தட்கல் டிக்கெட் புக் பண்ண பதற வேணாம்! லோடே ஆகாம ஈஸியாக புக் பண்ண சூப்பர் ஆப் வருது!

இந்திய ரயில்வே நிர்வாகம் இந்திய ரயில்வேயில் உள்ள பல்வேறு செல்போன் ஆப்களை ஒன்றிணைத்து ஒரே சூப்பர் ஆப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த ஆப் வரும் டிசம்பர் மாyம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்-ல் என்னென்ன விஷயங்களை செய்யலாம் தற்போது உள்ள ஆப்-ற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் நீண்ட தூர போக்குவரத்திற்கு ரயில் வழி போக்குவரத்தை தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ரயிலில் தான் சொகுசாகவும் அதே நேரம் விலை குறைவாகவும் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் வசதிக்காக பல்வேறு விதமான ஆப்-களை தற்போது பயன்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஆப்கள் எல்லாம் ரயில்வேயில் உள்ள சேவைகளை பெறுவதற்காக மக்கள் தங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

irctc super app

இந்நிலையில் இந்த அனைத்து ஆப்-களையும் ஒன்றாக ஒருங்கிணைத்து ஒரே சூப்பராக உருவாக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட உள்ள ஆப்-ல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது, ரயில்களின் ரன்னிங் ஸ்டேட்டஸ் பார்ப்பது, புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டின் ஸ்டேட்டஸை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஒரே இடத்தில் நடக்கப் போகின்றன.

இந்த செல்போன் ஆப சென்டர் ஃபார் ரயில்வே இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்ற அமைப்பு செய்து வருகிறது. ஏற்கனவே இந்த சேவைகள் எல்லாம் தனித்தனியாக வேறு வேறு ஆப்-களில் இடம் பெற்று வரும் நிலையில் அந்த செயல்பாடுகளை எல்லாம் ஒரே ஆப்-ல் கொண்டு வருவது தான் இதன் நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் பயணிகளுக்கு சுலபமாக சேவைகளை பெற முடியும். ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த சூப்பர் ஆப்-ல் ஏற்கனவே ஐஆர்சிடிசி ஆப்-ல் எப்படியாக பயணிகள் டிக்கெட்டுகளை புக் செய்கிறார்களோ? அதே போன்ற வடிவமைப்பிலேயே அந்த ஆப்-ல் டிக்கெட் புக் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பெரிய அளவில் புலம்பிக் கொள்ள தேவையில்லை குழப்பமடைய தேவையில்லை. ஐஆர்சிடிசி ஆப்-ஐ எப்படி பயன்படுத்துகிறார்களோ அதுபடியே இந்த ஆப்பையும் பயன்படுத்த முடியும்.

ஐஆர்சிடிசி ஆப்-ஐ இதுவரை 10 கோடிக்கும் அதிகமான நபர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் விலை புக் செய்ய ஒரே தளமாக இந்த தளம் தான் இருக்கிறது. அதனால் பலர் இந்த ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த சூப்பர் ஆப்பிலும் இதே வசதி கொண்டு வரப்பட உள்ளது.

ஐஆர்சிடிசி ஆப்-ல் உள்ள வசதி மட்டுமல்லாமல் லோக்கல் ரயில் டிக்கெட் பெறும் யூடிஎஸ் ஆப், ஐஆர்சிடிசி ஏர், நேஷனல் டிரெயின் என்கொயரி சிஸ்டம், ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் ஃபுட் ஆன் டிராக் ஆப், ரயில் மதாத் ஆப், டிஎம்எஸ் நிரிஷ்கான் ஆப், சத்தார்க் மற்றும் போர்ட் ரீட் ஆகிய ஆப்களை இணைத்து ஒரே ஆப்-ஆக சூப்பர் ஆப்-ஆக உருவாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆப் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஐஆர்சிடிசி நிர்வாகம் கடந்து 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ 111.26 கோடியை லாபமாக பெற்றுள்ளது. மொத்தம் அந்நிறுவனம் டிக்கெட் விலை விற்பனை செய்தது மூலம் ரூ 4270.18 கோடியை வருவாயாக ஈட்டியது அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 45 கோடிக்கு அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஐஆர்சிடிசி ஆப் ரயில்வேக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.

ரயில்வே நிர்வாகம் சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியவுடன் தற்போது பயணிகள் பல்வேறு விதமான ஆப்களை டவுன்லோட் செய்து வைத்து எதை எதில் பார்க்க வேண்டும் என குழம்பிக் கொண்டு இல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பார்க்கும் விதமாக அந்த ஆப்பை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. இதனால் பயணிகள் சுலபமாக ரயில்வே நிர்வாகத்தை அணுக முடியும். அதிலுள்ள சேவைகளை எளிதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்போன் ஆப் தொழிற்நுட்பங்கள் வளர துவங்கிய காலகட்டத்தில் ரயில்வே நிர்வாகம் செல்போன் ஆப் மூலம் சேவைகளை வழங்க துவங்கியது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியான ஆப்-கள் இருப்பது பலபேர் சிக்கல்களை ஏற்படுத்தி வந்த நிலையில் இதை ஒரே ஆப்-ல் கொண்டு வருவதன் மூலம் மக்களுக்கு சுலபமான சேவையை கொடுக்க முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 10:41 [IST]
English summary
Irctc super app launch december all in one features
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+