பேட்ரோல் காருக்கு வெளியே இருந்து பார்த்தால் ஒன்னும் தெரியாது!! போலீஸ்காரர்கள் ரொம்ப பாவம்ங்க...

நம்ம ஊர்களில், 'போலீஸ் உங்கள் நண்பன்' என பலகைகள் வைக்கப்பட்டாலும், போலீசை பார்த்தாலே ஒரு செகண்ட் லேசாக பயம் தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. அப்படியிருக்கையில், போலீஸ் கார்களுக்குள் என்னென்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், சில வெளிநாடுகளில் கதையே வேறு. போலீசாரும், பொது மக்களும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறான ஒரு வெளிநாட்டில் நடந்துள்ள சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான போலீசார் பயன்படுத்துவது, விலை குறைவான மிகவும் பேஸிக் கார்களை ஆகும். இந்த காலக்கட்டத்திலும், சில போலீஸ் கார்களில் ஏசி வசதி இல்லை. ஆனால், அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் பார்த்தால், அதிவேகமாக இயங்கக்கூடிய மிகவும் பவர்ஃபுல்லான கார்களை போலீசார் பயன்படுத்துகின்றனர். துபாய் போலீசார் இன்னும் ஒருபடி மேலேபோய் லம்போர்கினி, லேண்ட் ரோவர் போன்ற கார்களை கூட பயன்படுத்துகின்றனர்.

interior features of police cars

நாம் இந்த தொகுப்பில், அமெரிக்க போலீசார் உபயோகப்படுத்தும் கார்களுள் ஒன்றை பற்றி பார்க்க போகிறோம். அமெரிக்க போலீசார் எந்த மாதிரியான கார்களை பயன்படுத்துகின்றனர் என்பதை எப்போதாவது யோசித்துள்ளீர்களா? உங்களுக்காகவே ஷிஜோஸ் டிராவல் டைரி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க போலீஸ் காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதை இந்த வீடியோவில் விரிவாக காட்டியுள்ளனர்.

'ஷிஜோஸ் டிராவல் டைரி', இந்த பெயரை பார்த்தாலே தெரிகிறது, இது டிராவலர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் என்று. இவர் ஓர் மலையாளி ஆவார். புது, புது இடங்களுக்கு செல்லும் இவர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு போலீஸ் காரை நெருக்கமாக காட்சிப்படுத்தி வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பொதுவாக, தங்களது கார்களை வீடியோ எடுக்க பெரும்பாலான போலீசார் விரும்புவதில்லை.

interior features of police cars

ஆனால், இந்த வீடியோவில் காட்சித்தரும் அமெரிக்க போலீஸ்காரர் நம் இந்தியாவை சேர்ந்தவராக உள்ளார். இதனால், இந்த கேரள சுற்றுலா பயணியால் அவரிடம் இதுகுறித்து தயக்கமின்றி கேட்க முடிந்துள்ளது. இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அமெரிக்க போலீஸ் கார் ஆனது டாட்ஜ் நிறுவனத்தின் டுராங்கோ எஸ்யூவி கார் ஆகும். போலீசாரின் பயன்பாட்டிற்காக இந்த காரில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, போலீசாரின் எளிமையான அன்றாட பயன்பாட்டிற்காக, டேஸ்போர்டில் பெரிய அளவில் திரை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதை வீடியோவில் காணலாம். ஸ்டாண்ட் ஒன்றில் இந்த திரை பொருத்தப்பட்டுள்ளதால், போலீசார் தங்களது விருப்பத்திற்கேற்ப திரையை நகர்த்திக் கொள்ளலாம். இந்த திரைக்கு கீழே ஒரு கீபோர்டு உள்ளது. இதனை பார்க்கும்போது, காருக்குள் ஒரு கம்யூட்டர் செட்-அப் போன்றுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை உடன் இந்த திரை இணைக்கப்பட்டுள்ளதால், போலீசாருக்கு இந்த திரை மிக முக்கியமானதாக உள்ளது.

interior features of police cars

மேலும், மற்ற போலீசாருடன் தொடர்புக் கொள்வதற்காக இந்த காரில் ரேடியோ வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. முன் இருக்கைகளுக்கு மத்தியில் வழங்கப்படும் செண்டர் கன்சோல் பகுதி ஆனது இந்த போலீஸ் காரில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சைரனுக்கான ஸ்விட்ச் இந்த செண்டர் கன்சோல் பகுதியில்தான் உள்ளது. இந்த பகுதியில் மேலும் சில பொத்தான்களும் உள்ளன. ஆனால், அவற்றின் பயன்கள் என்ன என்பதை வீடியோவில் போலீசார் விவரிக்கவில்லை.

பொதுவாக, முதன்மை போலீஸ் அதிகாரிகள் தினந்தோறும் ஒரே காரை பயன்படுத்துவார்கள். அந்த கார் வேறு எந்த போலீசாருக்கும் வழங்கப்படாது. ஆனால், ஜூனியர் லெவல் போலீஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது வெவ்வேறு விதமான கார்கள் ரோந்து பணிகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த நிலைமை நம் இந்தியாவில் மட்டுமில்லை, அமெரிக்காவிலும் உள்ளதாக இந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு போலீஸ் அதிகாரி தனது ரோந்து காரை வீடியோ எடுக்க அனுமதித்து இருப்பது பெரிய விஷயமாகும். ஏனெனில், பாதுகாப்பு காரணங்களினால் பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் இதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இந்த வீடியோவின் மூலம், அமெரிக்க போலீசார் ஒரு கம்யூட்டர் செட்-அப்பை தங்களது காருக்குள் வைத்துக் கொண்டு, அலுவலக பணிகளை பார்த்துக் கொண்டே ரோந்து பணிகளையும் கவனித்துக் கொள்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 21:00 [IST]
English summary
Interior features of police cars detailing video check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X