கடைசி நேரத்தில் கேன்சலான டிக்கெட்! ரூ20,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஐஆர்சிடிசி கடைசி நேரத்தில் புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ததால் அவருக்கு ரூபாய் 20,000 நஷ்ட ஈடு வழங்கும் படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதற்கு பிடித்தம் செய்யப்பட்ட பணத்தையும் சேர்த்து வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் குர்ஷித் பேகம் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி ஹவுரா ஸ்பெஷல் ரயிலில் செகந்திராபாத்தில் இருந்து விஜயநகரம் என்ற பகுதிக்கு செல்வதற்காக ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தார். இவர் ரயில்வே டிக்கெட் புக் செய்யும் போது ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இருந்தது. ஆனால் அவருக்கு எந்த விதமான சீட்டுகளும் ஒதுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பயண தேதி வந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் ரயில்வே பிளாட்பாரத்திற்கு சென்று ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். ரயில் குறிப்பிட்ட பிளாட்ஃபாரத்துக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இவருக்கு ஆட்டோமேட்டிக் போன் கால் ஒன்று வந்தது. அதில் இவர் புக் செய்த டிக்கெட்டை ஐஆர்சிடிசி கேன்சல் செய்து விட்டதாக குறிப்பிட்டு கால் கட் ஆகிவிட்டது.
தனக்கு உறுதியாக வழங்கப்பட்ட டிக்கெட் கேன்சல் ஆனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்வதற்காக ஐஆர்சிடிசி தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். . ஆனால் அங்கிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தார்.

வேறு ரயிலில் டிக்கெட் புக் செய்ய முயற்சித்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் இவர் வேறு வழியில்லாமல் ரூபாய் 4,200 செலவு செய்து சாதாரண பஸ்ஸில் பயணம் செய்தார். குறிப்பிட்ட நாள் பண்டிகை காலம் என்பதால் அதிக அளவில் பஸ் டிக்கெட் விலை இருந்தது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காகவும் மன உளைச்சலுக்காகவும் நஷ்ட ஈடு கேட்டு இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அப்பொழுது இவர் டிக்கெட்டிற்காக ரூ 6470 செலுத்தியதாகவும், ஆனால் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதால் ரூபாய் 470 பிடித்தம் செய்யப்பட்டு பாக்கி ரூபாய் மட்டுமே இவருக்கு கிடைத்ததாகவும், இதனால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகை காகவும் தனது ஏற்பட்ட மன உளைச்சலை சரி செய்வதற்காகவும் நஷ்ட ஈடு வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஐஆர்சிடிசி தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. அதனால் நீதிபதிகள் இந்த வழக்கில் உள்ள முகாந்திரத்தை புரிந்து கொண்டு குர்ஷித் பேகம் மீது நியாயம் இருப்பதால் ஐஆர்சிடிசி நிர்வாகம் குர்ஷித் பேக்கத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், மேலும் அவர் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டபோது பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 470-ம் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐஆர்சிடிசி சேவையால் குஷித் பேகம் பாதிக்கப்பட்டுள்ளது உணர்ந்த நீதிமன்றம், இவ்வாறான உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது இந்த செய்தி தொடர்ந்து ரயில் பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் டிக்கெட் புக் செய்யும் போது சில நேரங்களில் சீட் ஒதுக்கப்படாமல் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்படும்.
கடைசியாக அந்த ரயிலுக்கான சார்ட் தயாராகும்போது அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு முக்கியமான காரணம் குறிப்பிட்ட ரயில் டிக்கெட் விலை கடைசி நேர விஐபிகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ரயில்களில் இப்படியாக விஐபிகள் பயணிப்பதில்லை. அதனால் அந்த டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு சீட்டு ஒதுக்கப்படாத பயணிகளுக்கு வழங்குவார்கள்.
இப்படியாக ஐஆர்சிடிசி இணையதளம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்பட்ட ஏதாவது பிழையால் இப்படியாக இவர்கள் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதால் குர்ஷித் பேகம் தனது குடும்பத்தினருடன் அவஸ்தி பட்டுள்ளார். இதனால் இவருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்களில் தொடர்ந்து பயணிப்பவர்கள் நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்யப்படும்போது உங்களுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்படவில்லை என்றால் உங்களது டிக்கெட் கேன்சலாக வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடனடியாக நீங்கள் டிக்கெட் கேன்சல் ஆனால் வேறு எதில் பயணிக்கலாம் என்பதையும் பார்த்து வைத்துக் கொள்வது உங்களுக்கு சிரமத்தை குறைக்கும்.


Click it and Unblock the Notifications









