ஹிட்லருக்கு பயந்து மறைக்கப்பட்ட புகாட்டி விமானம் - சரித்திரத்தின் கருப்புப் பக்கம்!!

By Saravana

புகாட்டி என்ற பிராண்டிற்கு புரட்சி என்று கூட அழைக்கலாம். டைப் 57 அட்லாண்டே, வேரான் மற்றும் ஈபி110 சூப்பர் கார் என்று பல புரட்சிகர வாகன மாடல்களை அறிமுகம் செய்து பெயர் பெற்றது நீங்கள் அறிந்தது. ஆனால், நீங்கள் அறியாத புகாட்டியின் மற்றொரு விஷயம் குறித்து இந்த செய்தியில் காணப் போகிறீர்கள்.

தொழில்நுட்பத்தில் அசர வைக்கும் கார்களை கடந்து புகாட்டி நிறுவனத்தின் நிறுவனர் எட்டோர் புகாட்டி ஒரு புரட்சிகர விமானத்தையும் உருவாக்கியிருக்கிறார். இந்த விமானத்தை புரட்சிகரமானது என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

 ரேஸ் விமானம்

ரேஸ் விமானம்

1930ம் ஆண்டு பெல்ஜியத்தை சேர்ந்த லூயிஸ் டி மாங்கே என்ற விமானவியல் பொறியாளருடன் சேர்ந்து, ஓர் புதிய விமானத்தை வடிவமைத்தார் எட்டோர் புகாட்டி.

புகாட்டி 100பி

புகாட்டி 100பி

உலகின் அதிவேக விமானம் என்ற சாதனையை படைப்பதற்காக, இந்த விமானத்தை உருவாக்கும் முயற்சியில் எட்டோர் புகாட்டி இறங்கினார். அந்த விமானத்திற்கு புகாட்டி 100பி என்று பெயரிடப்பட்டிருந்தது.

விமான பந்தயம்

விமான பந்தயம்

பிரான்ஸ் நாட்டின் அப்போது பிரபலமாக இருந்த கூபே டச் டி லா மார்தே ஏர் ரேஸ் என்ற விமான பந்தயத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். 1939ம் ஆண்டுக்கான இந்த பந்தயத்தில் தனது புகாட்டி 100பி விமானத்துடன் பங்கேற்று உலகின் அதிவேக விமானம் என்ற பெருமையை பெறுவதுதான் எட்டோர் புகாட்டியின் திட்டம்.

வேக சாதனக்காக...

வேக சாதனக்காக...

அப்போது, ஜெர்மனியை சேர்ந்த விமானம் ஒன்று மணிக்கு 754 கிமீ வேகத்தில் பறந்ததே, உச்சபட்ச வேக சாதனையாக இருந்தது. அதனை விஞ்சும் வகையில், மணிக்கு 800 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டதாக இந்த விமானத்தை உருவாக்கினார் எட்டோர் புகாட்டி. சுமார் 85 சதவீத தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன.

புகாட்டி விமானம்... சரித்திரத்தின் கருப்புப் பக்�
 ஹிட்லருக்கு தெரியும்?

ஹிட்லருக்கு தெரியும்?

ஹிட்லரின் நெருக்கமானவராக அறியப்படும், ஆல்பர்ட் ஸ்பீர் என்ற ஜெர்மானிய அமைச்சர் ஒருவருக்கு இந்த விமான தயாரிப்பு திட்டம் குறித்த தகவல் தெரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே, விமானத்தை அவர் தனித்தனியாக கழற்றி விட்டாராம்.

காட்சிக்கு...

காட்சிக்கு...

இரண்டாம் உலகப் போர் முடிந்தும், இந்த விமானம் திட்டம் திரும்பவும் எடுக்கப்படவில்லை. எனினும், 1971ல் இந்த விமானத்தை புனரமைத்து, அமெரிக்க தேசிய விமானப்படை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஆனாலும், தொழில்நுட்பத்தால் பலரின் கவனத்தை இன்று வரை ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக, புகாட்டி 100பி விமானத்தின் மாதிரி மாடல் ஒன்று சமீபத்தில் உருவாக்கப்பட்டு, பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.

Photo Credit: Wikipedia

மாதிரி மாடல்

மாதிரி மாடல்

ஸ்காட்லாந்தை சேர்ந்த விமான ஆர்வலரும், போர் விமான ஓட்டியுமான லாசன் என்பவர், புகாட்டி 100பி விமானத்தின் அருமை, பெருமைகளை அறிந்து வியந்து போயிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தின் மாதிரி மாடலை ஒன்றை, வல்லுனர் குழுவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார்.

வியந்து போற்றும் லாசன்

வியந்து போற்றும் லாசன்

1940ம் ஆண்டுகளில் இருந்த விமானங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும் ஒப்பிடும்போது, புகாட்டி 100பி விமானம் தொழில்நுட்பத்தில் பல படிகள் முன்னே நிற்கிறது. அப்போது இருந்த விமானங்களுடன் ஒப்பிடும்போது மிக குறைவான நீளமும், இறக்கை அகலமும் கொண்டது. இந்த விமானம் 27 அடி நீளமும், 25.25 அடி அகலமும் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

ஒரிஜினல் புகாட்டி 100பி விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு எஞ்சினும் 8 சிலிண்டர்கள் கொண்ட 4.9 லிட்டர் கொண்டது என்றும், அதிகபட்சமாக 450 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டிருந்தது.

அதுமட்டுமா...

அதுமட்டுமா...

அதிக உறுதித்தன்மையும், குறைந்த எடையும் கொண்ட உடற்கூடு, ஸீரோ டிராக் கூலிங் சிஸ்டம், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயக்கும் வசதி என பல விதங்களில் இன்றைய தொழில்நுட்பத்தை கொண்டிருந்தது. மேலும், 1940களில் இந்த தொழில்நுட்பத்தை சிந்தித்து கட்டமைத்தது மிகப்பெரிய விஷயம் என லாசன் வியந்து கூறுகிறார்.

மாதிரி மாடலின் சிறப்புகள்

மாதிரி மாடலின் சிறப்புகள்

பல்வேறு வல்லுனர்களுடன் இணைந்து இந்த விமானத்தின் சிக்கலான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய மாதிரி மாடலை உருவாக்கியுள்ளனர். புதிய மாதிரி மாடலில் 200எச்பி பவரை அளிக்கும் ஹயபுசா மோட்டார்சைக்கிளின் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தை இலக்காக கொண்டு இந்த விமானத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

வெற்றிகரமாக பறந்தது...

வெற்றிகரமாக பறந்தது...

சமீபத்தில் இந்த விமானத்தை பறக்கவிட்டு சோதனை செய்தனர். அப்போது வெற்றிகரமான இந்த விமானம் பறந்தது. ஆனால், தரையிறங்கும்போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக, ஓடுதளத்திற்கு அருகில் இருந்த புல் தரையில் செலுத்தி நிறுத்தினர்.

 புரட்சிகர மாடல்தான்...

புரட்சிகர மாடல்தான்...

ஒருவேளை, புகாட்டி 100பி விமானம் வெளியுலகுக்கு அப்போதே வந்திருந்தால், விமான தயாரிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் எனறு லாசன் உள்பட பல விமானத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Article Published On: Wednesday, August 26, 2015, 17:29 [IST]
English summary
Intereting Details About Bugatti 100P Plane.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+