மதுரை கறிதோசை, நெல்லை அல்வா இதெல்லாம் இனி ரயில்லேயே சாப்பிடலாம்!ஐஆர்சிடிசி கொண்டு வரப்போகும் செம திட்டம்

ஐஆர்சிடிசி நிர்வாகம் ரயில் நிலையங்களில் உள்ள தங்கள் உணவகங்களில் சீசனல், ரீஜினல், குழந்தைகளுக்கான உணவு, என வகையிலான ஆப்ஷகள் கொண்ட உணவுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் பயணத்தின் போது விதவிதமான உணவுகளைச் சுவைத்த மகிழலாம்.

இந்தியா முழுவதும் ரயில்வே நிலையங்களில் உணவுகளை விற்பனை செய்யும் உரிமை ஐஆர்சிடிசி நிறுவனத்திடம் இருக்கிறது. இந்நிறுவனம் நேரடியாகவும் வென்டர் மூலமும் உணவுகளைப் பயணிகளுக்காக விற்பனை செய்து வருகிறது. இதன் இந்நிறுவனம் எந்தெந்த உணவுகளை எவ்வளவு அளவுகளில் எந்த நேரத்தில், எவ்வளவு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்து வழங்கும்.

மதுரை கறிதோசை, நெல்லை அல்வா இதெல்லாம் இனி ரயில்லேயே சாப்பிடலாம்!ஐஆர்சிடிசி கொண்டு வரப்போகும் செம திட்டம்

இதன் மூலம் பயணிகளுக்கு நியாயமான தரமான, சுவையான உணவு கிடைக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் ஐஆர்சிடிசியில் கிட்டத்தட்ட பெரும்பாலான உணவகங்களில் ஒரே மாதிரியான உணவுகள் தான் விற்பனை செய்யப்பட்டு வந்தன. டிபன், சாப்பாடு, ஸ்நாக்ஸ் பெரும்பாலும் ஒரே மாதிரியான உணவுப் பட்டியல் தான் பெரும்பாலான ரயில் நிலையங்களில் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இதன் மெனுவை பெரிதாக்க வேண்டும் அதிகமான உணவு தேர்வுகள் வேண்டும் என மக்கள் விரும்பினர்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த கோரிக்கைக்கு தற்போது ஐஆர்சிடிசி செவி மடுத்துள்ளது. தற்போது அதன் உணவுப் பட்டியலில் சீசனல், ரீஜினல், பேபி உணவுகள் என சில புதிய உணவு மெனுக்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. அதன் படி தற்போது விற்பனையாகும் உணவுடன் எக்ஸ்ட்ராவாக சீசனல் உணவுகள் அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும் வகையான உணவுகள் அந்த காலத்தில் மட்டும் விற்பனை செய்யும் ஆப்ஷனை சேர்க்கவுள்ளது.

அடுத்தாக ரீஜினல் உணவுகளையும் சேர்க்கவுள்ளது. குறிப்பிட்ட ஊர்களில் குறிப்பிட்ட உணவு வகைகள் பிரபலமாக இருக்கும். ரயில் பயணிகள் அதையும் ருசிக்கும் வகையில் குறிப்பிட்ட ஊர்களில் ரிஜினல் உணவு ஏதாவது இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ள ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. மேலும் தற்போது உள்ள உணவுப் பட்டியலில் குழந்தைகளுக்கான உணவு எதுவும் இல்லை. அதனால் அதையும் சேர்த்துக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் நோயாளிகளுக்கான சிறப்பு உணவுகளும் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக நீரழிவு நோயாளிகளுக்கான சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது. நீரழிவு நோய் இருப்பவர்கள் அந்த உணவை வாங்கி சாப்பிடலாம். நீரழிவு நோயாளிகளுக்கான தேவையை அறிந்து அதற்குத் தகுந்தார் போல அந்த உணவு தயார் செய்யப்பட்டிருக்கும். அதன் மூலப்பொருட்களே நீரழிவு நோயாளிகளை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

இந்த திட்டத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவில் எந்த விதமான விலையேற்றமும் இல்லை. ஆனால் பிரத்தியேக உணவுகள் சாதாரண உணவுகளை விடச் சற்று விலை அதிகமாக இருக்கும். உதாரணமாக நீரழிவு நோயாளிகளுக்கான தோசை என்றால் அது சாதாரண தோசையை விடச் சற்று விலை அதிகமாக இருக்கும். அதே போலக் குழந்தைகள் உணவு மற்ற உணவை விட விலை அதிகமாக இருக்கும். இது மட்டும் தான் வித்தியாசம்.

பயணிகளின் பயண அனுபவம் இனிமையாகவும், சந்தோஷமாகவும் மன நிறைவாகவும் அமைய அவர்களுக்கு நல்ல உணவு முக்கியம் என உணர்ந்ததால் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. இது முதற்கட்டமாக வடகிழக்கு ரயில்வேயில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பின்னர் இது படிப்படியாக இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும். என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமான ரிஜினல் உணவுகள் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ஊருக்கும் குறிப்பிட்ட வகை உணவு பிரபலமாக இருக்கும். மதுரை கறி தோசை, பன் பரோட்டா, சேலம் தட்டோட்டை, நாமக்கல் வாத்துகறி, நெல்லை அல்வா, தூத்துக்குடி மக்ரூன் எனப் பல உணவுகள் பிரபலமாக இருப்பதால் இனி அந்தந்த ஊர் ரயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகங்களில் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Irctc plans to provide regional seasonal and customized food to the travellers
Story first published: Tuesday, November 29, 2022, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X