடத்திற்கும் போர்ட் ஹெட்லேண்ட் என்ற இடத்திற்கும் இடையில் இயக்கப்பட்ட ரயில்தான் தற்போதைக்கு உலகின் மிக நீளமான ரயில் என்ற சாதனையை தக்க வைத்து வருகிறது.

நீளம்

நீளம்

பொதுவாக 2 கிமீ நீளம் வரை சரக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த ரயில் 7.353 கிமீ நீளம் கொண்டதாக இணைக்கப்பட்டிருந்தது. அதாவது, மூன்றரை மடங்கு அதிக நீளம் கொண்டதாக இருந்தது.

வேகன்கள் எண்ணிக்கை

வேகன்கள் எண்ணிக்கை

இந்த ரயிலில் இரும்புத்தாது ஏற்றப்பட்டிருந்த 682 சரக்கு வேகன்கள் இணைக்கப்பட்டிருந்தன.

எஞ்சின்கள்

எஞ்சின்கள்

இந்த ரயில் இழுப்பதற்காக ஜிஇ ஏசி6000 வகையை சேர்ந்த 8 ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டன.

மொத்த எடை

மொத்த எடை

இந்த ரயிலில் 82,262 டன் இரும்புத்தாது எடுத்துச் செல்லப்பட்டது. இரும்புத்தாது மற்றும் ரயிலின் எடையை சேர்த்து 99,734 டன் என்று தெரிவிக்கப்பட்டது.

தூரம்

தூரம்

ஆஸ்திரேலியாவிலுள்ள, நியூமேன் மற்றும் போர்ட் ஹெட்லேண்ட் இடையிலான 275 கிமீ தூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டது.

 ஒரு டிரைவர்

ஒரு டிரைவர்

இந்த மிக நீளமான ரயிலை ஒரேயொரு ரயில் எஞ்சின் டிரைவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்க நிறுவனம்

சுரங்க நிறுவனம்

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான பிஎச்பி பில்லிட்டன்தான் இந்த ரயிலை இயக்கியது. வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Things Of World's Longest Train.
Story first published: Wednesday, January 6, 2016, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X