இந்த தீபாவளியை அந்தமானில் கொண்டாடலாம்!! அதுவும் கொஞ்ச செலவுல... இந்தியன் இரயில்வேயின் செம்ம பிளான்!

இந்தியன் இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தீபாவளியை முன்னிட்டு ஓர் சூப்பரான டிராவல் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பேக்கேஜின் மூலம் பயணிகள் அந்தமான் & நிக்கோபர் தீவுகளுக்கு பயணம் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி-இன் இந்த ஸ்பெஷல் டிராவல் பேக்கேஜ் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

தீபாவளி சமயத்தில் சிலர் புதுமையான, இயற்கை வனப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவர். அத்தகையவர்களுக்கு, வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஐஆர்சிடிசி புதிய ஸ்பெஷல் டிராவல் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பேக்கேஜிற்கு ஃபேமிலி அந்தமான் ஹாலிடேஸ் - கோல்ட் (EHH96) என ஐ.ஆர்.சி.டி.சி பெயர் வைத்துள்ளது.

irctc diwali family holidays trip

இந்தியாவில் இருந்து வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் & நிக்கோபர் தீவுகளுக்கு பயணிகளை அழைத்து செல்வதை அம்சமாக இந்த ஸ்பெஷல் டிராவல் பேக்கேஜ் கொண்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி-ஆல் அழைத்து செல்லப்படும் இந்த பயணத்திற்கு நபர் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.27,450 ஆகும். மொத்தம் 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் பயணம் இது.

வருகிற நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரையில் இந்த ஸ்பெஷல் பேக்கேஜை செயல்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டமிள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் & நிக்கோபர் தீவுகள் புகழ்பெற்றதே அவற்றின் அழகான கடற்கரைகளினால் ஆகும். மனித கால் தடமே பதியாத பல்வேறு காட்டுப்பகுதிகள் இந்த தீவுகளில் உள்ளன.

irctc diwali family holidays trip

இந்தியாவில் இருந்து அந்தமான் & நிக்கோபர் தீவுகளுக்கு சென்றபின் இந்த தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி-இன் இந்த ஸ்பெஷல் தீபாவளி ட்ரிப் துவங்கும். முதல் நாளில், சுற்றுலா பயணிகள் போர்ட் பிளேரில் உள்ள அழகான கார்பினின் மலைக்குகை கடற்கரை மற்றும் செல்லூலார் ஜெயிலை கண்டுக்களிக்க அழைத்து செல்லப்படுவர்.

அடுத்த நாள் காலை உணவு ரோஸ் தீவில் பரிமாறப்படும். அதன்பின், அதேநாளில் நீர் விளையாட்டுகளுக்கு பெயர்போன பே தீவுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவர். அங்கு உங்களால், ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுகளை விளையாட முடியும். 3வது நாளில், போர்ட் பிளேரில் இருந்து 54கிமீ தொலைவில் உள்ள கண்ணை கவரக்கூடிய ஹேவ்லாக் தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வர்.

irctc diwali family holidays trip

4வது நாளில் நைல் தீவில் அமைந்துள்ள நேச்சுரல் பாலம் மற்றும் லக்ஸ்மன்புர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவர். 5வது நாளில் பிரபலமான பாரத்புர் கடற்கரையிலும், 6வது நாளில் மீண்டும் போர்ட் பிளேருக்கு அழைத்து வரப்பட்டு, சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவர். இந்த ட்ரிப்பிற்கு சிங்கிள் ஆளுக்கு ஒரு தொகையும், கூட்டமாக சென்றால் தலா ஒருவருக்கு குறைவான தொகையும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய யூனியன் பிரதேசத்தில் அங்கமாக வகித்தாலும், அந்தமான் & நிக்கோபர் தீவுகள் கொஞ்சம் விசித்திரமானவை மற்றும் வியப்பானவை என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கலாம். அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். கூடுதல் விபரங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளத்தை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 15:00 [IST]
English summary
Irctc special diwali family holidays trip to andaman here all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X