6 மணி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு ரிபஃண்ட்! ரொம்ப நாள் இதை எதிர்பார்த்தாங்க!

இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் அதற்கான ரீபஃண்டை ஆறு மணி நேரத்தில் வழங்குவதற்காக ஏற்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது 50 சதவீதமான டிக்கெட்களுக்கு ரீபஃண்ட் விரைவாக வழங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் போக்குவரத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருப்பது ரயில்வே நிர்வாகம் தான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 21 லட்சம் பேர் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பயணம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் ரயில்வேயில் டிக்கெட் களை பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளம் மட்டுமே இருக்கிறது.

irctc ticket refund

இந்நிலையில் தினந்தோறும் முன்பதிவு செய்த பயணிகள் பலர் தங்கள் முன்பதிவுகளை பல்வேறு காரணங்களுக்காக கேன்சல் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 5000 டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்படுகின்றன. இப்படியாக கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தை குறிப்பிட்ட விதிமுறையின் கீழ் திரும்ப வழங்க வேண்டும்.

இந்தியா முழுவதும் இப்படியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரீபஃண்ட் வழங்குவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பலர் இந்த ரீபஃண்ட் பெற நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் இந்த ரீபஃண்ட் வழங்கும் நேரத்தை குறைத்து விரைவாக ரீபஃண்ட் வழங்க ரயில்வே நிர்வாகம் புதிய வழிமுறைகளை கையாண்டுள்ளது.

irctc ticket refund

டிக்கெட்டுகளுக்கு ரீபஃண்ட் வழங்குவதில் இரண்டு விதமான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. முதலில் காத்திருப்பு பட்டியலில் இருந்து நேரடியாக டிக்கெட் கேன்சல் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தானியங்கி முறையில் ரீபஃண்ட் வழங்கப்படுகிறது. அல்லது ரயில் ரத்தானால் அந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கும் தானியங்கியாக டிக்கெட் கேன்சல் செய்யப்படும். அவர்களுக்கும் தானியங்கி முறையில் டிக்கெட் ரீபஃண்ட் வழங்கப்படுகிறது.

ஆனால் நேரடியாக பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது அவர்கள் ரீபஃண்டிற்காக விண்ணப்பிக்க வேண்டும். இப்படியாக விண்ணப்பிக்கப்பட்ட டிக்கெட்களை மேனுவலாக ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்து அவர்களுக்கான ரீபஃண்டை வழங்குவார்கள். இதில் மேனுலாக சோதனை செய்வதால் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

irctc ticket refund

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மேனுவலாக டிக்கெட் செய்வதில் உள்ள வழிமுறைகளை குறித்து. முடிந்த அளவில் குறைவான பிராசஸில் டிக்கெட்டுகளை ரீபஃண்ட் செய்ய தற்போது திட்டமிட்டு வருகிறது. இதை சோதனை கட்டமாக முயற்சி செய்து வரும் நிலையில். தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ஆறு மணி நேரத்திற்குள் ரீபஃண்ட் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த வழிமுறையை முழுவதுமாக பின்பற்றி ரயில்வே நிர்வாகத்தில் இனி டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் ரீபஃண்ட் வழங்க ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இதற்காக ரயில்வே நிர்வாகம் ஐஆர்சிடிசி தளத்தில் மிக முக்கியமான அப்டேட்களை செய்யப்போகிறது.

தற்போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து வரும் நிலையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாள் திட்டத்தில் இந்த ரயில்வே நிர்வாகத்தின் ரீபஃண்ட்முறையில் கொண்டுவரப்படும் மாற்றமும் மிக முக்கியமான மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ரயில்வே நிர்வாகிகள் தற்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் தொழில்நுட்பம் வளந்துவிட்டாலும் இந்தியாவில் ரயில்வே டிக்கெட்களுக்கான ரீபஃண்ட் வழங்க நீண்ட காலம் எடுத்துக் கொள்வது துரதிஷ்டவசமானது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ரீபஃண்ட் வழங்கும் காலத்தை குறைத்து விரைவாக மக்களுக்கு ரீபஃண்ட் என்று வழங்க நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 23:31 [IST]
English summary
Irctc ticket refund policy reforms 50 percent claims
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X