அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு டூர் அழைத்து செல்லும் ஐஆர்சிடிசி... காதலர் தினத்தை கொண்டாட சூப்பரான பிளேஸ்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?, பட்ஜெட்டில் டூர் அழைத்து செல்லும் புதிய பிளானை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியன் ரயில்வேஸ் கேட்டரிங் அண்ட் டூரிஸ்ம் கார்பரேசன் (Indian Railways Catering and Tourism Corporation) சுற்றுலா பயண விரும்பிகளைக் கவரும் பொருட்டு பல்வேறு சிறப்பு டூர் பேக்கேஜ்களை அறிவித்து வருகின்றது. அந்தவகையில், ஐஆர்சிடிசி தற்போது புதிய டூர் பேக்கேஜை இந்திய பயணிகளுக்காக அறிவித்து இருக்கின்றது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தையே அது அறிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி டூர்

பயண தேதி

உலகின் மிக முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் அந்தமான், நிக்கோபார் தீவுகளும் ஒன்று. இளம் தலைமுறையினர் மற்றும் புதுமண தம்பதிகளை அதிகம் கவரும் சுற்றுலா தளமாகவும் இது இருக்கின்றது. இத்தகைய இடத்திற்கே ஐஆர்சிடிசி டூர் அழைத்து செல்ல இருப்பதாக அறிவித்து உள்ளது. 10 பிப்ரவரி 2023 அன்றே சுற்றுலா பயணம் தொடங்க இருக்கின்றது. வங்காள விரிகுடா வாயிலாக இந்த பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு எல்லாம் கூட்டி போக போறாங்க

விமானம் வாயிலாகவே டூர் அழைத்துச் செல்லப்பட உள்ளது. பேக்கேஜின்கீழ் போர்ட் பிளைர், நார்த் பே தீவு, ரோஸ் தீவு, ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளது. இங்கு மட்டுமின்றி செல்லுலார் சிறைக்கும் டூர் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றது. பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய பல தியாகிகள் இந்த சிறையிலேயே அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பல தியாகிகள் இங்கு நாடு கடத்தப்பட்டு கடுமையான கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

ஐஆர்சிடிசி டூர்

இங்கேகூட கூட்டி போக போறாங்களா!!

இந்த சிறை தற்போது நினைவு சின்னமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கேயும் ஐஆர்சிடிசி ஓர் விசிட்டை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. இதுதவிர, ராதா நகர் கடற்கரை, கலபதர் மற்றும் பரத்பூர் பீச்சுகளுக்கும் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இவையே அந்தமான் மற்றும் நிக்கோபார் டூர் பேக்கேஜின்கீழ் அழைத்துச் செல்லப்பட இருக்கும் மிக முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் ஆகும். ஏற்கனவே கூறியதைப் போல் இந்த சுற்றுலா பயணமானது விமானம் வாயிலாகவே மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

எத்தனை நாள் பயணம் இது?

லக்னோவில் விமானம் புறப்பட்டு போர்ட் பிளையரை சென்றடையும். பிறகு அங்கிருந்தே சுற்றுலா பயணம் தொடங்கப்பட இருக்கின்றது. 6 பகல்கள் 5 இரவுகள் டூரின் காலம் ஆகும். ஆகையால், பிப்ரவரி 14 ஆம் தேதியை காதலியுடன் கொண்டாட விரும்புபவர்கள் இந்த பேக்கேஜை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பரடங் தீவில் உங்கள் காதலியுடன் மாலைப் பொழுதை கழிக்கும் வாய்ப்பையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும், அந்த தினத்தில் மிக சூப்பரான கொண்டாட்டத்திற்கும் திட்டம் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஆர்சிடிசி டூர்

கட்டண விபரம்

வெவ்வேறு விதமான பேக்கேஜின்கீழ் இந்த திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. மூவர் பகிர்தல், இருவர் பகிர்தல் மற்றும் தனி ஆளாக பயணித்தல் எனும் திட்டங்களையே ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ஒரே ரூமை மூன்று பேர் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு ரூ. 57,180-ம், இரு நபர் ஒரே ரூமை பயன்படுத்தி சுற்றுலா செல்லும் திட்டத்திற்கு ரூ. 58,560-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி ஆளாக சொகுசாக இந்த டூரை அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கான கட்டணம் ரூ. 73,330 ஆகும்.

கட்டணம் இது எல்லாத்துக்குமே பொருந்தும்

இந்த கட்டணம் விமானம், தளங்களை பார்வையிடுதல் மற்றும் சொகுசு கப்பலில் அழைத்துச் செல்லுதல் என அனைத்திற்குமானது ஆகும். போர்ட் பிளையர் இருந்து ஹேவ்லாக் தீவு, நீல் தீவுகளுக்கு சொகுசு கப்பலிலேயே சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இந்த பயணத்தின்போது கொடுக்கப்படும் உணவு, தங்குதல், டிராவல் இன்சூரன்ஸ் மற்றும் ஜிஎஸ்டி போன்ற கட்டணங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மேலே பார்த்தத் தொகையை தவிர வேறு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனோ டெஸ்ட் அவசியம்

அதேவேளையில், பயணிக்க விரும்புபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்கிற சான்று பெற்றிருந்தால் மட்டுமே டூருக்கு அழைத்துச் செல்லப்படும் என்கிற நிபந்தனையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னாள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது ஐஆர்சிடிசி அலுவலகங்கள் வாயிலாக இந்த டூருக்கான முன் பதிவை மேற்கொள்ளலாம். இந்த பயணம் குறித்த மேலும் விபரங்களை அறிய சிறப்பு தொடர்பு எண்ணை ஐஆர்சிடிசி வழங்கி இருக்கின்றது. 8287930908 மற்றும் 8287930902 ஆகியவையே அவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Irctc tour andaman and nicobar islands
Story first published: Thursday, January 19, 2023, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X