50 ஆண்டுகளுக்கு முன் நானோ கார் போலவே உருவாக்கப்பட்ட பட்ஜெட் கார்!

இந்தியாவின் குறைவான விலை கார் என்றாலே டாடா நானோ நினைவுக்கு வந்தாலும், அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே, மஹராஷ்டிர மாநிலம், கோல்ஹாப்பூரை அடுத்த இச்சால்கரன்ஜி என்ற இடத்தை சேர்ந்த ஷங்கர்ராவ் குல்கர்னி என்ப

சாமானிய மக்களின் கனவை நனவாக்கும் விதத்தில், மிக குறைவான விலையில் காரை வழங்கும் திட்டத்தை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கையில் எடுத்தார். அவரது கனவு திட்டத்தின்படி, ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. நானோ கார் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை என்றாலும், உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினரையும், கார் ஆர்வலர்களையும் டாடா நானோ கார் திரும்பி பார்க்க வைத்தது.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

இந்தியாவின் குறைவான விலை கார் என்றாலே டாடா நானோ நினைவுக்கு வந்தாலும், அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே, மஹராஷ்டிர மாநிலம், கோல்ஹாப்பூரை அடுத்த இச்சால்கரன்ஜி என்ற இடத்தை சேர்ந்த ஷங்கர்ராவ் குல்கர்னி என்பவரும் இதே திட்டத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னரே கையில் எடுத்து அதனை நிறைவேற்றினார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

சாதாரண மக்களுக்கும் வாங்க கூடிய விலையில் கார் தயாரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஷங்கர்ராவ் குல்கர்னி உருவாக்கிய புரோட்டோடைப் மாடல்கள் இந்திய பட்ஜெட் கார் உலகிற்கு முன்னோடியாக கூறலாம்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

1949ம் ஆண்டு முதல் புரோட்டோடைப் கார் மாடலை குர்கர்னி உருவாக்கினார். இந்த கார் மாடல் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட 2 சீட்டர் மாடலாக தயாரித்தார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

இந்த கார் ஆர்டிஓ அலுவலகச் சான்றையும், MHK1906 என்ற பதிவு எண்ணையும் பெற்றது. 1950 காலக்கட்டங்களில் புனே சாலைகளில் இந்த கார் வலம் வந்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

அதன்பிறகு, அரசு சட்ட வரைமுறைகள பின்பற்றி அந்த சிறிய காரை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தி, 5 கார் மாடல்களை அவர் உருவாக்கி இருக்கிறார். கடைசியாக உருவாக்கப்பட்ட புரோட்டோடைப் மாடலானது 5 சீட்டர் மாடலாக இருந்தது. அத்துடன், அந்த காருக்கு MHK192 என்ற பதிவு எண்ணையும் பெற்றார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

1970ம் ஆண்டு அவர் கடைசியாக உருவாக்கிய அந்த புரோட்டோடைப் மீரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த கார் மாடலானது நானோ காரைவிட அளவில் சிறியது. ஆனால், 5 சீட்டர் மாடலாக அதனை உருவாக்கி ஆச்சரியத்தை கொடுத்தார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

சாதாரண மக்களுக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மீரா காருக்கு ரூ.12,000 விலையாகவும் நிர்ணயித்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் அம்பாசடர் கார் ரூ.18,000 முதல் ரூ.30,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

ஷங்கர்ராவ் குல்கர்னியின் பேரன் ஹேமந்த் குல்கர்னி தனது தாத்தாவின் பொறியியல் வல்லமை குறித்து பத்திரிக்கை ஒன்றிடம் குறிப்பிடும்போது," எனது தாத்தா உருவாக்கிய மீரா காரின் பல சிறப்புகளை டாடா நானோ காரில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

எனது தாத்தா உருவாக்கிய மீரா காரில் இருப்பதை போலவே, டாடா நானோ காரிலும் பின்புற எஞ்சின் அமைப்பு, ஒற்றை வைப்பர், 18 முதல் 20 கிமீ மைலேஜ் மற்றும் 5 பேர் செல்வதற்கான வசதிகளை பெற்றிருக்கிறது," என்று கூறினார். இப்போது ஹேமந்த் குல்கர்னி தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குல்கர்னி எப்படி காரை உருவாக்கும் அளவுக்கு பாண்டித்தியம் பெற்றார் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்தான். ஆனால், அவர் படித்தது 7ம் வகுப்பு வரை என்றாலும், ஆர்வம் காரணமாக கார் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். காருக்கான எஞ்சின் உள்ளிட்ட பல பாகங்களை சொந்தமாகவே ஒரு குழுவினரை வைத்து தயாரித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

புனேயில் உள்ள ஸ்வஸ்திக் டயர் ஃபேக்டரியிலிருந்து காருக்குரிய ரப்பர் சஸ்பென்ஷன் பாகங்களையும், சியட் நிறுபவனத்திடமிருந்து டயர்களையும், லூகாஸ் நிறுவனத்திடமிருந்து எலெக்ட்ரிக்கல் பாகங்களையும் சப்ளை பெற்றுள்ளனர். காருக்கு தேவைப்பட்ட கண்ணாடி பொருட்களை ஒகல் கிளாஸ்ஓர்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

இந்த காரை அப்பகுதியில் பிரபலமானவர்களாக இருந்த சாந்தனுராவ் கிர்லோஸ்கர், மோகன் தாரியா, ராஜாராம்பாபு பாட்டீல், ஷங்கர்ராவ் சவுகான் உள்ளிட்டர் ஓட்டி பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இவர்களுடன் ஷங்கர்ராவ் குல்கர்னியும் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

மேலும், பெல்கானில் நடந்த பொறியியல் கண்காட்சியில் மீரா கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பார்வையாாளர்களை வெகுவாக இந்த கார் ஈர்த்துள்ளது. அத்துடன், அங்கு வெளிவந்த செய்தித்தாள்களிலும் இந்த கார் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

தனது காரின் பொறியியல் வல்லமையை பரைசாற்றும் விதத்தில், மும்பைக்கு செங்குத்தான காந்தலா மலைச்சாலைகளை கடந்து எடுத்து வந்துள்ளார். அங்கு பொது பார்வைக்கு வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் நானோ காரை உருவாக்கிய படிக்காத மேதை!

பல்லாண்டு உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த மக்கள் கார் திட்டமானது, நிதி பிரச்னை மற்றும் அரசியல் காரணங்களால் இந்த கார் திட்டம் தோல்வியடைந்ததுடன், தனது கார் கனவை தாத்தா ஷங்கர்ராவ் குல்கர்னி கைவிடப்பட்டதாக ஹேமந்த் தெரிவிக்கிறார்.

Source:Blogspot

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Intersting Things About India's First 'Nano' Car Meera. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X