ஈ சாலா கப் நம்மதேன்னு நம்பிக்கையுடன் இருக்கும் விராட் கோலியிடம் இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?
இந்தியாவில் நாளை(22ம் தேதி) 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் துவங்குகிறது. முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. தற்போது ஐபிஎல் குறித்து பலர் பேசி வருகின்றனர். முக்கியமான பெங்களூரு அணியில் உள்ள நட்சத்திரமான விராட் கோலி குறித்து இந்த இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. மைதானத்தில் தனது விளையாட்டால் மக்கள் மனதில் இடம் பிடித்த கோஹ்லி, ஆடம்பர மற்றும் ஸ்போட்டியான கார்களில் ஆர்வம் காட்டுபவர். உலகில் அதிகம் தேடப்படும் வாகனங்கள் சிலவற்றை சொந்தமாக வைத்துள்ளார். கோலி வைத்திருக்கும் அல்லது வைத்திருந்த இந்த அற்புத வாகனங்களின் விவரங்களை பார்ப்போம்
கோஹ்லியின் தொகுப்பில் ஆடி ஆர்8 வி10 பிளஸ் ஒரு தனித்துவமாக காராக உள்ளது. இந்த சக்திவாய்ந்த கூபே வடிவ கார் 5.2 லிட்டர் வி10 இன்ஜினை கொண்டுள்ளது. கவர்ச்சிகரமான வடிவமைப்போடு இணைந்த இந்த கார் அசாதாரண செயல்திறனை வழங்குகிறது. இந்த கார் ஆர்வலர்கள் மற்றும் கார் கலெக்ஷன் செய்பவர்களிடையே முதல் தேர்வாக இருக்கும் காராகவும் உள்ளது.

கோஹ்லியின் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஆடம்பரத்தை வேகத்துடன் இணைக்கும் காராக உள்ளது. இது கைவினைத்திறன் கொண்ட உட்புறம் மற்றும் சாஃப்டான டிரைவிங் அனுபவத்திற்காக அறியப்பட்ட 6.0 லிட்டர் டபிள்யூ12 இன்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் அழகு மற்றும் பவரை கொண்டு உருவக்கப்பட்ட காராக இருக்கிறது. இது இவர் வைத்திருக்கும் கார்களிலேயே சற்று காஸ்ட்லியான காராக இருக்கிறது.
கோஹ்லியின் கேரேஜில் உள்ள ரேஞ்ச் ரோவர் வோக் ஆடம்பரத்தையும் ஆஃப்-ரோடு திறன்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இந்த எஸ்யூவி சிட்டி தெருக்கள் வழியாக செல்லவோ அல்லது வெளிப்புற அட்வெஞ்சர்களில் ஈடுபடவோ ஏற்றது, பல்துறைத்திறன் மற்றும் ஸ்டைலான காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி அவென்டேடார் எஸ் கோஹ்லியின் லைன்அப்பில் மற்றொரு முக்கியான காராகும். இந்த காரில் 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்ட இந்த சூப்பர் கார் அதன் வேகம் மற்றும் அற்புதமான வடிவமைப்புக்கு பெயர் பெற்றது, எந்த கார் ஆர்வலருக்கும் ஒரு உற்சாகமான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.
கோஹ்லி பென்ட்லி ஃப்ளைங் ஸ்பர் காரை வைத்திருக்கிறார், இது அவருக்கு ஒப்பற்ற வசதி மற்றும் ஆடம்பரத்திற்கான காராக இருக்கிறது. இந்த வாகனம் ஒரு அற்புதமான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது, சிறந்த தொழிற்நுட்பத்துடன் நேர்த்தியை இணைத்து ஒவ்வொரு பயணத்தையும் நினைவில் கொள்ளும்வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது

கோஹ்லியின் தொகுப்பில் உள்ள லிமிடெட் எடிசன் மாடல்களில் ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் கார் இருக்கிறது. இந்த பிரத்யேக எடிசன் அவரது பிரமிக்க வைக்கும் கார் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. தனித்துவமான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களுக்கான அவரது விருப்பத்தை இந்த கார் காட்டுகிறது.
ஆடி கியூ8 என்பது கோஹ்லி சொந்தமாக வைத்திருக்கும் மற்றொரு வாகனம், இதை அவர் அடிக்கடி ஓட்டுவதை காண முடியும். ஆடி இந்தியாவின் பிராண்ட் தூதராக, இந்த மாடலுடனான அவரது தொடர்பு ஸ்டைல் மற்றும் செயல்பாடு இரண்டையும் வழங்கும் பிரீமியம் வாகனங்களுக்கான அவரது விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விராட் கோஹ்லியின் கார் தொகுப்பு உயர் செயல்திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் ஆடம்பரமான ரைடிங்கிற்காக அவரது லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அவரது கேரேஜில் உள்ள ஒவ்வொரு காரும் அழகு, பவர் மற்றும் தனிப்பட்ட சுவையை சொல்கிறது, கிரிக்கெட் மைதானத்திற்குள்ளே மற்றும் வெளியே இரண்டிலும் அவரது வெற்றியை பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications









