கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பீரிமியம் உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு (Third-party Insurance) பீரிமியம் உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

நடப்பு நிதியாண்டிற்கான இன்சூரன்ஸ் பீரிமியமை கணிசமாக உயர்த்துவது தொடர்பான யோசனையை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) முன்மொழிந்துள்ளது.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

தற்போதைய சூழலில், 1,000 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பீரிமியம் 1,850 ரூபாயாக உள்ளது. இதனை நடப்பு 2019-20ம் நிதியாண்டிற்கு, 2,120 ரூபாயாக உயர்த்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

அதேபோல் 1,000 சிசி முதல் 1,500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான பீரிமியமை அதிகரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 1,000 சிசி முதல் 1,500 சிசிக்கு இடைப்பட்ட கார்களுக்கான பீரிமியம் 2,863 ரூபாயாக உள்ளது.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

இது 3,300 ரூபாயாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் லக்ஸரி கார்களுக்கான (1,500 சிசிக்கும் மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட கார்கள்) மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்துவது தொடர்பாக எவ்வித திட்டமும் முன்மொழியப்படவில்லை.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

எனவே லக்ஸரி கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் தற்போது உள்ள 7,890 ரூபாயிலேயே தொடரும். ஆனால் 75 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை 427 ரூபாயில் இருந்து 482 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

அதேபோல் 75 சிசி மற்றும் 350 சிசிக்கு இடைப்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான பீரிமியமும் உயரவுள்ளது. ஆனால் இந்த வகை இரு சக்கர வாகனங்களுக்கான பீரிமியமை எவ்வளவு உயர்த்துவது என்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள தொகை குறித்த விபரம் வெளியாகவில்லை.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

எனினும் சூப்பர் பைக்குகளுக்கான (350 சிசிக்கும் அதிகமான பைக்குகள்) பீரிமியமை உயர்த்தும் திட்டம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள், புதிய டூவீலர்களுக்கு 5 ஆண்டுகள் என்ற சிங்கிள் பீரிமியம் ரேட்டிலும் மாற்றம் முன்மொழியப்படவில்லை.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

இதுதவிர எலெக்ட்ரிக் ப்ரைவேட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு விலையில் 15 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இ-ரிக்ஸாக்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்தும் திட்டமும் முன் வைக்கப்படவில்லை.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

ஆனால் பள்ளி பேருந்துகளுக்கான தொகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லாரிகள், டாக்ஸிக்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றுக்கான தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் டிராக்டர்களுக்கான பீரிமியமும் உயரலாம்.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

பொதுவாக ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் திருத்தியமைக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இம்முறை அடுத்த உத்தரவு வரும் வரை, பழைய விலையையே தொடர்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்

இந்த சூழலில்தான், நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டின் புதிய விலை தொடர்பான வரைவு திட்டத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது முன்மொழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, May 24, 2019, 11:58 [IST]
English summary
IRDAI Proposes Hike In Third Party Insurance Premium Rate. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+