ரயில் டிக்கெட் புக் பண்ணும் போது பெண்ணிற்கு பதில் ஆண் என புக் செய்துவிட்டால் என்ன செய்வது?
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்யும் பயணிகள் பல டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது பயணிகளின் பாலினத்தை மாற்றி தேர்வு செய்து விடுகின்றனர். இதனால் தவறான பாலினத் தேர்வுடன் டிக்கெட்டுகள் புக் ஆகிவிடுகிறது. இப்படியான புக்கான டிக்கெடுகளில் பாலினத்தை எப்படி மாற்றுவது என பலர் யோசித்து வருகின்றனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் விலை முன்பதிவு செய்த பெட்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி என்ற தளம் துவங்கப்பட்டு அது தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஐஆர்சிடிசி தலைவர் ஆன்லைன் டிக்கெட் விலை புக் செய்ய முன் பதிவு செய்தவர்கள் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் பயணிகளின் பாலினத்தை தேர்வு செய்வதில் செய்யும் தவறு தான். குறிப்பாக தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது அவசரத்தில் பாலினத்தை மாற்றி தேர்வு செய்து விடுகிறார்கள். இப்படியாக பாலினத்தை மாற்றி தேர்வு செய்தால் அந்த தேர்வை மாற்றும் ஆப்ஷன் ஆன்லைனில் இதுவரை கொண்டு வரப்படவில்லை.
அப்படி என்றால் பாலினத்தை மாற்றி தேர்வு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பாலினத்தை மாற்றுவது என்பது சாத்தியமே இல்லையா என நீங்க கேட்கலாம். இதைப்பற்றி தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம். முதலில் ரயில்வே டிக்கெட்களில் பாலினம் என்பது முக்கியமா என்பதை பார்ப்போம். ரயில்வே டிக்கெட் பாலினம் என்பது மிக முக்கியமான விஷயம் தான். பாலினம் தவறாக தேர்வு செய்யப்பட்டிருந்தால் அந்த டிக்கெட் செல்லாமல் கூட போக வாய்ப்பு உள்ளது.

ஆனால் இது அடிக்கடி மக்களால் செய்யப்படும் ஒரு பிழை என்பதால் பல டிடிஆர்களுக்கு இந்த விஷயம் தெரியும். அதனால் அவர்கள் பெயர் சரியாக இருந்தாலே பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் டிடிஆர் இதை மறுப்பதற்கும் உரிமை உண்டு. . இதனால் நீங்கள் பாலினத்தை தவறாக தேர்வு செய்திருந்தால் உடனே அதை மாற்றி விடுவது தான் நல்லது. ஆன்லைனில் தான் அதற்கான ஆப்ஷன் இல்லையே எப்படி மாற்ற முடியும் என நீங்கள் கேட்கலாம்.
இப்படியாக நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட் எடுக்கும் போது பாலினத்தை மாற்றி தேர்வு செய்து விட்டீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு யாருடைய பெயர் பாலின மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மற்றும் அவர்களுடைய தேசிய அடையாள அட்டையுடன் அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும்.

அங்குள்ள ரிசர்வேஷன் கவுண்டரில் நடந்த பிழையை கூறி இப்படியாக பாலின மாற்றி தேர்வு செய்யப்பட்டு விட்டது எனக் கூறி சரியான பாலினத்தை அடையாளம் காட்டுவதற்காக உரிய நபர் தேசிய அடையாள அட்டையுடன் சென்றால் அவர்கள் அதை செக் செய்துவிட்டு பாலினத்தை மாற்றி குறிப்பிட டிக்கெட்டில் எழுதிக் கொடுப்பார்கள் அதை காண்பித்து நீங்கள் பாலின மாற்றப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதற்காக ரயில்வே நிர்வாகம் எந்த விதமான கட்டணத்தையும் வசூலிப்பதில்லை உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இதை அவர்கள் ஒரு சேவையாக மட்டுமே வழங்கி வருகிறார்கள். பலர் இவ்வாறாக தவறுகளை செய்வதால் இந்த முறையில் டிக்கெட்டில் பாலின மாற்றத்தை செய்து வருகிறார்கள். நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பாகவே இந்த பாலின மாற்றத்தை செய்து விட வேண்டும்.

முன்னரே சொன்னது படி ஆன்லைனில் இதை மாற்ற ஆப்ஷன் எதுவும் இல்லை. சில ரயில்களில் டிடிஆர் பரிசோதனை செய்யும் போது இப்படியாக வாழ்ந்த மாற்றப்பட்டது தெரிந்தால் அவர்கள் பெயரைப் பார்த்து பாலினத்தை உறுதி செய்து நடந்த தவறை புரிந்து கொள்வார்கள். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வேறு மொழி மாநிலக்காரர்கள் வரும்போது பெயரில் உள்ள பாலினத்தை அவர்களால் அடையாளம் காண முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் விலை புக் செய்யும் போது நிச்சயம் கவனத்துடன் புக் செய்ய வேண்டும். தவறாக புக் செய்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு சென்று புக்கிங் கவுண்டரில் உங்கள் தவறை சொல்லி அதற்கான திருத்தங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்க டிக்கெட் பரிசோதனைக்கு முழு அதிகாரம் உள்ளது.


Click it and Unblock the Notifications









