புலியை நேரில் பார்க்க வேண்டுமா? ஐஆர்சிடிசியின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்! எங்கே கூட்டிட்டு போறாங்க தெரியுமா?

தாய்லாந்து பட்ஜெட் டூர் பேக்கேஜைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) அறிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு டூர் பேக்கேஜ் மற்றும் அதற்கான கட்டணம்குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

புலி, யானை, மான் போன்ற அரிய வகை காட்டு விலங்குகளை நேரடியாக காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது ஐஆர்சிடிசி. ஆமாங்க, ஐஆர்சிடிசி உள்நாட்டில் உள்ள ஓர் முக்கிய நேஷனல் பார்க்கிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய பேக்கேஜையே தற்போது அறிவித்திருக்கின்றது. நம்மில் ஒரு சிலர் ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) என்றால் வெறும் ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்யும் செல்போன் செயலி மட்டுமே என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதுதான் இல்லை.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

ஐஆர்சிடிசி பட்ஜெட் கட்டணத்தில் சுற்றுலா அழைத்துச் செல்லும் பணிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அது லேட்டஸ்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ஹா நேஷனல் பார்க் (Kanha National Park) -கிற்கு டூர் அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் நிச்சயம் காண வேண்டிய ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்டாக கன்ஹா நேஷனல் பார்க் உள்ளது.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

இந்த இடத்திற்கே நான்கு பகல், 3 இரவுகள் டூர் அழைத்து செல்கின்றது ஐஆர்சிடிசி. இதற்கு ஆரம்பக் கட்டணமாக ரூ. 25,795 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிராவல் இன்சூரன்ஸ் மற்றும் பிற ஏற்பாடுகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். அதாவது, தங்குதல், சாப்பாடு மற்றும் குளிர்பானம் உள்ளிட்டவை இந்த கட்டணத்தில் அடங்கும்.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

மூன்று விதமான பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி அறிவித்திருக்கின்றது. தனி நபர், இருவர் ஷேரிங் மற்றும் மூவர் ஷேரிங் ஆகிய பேக்கேஜ்களையே அது அறிவித்திருக்கின்றது. இதேபோல், ஐந்து வயது முதல் 11 வயதுடையவர்களுக்கு ரூ. 9,295 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

தி பாஹ் - கன்ஹா நேஷனல் பார்க் எனும் பெயரிலேயே இந்த டூரை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியிருக்கின்றது. டூர் தொடங்கும் இடம் ராய்பூர் ஆகும். இந்த டூருக்கு செல்ல விரும்புவர்கள் ஐஆர்சிடிசி-யின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக டிக்கெட்டை புக் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஐஆர்சிடியி-யின் அலுவலகங்களிலும் நம்மால் டிக்கெட்டை புக் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

தற்போது கன்ஹா நேஷனல் பார்க் டூர் பேக்கேஜை அறிவித்திருப்பதைப் போலவே மிக சமீபத்தில் ஐஆர்சிடிசி, தாய்லாந்து டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியது. பட்ஜெட்டில் வெளிநாடு டூர் செல்வோரை ஈர்க்கும் வகையில் இதையும் குறைவான கட்டணத்தில் அறிமுகம் செய்தது, ஐஆர்சிடிசி.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

இந்த டூர் விமானத்தின் வாயிலாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றது. டூருக்கான ஆரம்ப கட்டணம் ரூ. 47,775 ஆகும். ஐந்து பகல் மற்றும் ஆறு இரவுகளுக்கான கட்டணம் இதுவாகும். இந்த பேக்கேஜின் வாயிலாக தாய்லாந்தின் முக்கிய பகுதிகளான பட்டாயா மற்றும் பேங்காக் ஆகியவற்றிற்கு ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருக்கின்றது.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

சேண்டி பீச்சை பார்வையிடுதல், கோரல் தீவு விசிட், அல்கஸார் ஷோ, கோல்டன் புத்தா சிலையை சுற்றிப் பார்த்தல் மற்றும் தாய் மசாஜ் உள்ளிட்டவை இந்த பேக்கேஜில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, தங்கும் வசதி, உணவு, உள்ளூர் பயணங்கள், விமான பயணம் (அப் அண்ட் டவுன்) மற்றும் பயண காப்பீடு ஆகியவையும் பேக்கேஜில் அடங்கும்.

புலியை நேரில் பார்க்க வேண்டுமா?.. ஐஆர்சிடிசி-யின் புதிய பட்ஜெட் டூர் பேக்கேஜ்... எவ்வளவு தெரிஞ்சா இப்பவே ஒரு டிக்கெட்ட போட்ருவீங்க!

இந்த டூர் ஆகஸ்டு 11ம் தேதி மணிபூர் இம்பாலாவில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. ஏர் இந்தியா விமானத்தின் வாயிலாகவே டூர் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றது. அனைத்து பயணிகளும் கொல்கத்தாவில் ஒன்றிணைக்கப்பட்டு அங்கிருந்தே அனைவரும் வான் வழியாக பாங்காக் டூர் புறப்படுவர். இத்தகைய சூப்பரான டூர் பேக்கேஜைத் தொடர்ந்தே புதிய டூர் பேக்கேஜையும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Article Published On: Thursday, June 30, 2022, 8:30 [IST]
English summary
Irctc announced kanha national park tour package
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+