இந்தியாவில் விற்கப்படும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்.. அவரோட ஃபேனாலேயே இத நம்ப முடியல!
இந்தியாவில் விற்கப்படும் விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் ரேஞ்ஜ் ரோவர் வெலார் (Range Rover Velar)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலையே பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் வாங்கி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர் ஐபிஎல் டீமைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் இவரே அந்த சொகுசு காரை வாங்கியவர் ஆவார். வலது பந்து வீச்சாளரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
29 வயதே ஆன இவர் தற்போது கிரிக்கெட் விளையாட்டிற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் பெயர்போன நபராக மாறி இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் லேட்டஸ்ட் கார் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மேலும், இந்த கொள்முதலை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அந்த புதிய சொகுசு வாகனத்துடன் போஸ் கொடுக்கும் படங்களை பகிர்ந்திருக்கின்றார்.

அந்த ரேஞ்ச் ரோவர் வெலார், வெள்ளை நிறத்திலும், பளபளப்பான கருப்பு முன் கிரில் மற்றும் கூரையுடன் கவர்ச்சியாக் காட்சியளிக்கின்றது. இது ஒரு உயர்நிலை எஸ்யூவி (SUV) ஆகும். இந்தியாவில் இந்த சொகுசு கார் ரூ. 87.90 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ரேஞ்ச் ரோவர் வரிசையிலேயே இதுவே மிகவும் விலை குறைவான மாடல் ஆகும். அதேவேளையில், பிரீமியம் அம்சம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் உள்ளிட்டவற்றில் இந்த கார் தான் ஒரு ஆரம்ப நிலை மாடல் என்பதை வெளிக்காட்டாமல், ஓர் ஆடம்பர ரகம் என்பதையே காட்டுகின்றது.
இத்தகைய பிம்பத்தை அது வழங்குகின்ற காரணத்தினாலேயே கிரிக்கெட் வீரர் அதை வாங்கி இருக்கின்றார். இவர் மட்டுமல்ல இவரை போல இன்னும் பலர் இந்த சொகுசு கார் மாடலைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் மாடலாக இது உள்ளது.
ரேஞ்ச் ரோவர் வெலாரின் உட்புறத்தில் நவீன கால சிறப்பம்சங்கள் பல வழங்கப்பட்டுள்ளன. இரட்டை தொடுதிரை சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஆப்பிள் கார் ப்ளே (Apple CarPlay) மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) இணைப்பு வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், கன்னெக்ட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 4ஜி ஒய்-ஃபை (4G Wi-Fi) ஹாட்ஸ்பாட், நேவிகேஷன் ப்ரோ, ஆம்பியன்ட் மின் விளக்குகள் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த சொகுசு கார் மாடலில் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் லேசான ஹைபிரிட் அம்சத்துடன் கூடிய 2.0-லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷன் இவையே இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் 247 எச்பி மற்றும் 365 என்எம் டார்க்கையும், டீசல் இன்ஜின் 201 ஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வழங்கும். திறனைக் கொண்டிருக்கின்றன.
இரண்டு மோட்டார்களிலும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. மேலும், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். இதுதவிர இந்த காரால் 530 மிமீ ஆழமுள்ள நீர் நிலையிலும் பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட காரையே தற்போது வெங்கடேஷ் வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர்கள் பலர் மிகப் பெரிய சொகுசு கார் பிரியர்களாக இருக்கின்றனர். இதையே வெங்கடேஷ் ஐயரின் செயலும் நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இவர் வாங்கி இருக்கும் இந்த கார் ஆன் ரோடில் கோடியை நெறுங்கும். இதனால்தான் அவர் இந்த காரை வாங்கிய நிகழ்வு அவருடைய ஃபேன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








