இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

Written By:

ரயில்வே உயரதிகாரிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த சலூன் ரயில் பெட்டிகளை இனி பொதுமக்களும் பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் ரயில்வே உயர் அதிகாரிகள், விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக சலூன் என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை பயன்படுத்தி வருகிறது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

தற்போது ஐ.ஆர்.சி.டி.சி., 62 ஏசி சலூன் பெட்டி உட்பட 336 சலூன் பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட ஐ.ஆர்.சி.டி.சி., முடிவு செய்துள்ளது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்பு முதல் ரயில் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு சுமார் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

இதன் படி இந்த பெட்டியில் செல்ல ரூ 2 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ 2 லட்சம் வரை செலவு செய்து செல்ல இந்த பெட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது? அந்த ரயில் பெட்டியில் உள்ள வசதிகளை கீழே காண்போம்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

1. இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதிகளுடன் கூடிய 2 பெட்ரூம், பெரிய ஹால் அதிலேயே டைனிங் டேபிள் வசதி ஆகியன உள்ளது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

2. இதில் சிறிய சமையலறையும் உள்ளது. அதுமட்டுமல்லாது இது ரயிலில் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் இதின் பின்புறம் ஒரு ஜன்னல் இருக்கும் அதை திறந்தால் நல்ல வியூ கிடைக்கும்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

3. இந்த பெட்டியில் பணியாட்கள் சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி., வழங்குகிறது. அதற்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படும்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

4. இந்த பெட்டியில் இரண்டு குடும்பங்கள் 5 நாள் தங்குவதற்கான எல்லா வசதிகளும் உள்ளது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

5. பெரிய ஒட்டலில்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த ரயில் பெட்டியில் வழங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் வழங்குகிறது.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

6. இதில் பயணிகள் தொந்தரவில்லாத பயணத்தை பெற ஏ.சி., மெக்கானிக், மற்றும் ரயில் பெட்டிக்கு ஒரு உதவியாளரும் உடன் இருப்பர்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

7. இந்த வசதியை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்

நீங்களும் உங்கள் குடும்பத்தடனோ அல்லது நண்பர்களுடனோ இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஐ.ஆர்.சி.டி.சி.,யை தொடர்புகொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஆக்டிவா பிரண்ட் ஃபோக்ஸில் குறைபாடு உள்ளதாம்..! ; இலவசமாக மாற்றி தருகிறது ஹோண்டா

02.புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

03.புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

04.விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

05. 4 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல் விலையேற்றம் காரணம் என்ன?

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
IRCTC Launches Luxury Railway Saloon Coach For Public. Read in Tamil
Story first published: Tuesday, April 3, 2018, 13:17 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark