இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க.. விலையையே மாத்திட்டாங்க!

டீயோட விலை ரூ. 70-ஆ... பதிவு வைரலானதை அடுத்து சேவைக் கட்டணத்தை இந்திய ரயில்வேத்துறை ரத்து செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

ரயில் டிக்கெட்டை போலவே உணவையும் முன்பதிவின் வாயிலாக ஐஆர்சிடிசி அதன் பயணிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தேவைப்படுவோர் முன்கூட்டியே ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்யும்போது தங்களுக்கான உணவையும் புக் செய்து கொள்ள வேண்டும். டீ, காஃபி, காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு நேர உணவு அதன் மெனு நீண்டு காணப்படுகின்றது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

இந்த மெனு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமின்றி முன்பதிவு செய்யாதவர்களுக்கும் ஐஆர்சிடிசி விற்பனைக்கு வழங்குகின்றது. ஆனால், சற்று கூடுதல் கட்டணம் அதற்கு வசூலிக்கப்படும். அதாவது, சேவைக் கட்டணமாக உணவு பொருளின் விலையுடன் சேர்த்து கூடுதல் கட்டணமாக ரூ. 50 வரை வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணத்தையே சில உணவு பொருட்களுக்கு ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

அதேநேரத்தில் தின்பண்டம், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு நேர உணவு ஆகியவற்றின் விலையில் ரூ. 50 -கூடுதல் கட்டணம் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்யாமல் உணவை கோருவருக்கே இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும். அதேநேரத்தில் டீ மற்றும் காஃபி ஆகிய பானங்கள் உரிய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

டிக்கெட்டுடன் முன்கூட்டியே புக் செய்தவர்கள் மற்றும் புக் செய்யாதவர் என அனைவருக்கும் ஒரே விலையிலேயே இனி டீ, காஃபி விற்கப்பட உள்ளது. முன்னர், சேவைக் கட்டணமாக ரூ. 50 வரை இதற்கு வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த கட்டணத்தையே தற்போது ரயில்வேஸ் ரத்து செய்திருக்கின்றது. திரையரங்குகள் மற்றும் சில ஷாப்பிங் காம்ப்ளாக்ஸ்களில் சேவைக் கட்டணம் என்கிற பெயரில் பல மடங்கு கட்டணக் கொள்ளை செய்யப்பட்டு வருகின்றது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

இத்தகைய ஓர் செயலையே பிரீமியம் ரயில்களில் ஐஆர்சிடியில் மேற்கொண்டு வருவதாக சிலர் புகார்கள் எழுப்பிய வந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, பல மடங்கு அதிக சேவைக் கட்டணம் தின்பண்டங்களுக்கு ஐஆர்சிடிசி வசூலிப்பதாக அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்த புகார்களுக்கே ரயில்வேத்துறை தற்போது செவி சாய்த்திருக்கின்றது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

அண்மையில் ஓர் ஐஆர்சிடிசி பயனர், ரயில் பயணத்தின்போது தேநீர் ஒன்றை ஆர்டர் செய்திருக்கின்றார். அவர் ஆர்டர் செய்த 20 ரூபா டீ-க்கு சேவைக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்பட்டிருக்கின்றது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன அந்நபர், அந்த பில்லை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "20 ரூபா டீக்கு, 50 ரூபாய் சேவைக் கட்டணமா" என ஆதங்கத்துடன் கேள்வியை எழுப்பியிருந்தார்.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

இந்த பதிவே வைரலாகி தற்போது சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC)-னின் முந்தைய விதிமுறைகளின்படி, ஒரு நபர் தனது ரயில் டிக்கெட்டுடன் உணவை முன் பதிவை செய்யவில்லை எனில், பயணத்தின் போது கொடுக்கும் முன்பதிவில்லா ஆர்டர்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ. 50 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை முன் மொழிகின்றது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வந்தநிலையில் இந்த விதியிலேயே சில மாற்றங்கள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இனி அனைத்து பயணிகளுக்கும் குறிப்பிட்ட சில உணவுகளை ஒரே மாதிரியான விலையில் வழங்க இருப்பதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

அதேவேலையில், டிக்கெட்டின்போது புக் செய்யப்படாத சாப்பாடுகளுக்கு ரூ. 50 கூடுதலாக கட்டணமாக வசூலிக்கப்படும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ராஜ்தானி அல்லது துரந்தோ அல்லது சதாப்தி ரயிலில் 1ஏ அல்லது இசி வகுப்பில் பயணிப்பீர்கள் என்று வைத்துக் கொள்ளவும். இந்தநிலையில், நீங்கள் காலை உணவை ஆர்டர் செய்வீர்கள் எனில் ரூ. 190 -ம், ஈவ்னிங் ஸ்நேக்ஸிற்கு ரூ. 140ம், லஞ்சிற்கு ரூ. 290ம் மற்றும் டின்னருக்கு ரூ. 240ம் செலுத்த வேண்டியிருக்கும்.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

அதேவேலையில், இதே ரயில்களில் 2ஏசி, 3ஏ அல்லது சிசி வகுப்பில் பயணிப்பீர்கள் என்றால் காலை உணவிற்கு ரூ. 155ம், மதிய உணவிற்கு ரூ. 235ம், ஈவ்னிங் ஸ்நேக்ஸிற்கு ரூ. 140ம் மற்றும் இரவு உணவிற்கு ரூ. 185ம் செலுத்த வேண்டியிருக்கும். அனைத்து விலைகளும் சேவைக் கட்டணம் சேர்க்கப்பட்ட நிலையில் விற்கப்படும் விலை ஆகும்.

இனி ஐஆர்சிடிசி ரூ. 50 சேவை கட்டணம் வசூலிக்காது... ஒரே ஒரு பதிவைதான் போட்டாங்க விலையையே மொத்தமா மாத்திட்டாங்க!

இதுவே நீங்கள் முன்கூட்டியே டிக்கெட்டுடன் சேர்த்து உணவையும் புக் செய்திருந்தால் அந்தந்த விலையில் இருந்த ரூ. 50 குறைத்து வழங்கப்படும். அதாவது, சேவைக் கட்டணமின்றி வழங்கப்படும் என தெரிகின்றது. ரூ. 50 கூடுதல் கட்டணம் இல்லாத நிலையில் காலை உணவு ரூ. 155-க்கும், மதிய உணவு ரூ. 235க்கும், இரவு உணவு ரூ. 140க்கும் விற்கப்படுகின்றது.

Article Published On: Saturday, July 23, 2022, 17:19 [IST]
English summary
Irctc removes service charges for drinks
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+