ரயிலில் பயணிக்கும் போது உணவுகளை இனி ஸோமாட்டோவில் ஆர்டர் போடலாம் எப்படி தெரியுமா?
ரயில் பயணிகளுக்கு ரயிலிலேயே உணவை டெலிவரி செய்ய ஸோமாட்டோ நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியா முழுவதும் உணவுகளை ஆர்டர் செய்யும் ஆப் பிரபலமாகி வருகிறது. பல முக்கிய நகரங்களில் இந்த ஆப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள எந்த கடையில் வேண்டுமானாலும் உணவை ஆர்டர் செய்தால் இந்த டெலிவரி நிறுவனம் அந்த கடையில் உள்ள உணவைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே கொண்டு இந்த உணவை டெலிவரி செய்கிறது.

இந்தத் துறையில் டொமேட்டோ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு நேரடியாக ரயில் சீட்டிலேயே ஸோமாட்டோநிறுவனம் உணவுகளை டெலிவரி செய்யும் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக ஐந்து முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டும் இந்த வசதியை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ரயில் நிலையங்களில் இனி ஸோமாட்டோ மூலம் உணவுகளை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் மூலம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது தற்போது பண்டிகை காலம் என்பதால் ஐஆர்சிடிசி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐஆர்சிடிசி கேட்டரிங் சர்வீஸ் பல முக்கிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் நபர்களுக்காக சிறப்பு உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஆர்சிடிசி வழங்கிய அறிக்கையின்படி : " ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்கும் விதமாக உணவு ஆர்டர் செய்யும் வகையில் பல விருப்ப தேர்வுகளை கொண்டு வரும் நோக்கில் ஐஆர்சிடி சி நிறுவனம் தற்போது ஸோமாட்டோ லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்டர் செய்யப்படும் உணவுகளை ஸோமாட்டோ நிறுவனம் இனி ரயில் பயணிகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் இதை ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் போர்டல் மூலம் ஸோமாட்டோ நிறுவனம் செய்யும் ஃப்ரூப் ஆஃப் கான்செப்ட் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 5 ரயில் நிலையங்கள் அதாவது புது டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர் லக்னோ மற்றும் வாரணாசி பகுதிகளில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐஆர்சிடிசி நிறுவனம் இ-கேட்டரிங் மூலம் ரயில் பயணிக்கும் பயணிகளுக்கு குறிப்பிட்ட உணவகங்கள் மூலம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி உணவுகளை டெலிவரி செய்ய வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ரயில் பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது அந்த பகுதியில் உள்ள லோக்கல் உணவுகளை ஆர்டர் செய்து ருசிக்க முடியும்.
இந்த சேவை ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இவ்வாறான சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவுகள் இந்தியா முழுவதும் ஒரே ரீதியிலாக இருப்பதால் அவர்களால் லோக்கல் உணவுகளை ருசிக்க முடியவில்லை, என்ற பிரச்சினை இதன் மூலம் தீர்வு கண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸோமேட்டோ நிறுவனம் இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ஐஆர்சிடிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ரயில் பயணிகளை குஷிப்படுத்தியுள்ளது. இனி ரயில் பயணிகள் விதவிதமான உணவுகளை ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்யலாம். இந்த சேவை தற்போது ஐந்து ரயில் நிலையங்களில் மட்டும் கிடைக்கிறது. இது படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களுக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications