விமானத்துல கூட இப்படிப்பட்ட வசதி இருக்காது! ஸ்டாலின் பயணித்த ரயில் இவ்வளவு சொகுசு வசதிகளா?

முதல்வர் ஸ்டாலின் இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தென்காசிக்குப் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சலூன் கோச்சில் பயணித்துள்ளார். இந்த கோச்சில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? இதில் சாதாரண மனிதர்களால் பயணிக்க முடியுமா? இந்த பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு? முழு விபரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம் வாருங்கள்.

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடக்கவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தென்காசிக்குச் சென்றுள்ளார். பொதுவாக ஸ்டாலின் பயணம் செய்ய வேண்டும் என்றால் விமானம் அல்லது காரில் தான் பயணத்தை மேற்கொள்வார். ஆனால் இந்த முறை வித்தியாசமாகத் தென்காசிக்கு ரயிலில் பயணித்துள்ளார். தூத்துக்குடி வரை விமானத்தில் பயணித்து அங்கிருந்து தென்காசிக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தாலும் அவர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்துள்ளார்.

விமானத்துல கூட இப்படிப்பட்ட வசதி இருக்காது! ஸ்டாலின் பயணித்த ரயில் இவ்வளவு சொகுசு வசதிகளா?

இவர் ரயிலில் பயணம் செய்வது குறித்துச் செய்த வந்த போது பலர் இவர் எந்தப்பெட்டியில் பயணிப்பார்? முதல் வகுப்பு ஏசி பெட்டியிலா? அங்கு சக பயணிகள் இருப்பார்களே என் கேள்வி எல்லாம் பலருக்கு எழுந்தது. இந்நிலையில் நேற்று அவர் பயணத்தைத் துவங்கிய போது அவர் பயணித்த பெட்டியின் புகைப்படங்கள் வெளியானது. அதில் தான் அவர் சலூன் பெட்டியில் பயணித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதை கேள்விப்பட்டதும் பலருக்கு ஆச்சரியம் ரயிலில் சிலீப்பர் பெட்டி, 3 டயர் ஏசி, 2 டயர் ஏசி, முதல் வகுப்பு ஏசி ஆகிய பெட்டிகளை தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சலூன் பெட்டி என்ன புதுயுக இருக்கிறதே எனத் தோன்றும்.

ரயில்வே நிர்வாகம் இந்த சலூன் கோச் சேவையை நீண்ட ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்த கோச் எல்லா நேரங்களிலும் ரயிலுடன் இணைக்கப்பட்டிருக்காது. மாறாக யாராவது இந்த சேவையை புக் செய்தால் மட்டுமே இணைக்கப்பட்டும். இந்த கோச் ஆரம்ப காலங்களில் ரயில்வே துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் பணி நிமித்தமாகப் பயணிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் நாட்டின் தலைவர்கள் சிலர் பாதுகாப்பான ரயில் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. இன்று பொதுமக்கள் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலூன் கோச் "ஹோம் ஆன் வீல்ஸ்" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதில் அதிக இட வசதி கொண்ட லிவ்விங் ரூம், 2 பெட்ரூம்கள், லிவ்விங் ரூமிலேயே அமர்ந்து சாப்பிடுவதற்கான டைனிங் டேபிள் வசதி, சமைப்பதற்கான கிச்சன், மேலும் அதிகமான பயணிகள் செல்வதற்கான 4 முதல் 6 பெர்த்கள், டிவி வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது குடும்பத்தினருடன் தனிமையாகப் பயணிக்க விரும்பும் மக்களுக்கும், ஹனி மூன் செல்லும் புதுமண தம்பதிகளுக்கும், அரசியல் தலைவர்கள் செல்வதற்கும்,முக்கியமான தொழிலதிபர்கள் செல்வதற்கும் ஏற்ற கோச்சாகும்.

இந்த கோச்சைப் பொதுமக்கள் உட்பட யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்யலாம். இதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஆன்லைனில் புக் செய்ய வேண்டும் என்றால் ஐஆர்சிடிசி தளத்திற்கு சென்று FTR புக்கிங்கை செய்யலாம். அல்லது நேரடியாக ரயில்வே ஸ்டேஷனிற்கு சென்றும் புக்கிங்கை செய்ய முடியும். இந்த கோச்சை புக் செய்வதற்கான பதிவு கட்டணமாக ரூ 2 லட்சம் செலுத்த வேண்டும். இது வெறும் பதிவு கட்டணம் மட்டுமே.

இந்த பதிவு கட்டணத்தில் ரூ25 ஆயிரம் செக்யூரிட்டி டெபாசிட்டாக வைத்துக்கொள்ளப்படும். அதன்பின்னர் பயணத்தின் போது இந்த கோச்சில் எத்தனைப் பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தது ஒரு நபருக்கான டிக்கெட்டை கணக்கிட்டு மீதம் உள்ள தொகையில் இந்த டிக்கெட் கட்டணம் கழிக்கப்படும். செக்யூட்டி டெபாசிட் தொகை பயணம் முடிந்ததும் புக் செய்வதர்கள் சோச்சிற்கு எந்த வித சேதமும் ஏற்படுத்தவில்லையென்றால் அது திரும்ப கொடுக்கப்படும். இது போக ரயில் டிக்கெட்டிற்கான கட்டணத்தில் 20 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த கோச்சில் புக் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 500 கி.மீராவது பயணிக்க வேண்டும். மேலும் இதில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் கட்டணம் முதல் வகுப்பு ஏசி கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். இந்த புக்கிங்கை பயண தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்யலாம். குறைந்த பட்சம் 30 நாட்களுக்குள் புக்கிங் செய்ய வேண்டும். பயணம் செய்யும் போது பயணிகள் இதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு மேல் என்ன யோசனை இப்பொழுதே புக்கிங் செய்யுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Irctc saloon coach facility and price details
Story first published: Thursday, December 8, 2022, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X