10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
தனியார் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டிகோ (IndiGo)-வின் தாய் நிறுவனம் இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises). இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்சி (Electric Air Taxi) சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சேவை எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது? சேவைக்கான கட்டணம் எவ்வளவு ரூபாய் இருக்கும்? என்கிற விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் பறக்கும் எலெக்ட்ரிக் ஏர் டாக்சி சேவையை 2026 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது மிக விரைவான பயண அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

உதாரணமாக, சாலை மார்க்கமாக குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று சேர 2 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் எனில், இந்த பறக்கும் ஏர் டாக்சிகள் உங்களை அதே இடத்திற்கு வெறும் 7 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடுமாம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தலைநகர் டெல்லியில் இருந்து குருகிராம் வரை சாலை மார்க்கமாக செல்ல 1 மணி நேரம் 41 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் எனில் இந்த பறக்கும் டாக்சி அதே இடத்திற்கு உங்களை 7 நிமிடங்களுக்குள்ளாக சென்று சேர்த்துவிடும்.

மேலும், சாலை மார்க்கமாக பயணிக்க குறைந்தபட்சம் ரூ. 1,500 ஆவது செலவாகும். அதுவே, இன்டர்குளோப் அறிமுகம் செய்ய இருக்கும் ஏர் டாக்சியை பயன்படுத்தினால் இதே இடத்தை வெறும் 7 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விட முடியும். அத்துடன் கட்டணமும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இன்டர்குளோப் இந்தியாவில் பறக்கும் டாக்சி சேவையைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஆர்சர் ஏவியேஷன் (Archer Aviation) எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆர்ச்சர் ஏவியேஷன் ஓர் முன்னணி பறக்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இவர்கள் இருவரும் இணைந்தே இந்தியாவிற்கான பறக்கும் மின்சார டாக்சிகளை தயார் செய்ய இருக்கின்றனர்.
இந்த டாக்சிகளுக்கு பறக்க விமானங்களைப் போல ஓடுதளம் மற்றும் இறங்கு தளம் தேவைப்படாது என கூறப்படுகின்றது. நின்ற இடத்தில் இருந்தே செங்குத்தாக வான் நோக்கி எழும் திறன் கொண்டதே அந்த வாகனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஹெலிகாப்டரை அது இயங்கும் என்பது தெரிகின்றது.
அதேவேளையில், இது முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் என்பதால் இரைச்சல் பெரிய அளவில் இருக்காது என்றும் எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 200 எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சிகளை ஆர்சர் ஏவியேஷன் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. முதல் கட்டமாக இந்த பறக்கும் டாக்சிகள் தலைநகர் டெல்லியிலேயே பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் இன்டர்குளோப்பின் பறக்கும் டாக்சி சேவை பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகின்றது. எனவே 2026 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களின் வானத்தில் பறக்கும் டாக்சிகள் வட்டமடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பறக்கும் டாக்சிகள் ஒவ்வொன்றிலும் ஆறு பேட்டரி பேக்குகள் இடம் பெற்றிருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இவற்றை வெறும் 30 நிமிடங்கள் தொடங்கி 40 நிமிடங்களுக்கு உள்ளாக முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியுமாம். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த பறக்கும் டாக்சிக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆகையால், ஓர் முழு சார்ஜில் இன்டர்குளோப்பின் பறக்கும் டாக்சிகள் எத்தனை கிமீ தூரம் பயணிக்கும்? என்ன மாதிரியான வேகத்தில் (துள்ளியமான வேகம்) அது பறக்கும் என்பது பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்டர்குளோப் அறிமுகம் செய்ய இந்த பறக்கும் டாக்சி சேவையை விமானத்தைவிட விரைவான பயணிக்கும் என தெரிகின்றது. இது சென்னையில் பயன்பாட்டிற்கு வரும் இங்கிருந்து பாண்டிச்சேரி, திருப்பதி மற்றும் தடா போன்ற இடங்களுக்கு வெறும் 20-30 நிமிடங்களிலேயே போய்விட முடியும். இத்தகைய சூப்பரான சேவையையே இன்டர்குளோப் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டிற்குள் தொடங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








