ஒரே நேரத்தில் இவ்வளவு டிக்கெட் தான் புக் செய்ய முடியுமா? பாதிப் பேருக்கு இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதே தெரியாது

இந்திய ரயில்வே புக்கிங்கில் பல விதிமுறைகள் இருக்கிறது.பலருக்கு இப்படியான விதிமுறைகள் இருப்பது முற்றிலும் தெரியாது. இப்படியான தகவல்களைத் தான் இங்கே ஒன்றொன்றாகப் பார்க்கப்போகிறோம். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் ஏராளமான ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கின்றனர். பொதுவாக ரயில் டிக்கெட் என்றால் குறைந்த விலையில் இருக்கும் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரயில்களில் எத்தனை வகையில் டிக்கெட் இருக்கிறது. அதை எடுப்பதில் என்னென்ன டெக்னிக் இருக்கிறது. இப்படியாகப் பல விஷயங்கள் பலருக்குத் தெரியாது. அந்த தகவல்களைத் தான் விரிவாகக் காணப்போகிறோம்.

பொதுவாக ரயில் ஒன்றாக இருந்தாலும் அதில் ஜெனரல், சிலீப்பர், ஏசி என 3 வகை பெட்டிகள் உள்ளன.ஜெனரல் கோச்சில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி இருக்கும். அதுவும் பயணிகளுக்கு அங்குக் கண்டிப்பாக இத்தனை சீட்கள் தான் என்ற உறுதியும் கிடையாது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற ரீதியில் இங்கு சீட்டிங் முறை இருக்கும் மற்ற பயணிகள் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டும். இந்த பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ரயில் கிளம்பும் முன் ரயில் நிலையத்திலேயே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

மற்ற 2 கோச்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். சிலீப்பர் கிளாஸ் பெட்டியில் இரவு மணி முதல் காலை 6 மணி வரை பயணிகள் படுத்துக்கொண்டே பயணம் செய்ய ஏற்றதாக இருக்கும். இதில் லோயர், மிடில், அப்பர், சைடு லோயர், சைடு அப்பர் என சிலிப்பர் படுக்கைகள் இருக்கும். இதில் பயணிப்பவர்களுக்கு சீட் உறுதி செய்யப்படும்.

அடுத்ததாக ஏசி கோச்சை பொருத்தவரை மொத்தம் 3 வகையான ஏசி கோச்கள் உள்ளது. 3 டயர், 2 டயர், 1டயர் (கூபே) என இதில் உள்ள 3 டயர் என்பது சிலீப்பர் வகுப்பைப் போலவே இருக்கும் ஆனால் ஏசி வசதி கொண்டதாக இருக்கும். 2 டயரை பொறுத்தவரை மிடில் பெர்த் இருக்காது. 1 டயர் அல்லது கூபே கோச் தான் எக்ஸிக்யூட்டிவ் கோச் இதில் பயணிக்க விலை மிகவும் அதிகமாக இருக்கும். இது போக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு பொது கோச்சில் தனி கோச் வழங்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலையைப் பொருத்தவரை ஜெனரல் கோச்சில் தான் விலை குறைவாக இருக்கும். பஸ் டிக்கெட்டை விட இந்த கோச்சில் விலை குறைவாக இருக்கும். அடுத்தாக சிலீப்பர் கோச்சில் விலை சற்று கூடுதலாக இருக்கும். இந்த விலை கிட்டத்தட்ட பஸ் டிக்கெட் விலை அல்லது அதை விடக் குறைவான விலையில் இருக்கும். ஏசி பெட்டியில் விலை அதிகம் இருக்கும். அதுவும் குறிப்பாக 1டயர் ஏசி அல்லது கூபே என்றால் விலை விமான டிக்கெட்டை விட அதிகமாக இருக்கும்.

முன்பதிவு செய்யும் வாய்ப்புள்ள கோச்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு முறையில் மொத்தம் 6 டிக்கெட்டை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 6 டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஸ்பெஷல் வழிமுறைகள், விதிமுறைகள் உள்ளது. அதைப் பின்பற்றினால் மட்டுமே ஒரே முறையில் 6 டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்ய முடியும். டிக்கெட் விலையைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட வகுப்பு பெட்டிக்கு ஒரே விலை தான் இருக்கிறது.

இது போக இறுதி நேரத்தில் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு வசதியாக தட்கல் டிக்கெட் முறை இருக்கிறது. இந்த டிக்கெட் முறையில் ரயில் கிளம்புவதற்கு முந்தைய நாம் டிக்கெட் ஒப்பன் செய்யப்படும் ஏசி பெட்டிகளுக்குக் காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளுக்குக் காலை 11 மணிக்கும் டிக்கெட் ஓப்பன் செய்யப்படும். இந்த முறையில் டிக்கெட் செய்பவர்களுக்குச் சாதாரண முன்பதிவை விட இந்த முறையில் முன்பதிவு செய்பவர்களுக்குக் கூடுதல் விலை இருக்கும்.

தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய ஒரே டிக்கெட்டில் அதிகபட்சமாக 4 நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். இப்படியாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து கேன்சல் செய்தால் அதற்கான பணம் திருப்பி தரப்படமாட்டாது. இப்படியாக டிக்கெட் புக் செய்ய நேரடியாக ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுண்டரிலோ அல்லது ஆன்லைனில் ஐஆர்சிடிசி தளத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

ஐஆர்சிடிசி தளத்தில் ஒரே பதிவு செய்த நபர் ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட் வரை புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் அவர் அதற்கு அவருடைய ஆதார் ஐடியை இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லை என்றால் வெறும் 12 டிக்கெட்களை மட்டும் தான் புக் செய்ய முடியும். நீங்கள் அடுத்த சில மாதங்களுக்கு அதிகமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால் இந்த எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு டிக்கெட்களை புக்கிங் செய்யுங்கள். அதிகமாக டிக்கெட் தேவைப்படும் பட்சத்தில் தனித்தனி டிக்கெட்களாக ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Article Published On: Tuesday, February 7, 2023, 13:50 [IST]
English summary
Irctc maximum ticket booking rules and much more details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+