இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... அதிர வைக்கும் உண்மையை சொன்ன அரசு அதிகாரி...

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை ஒன்று இருப்பதாக அதிர வைக்கும் உண்மையை அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் (Coronavirus - COVID-19) பீதி தற்போது ஒட்டுமொத்த உலகையே ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் தற்போது வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் சுமார் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் பணிகளும் நடக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முதல் பலி நிகழ்ந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதியவர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பற்றி நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பலரும் தற்போது முகத்தில் மாஸ்க் அணிந்தபடிதான் நடமாடுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது நல்லதுதான். அதில், சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் சாலை விபத்துக்களில் உயிரிழப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம்மில் எத்தனை பேர் ஹெல்மெட் அணிகிறோம்? ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதும் வேதனையான விஷயம்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 4,67,044 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 1,51,417 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 4,69,418 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸை விட சாலை விபத்துக்கள் எவ்வளவு அபாயகரமானவை? என்பதை இந்த புள்ளி விபரங்கள் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 0.46 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இந்தியர்களுக்கு பெரிய அளவில் இல்லை. இது உண்மை என்பதால்தான், இவ்வளவு அதிகமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். இங்கு ஏராளமானோர் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர். குடிபோதையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதும் இங்கு ஏதோ சாதாரண ஒரு விஷயம் போல் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

இதுதவிர டூவீலர்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியும் பழக்கம் இங்கு கிடையவே கிடையாது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த விதிமுறையை பின்பற்றுகிறோம்? என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் தற்போது உள்ளோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ் நெய்ன் என்பவர் அப்படி ஒரு கேள்வியைதான் சமீபத்தில் எழுப்பியுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் கடந்த மார்ச் 4ம் தேதி ஒரு ட்விட் செய்யப்பட்டிருந்தது. அதில், ''இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடனேயே மக்கள் மாஸ்க் அணிந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

ஆனால் இந்தியாவில் சாலை விபத்துக்களால் தினமும் 400 பேர் உயிரிழந்து வருகின்றனர். அப்படி இருந்தும் கூட ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை. வைரஸ் என்றாலும், சாலை விபத்து என்றாலும் பாதுகாப்புதான் காப்பாற்றும்'' என்கிற ரீதியில் கருத்து கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

தற்போது சமூக வலை தளங்கள் அனைத்திலும் இந்த டிவிட் வைரலாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நெய்ன் வெளியிட்ட டிவிட்டை நீங்கள் கீழே காணலாம் (குறிப்பு: இது கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்ட டிவிட். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது).

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

பங்கஜ் நெய்ன் ஐபிஎஸ் டிவிட்டர் மூலம் தொடர்ச்சியாக சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தற்போதும் கூட அவர் சரியாகதான் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே கூறியது போல, இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு தோராயமாக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

அப்படியானால் நாள் ஒன்று சுமார் 410 பேரின் உயிரை சாலை விபத்துக்கள் பறிக்கின்றன. ஆனால் இன்னமும் வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படாதது வருத்தமே. இந்தியாவில் வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கு பயந்து கொண்டு தற்போது வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு போக்குவரத்து விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

ஆனால் தமிழகத்தில் நிலைமை மேம்பட்டது போல தெரியவில்லை. இங்கு இன்னமும் ஏராளமானோர் தலை கவசம் அணியாமல்தான் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்து கொண்டுள்ளனர். ஹெல்மெட்டுடன் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை காண்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகட்டும் அல்லது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள் ஆகட்டும், ஒரு அரசாங்கம் என்னதான் முயற்சி செய்தாலும், பொதுமக்களாகிய நமது பங்களிப்பும் அதற்கு மிகவும் அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டிய நேரமிது.

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை... உண்மையை சொன்ன அரசு அதிகாரி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க மாஸ்க் அணிவது, பிறருடன் கைகுலுக்குவதை தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவையும் மிகவும் முக்கியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
IPS Officer Pankaj Nain's Coronavirus-Helmet Awareness Tweet Goes Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X