ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் பற்றி ரகசியங்கள் வெளியானது! விபத்திற்கான காரணம் என்ன?

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த சக பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் உயிரிழந்த நிலையில், இந்த ஹெலிகாப்டர் குறித்த சில முக்கியமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

ஈரான் நாட்டின் 8வது அதிபராக இருந்தவர் இப்ராஹிம் ரெய்சி. இவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில் மிகப்பெரிய வாக்குகளை பெற்று அந்நாட்டின் அதிபராக மாறினார். இந்நிலையில் இவர் நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

iran president helicopter crash

ஒரு நாட்டின் அதிபர் விமான விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த பயணத்திற்காக ஈரான் அரசு பெல்212 என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டரை பயன்படுத்தி இருந்தது. இந்த ஹெலிகாப்டர் தான் தற்போது விபத்தில் சிக்கி உள்ளது. விபத்து குறித்த காரணம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி அதிக பணி மூட்டத்திற்கு இடையே ஹெலிகாப்டர் பயணித்ததாகவும் குறுக்கே மலை இருந்தது தெரியாமல் மலையில் மோதி இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த பெல் 212 ஹெலிகாப்டரை பற்றி பார்க்கும் போது இது இரண்டு பிளேடு கொண்ட மீடியம் சைஸ் ஹெலிகாப்டர் ஆகும். கடந்த 1968 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு பறக்க விடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தின் ஆலையில் தான் இந்த ஹெலிகாப்டர் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பு கனடா நாட்டிற்கு மாற்றப்பட்டுவிட்டது.

iran president helicopter crash

1986 ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர்கள் கனடா நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த பெல் 212 ஹெலிகாப்டரை பொறுத்தவரை இரண்டு இன்ஜினில் இயங்கும் ஹெலிகாப்டராக இருக்கிறது. இது போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான ஹெலிகாப்டர் தான். 1960களில் கனடா அரசுடன் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பெல் 205 என்ற ஹெலிகாப்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வெல்212 என்ற ஹெலிகாப்டரின் வடிவமைப்பு என்பது இத்தாலி ஏபி 212 லைசென்ஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டராக இருக்கிறது. இது பெல்ட் 205 ஹெலிகாப்டரின் வடிவமைப்பு போலவே தான் இருக்கும். ஆனால் இதில் பயணிகள் அமரும் இடம் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல பெல் 205 ஹெலிகாப்டரில் ஒரே இன்ஜின் தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பெல் 212 ஹெலிகாப்டரில் இரண்டு சிறிய இஞ்சின்கள் வழங்கப்பட்டிருக்கும்.

iran president helicopter crash

இந்த பெல்ட் 212 ஹெலிகாப்டரில் இரண்டு இன்ஜின்கள் இருந்தாலும், இரண்டு இன்ஜின்களும் ஒரே கியர் பாக்ஸில் பவரை செலுத்தி அதன் மூலம் தான் ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது. மற்றபடி இந்த பெல் 21 ஹெலிகாப்டரில் பெரும்பாலான உதிரிபாகங்கள் பெல்ட் 205 ஹெலிகாப்டர் தயாரிக்கும் போது என்ன இருந்ததோ அதே உதிரிபாகங்கள் தான் இருக்கிறது. முக்கியமாக டெயில் ரோட்டார் உள்ளிட்ட அனைத்தும் ஒரே வடிவமைப்பில் தான் உள்ளன.

இந்த ஹெலிகாப்டரில் இரண்டு இஞ்சின்கள் இருந்தாலும் இரண்டு இஞ்சினும் ஒரே கியர்பாக்ஸில் பவரை செலுத்துவதால் இந்த இரண்டு இன்ஜினும் சேர்த்து 1800 எஸ்எச்பி அல்லது 1342 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இன்ஜின் 900 எஸ்எச்பி அதாவது 671 கிலோ வாட் பவரையும் மற்றொரு இன்ஜின் 765 எஸ்எச்பி அதாவது 571 கிலோ வாட் பவரையும் தனித்தனியாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

iran president helicopter crash

இந்த ஹெலிகாப்டரில் ஒரு இன்ஜின் செயல் இழந்தாலும் மற்றொரு இன்ஜின் மூலம் இந்த ஹெலிகாப்டர் தாராளமாக இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை இந்த இன்ஜின் இயங்கி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்காமல் பத்திரமாக அருகில் உள்ள தடத்தில் தரையிறங்க உதவும்.

இந்த ஹெலிகாப்டரில் ஒரு பைலட் உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சம் 190 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் ஒரு தடவை எரிபொருளை நிரப்பினால் 439 கிலோமீட்டர் தூரத்தை எளிதாக கடந்து சென்று விடும். மேலும் இந்த ஹெலிகாப்டர் பூமியிலிருந்து 17,400 அடி உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த ஹெலிகாப்டர் ஒரு நிமிடத்திற்கு 1745அடி உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் இதுவரை பெரிய அளவிலான விபத்துகளில் எதுவும் சிக்கவில்லை. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதுதான் முதன் முறையாகும். இவருடன் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஓசைஅமீர் அப்துல்லாஹ்வின் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் கவர்னர் மாலிக் ரஹ்மான் கிழக்கு அஜர்பைஜான் அதிபர் முகமது அலி அல்ஹாசிம் ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெலிகாப்டர்கள் என்பது விமானங்கள் போல பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சில கடுமையான சூழ்நிலைகளிலும் எளிமையாக கடந்து செல்ல முடியும் என்பதால் பலர் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அடிக்கடி ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் இனி தான் தெரிய வரும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 13:23 [IST]
English summary
Iran president helicopter crash bell 212 details know more about
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X