ஹெல்மெட்டிற்கு இவ்வளவு ஜிஎஸ்டி வரியா? உடனே மத்திய அரசை ரத்து செய்ய சொல்லும் சர்வதேச சாலை கூட்டமைப்பு!
சர்வதேச சாலை அமைப்பு இந்தியாவில் ஹெல்மெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் சாலையில் டூ வீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியும் வாய்ப்பு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டப்படி டூவீலர் ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் வாகனம் ஓட்ட வேண்டும். டூவீலரில் செல்லும்போது விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்பட்டாலும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது குறையும். ஹெல்மெட் நம் தலைக்கு மட்டுமல்ல நம் உயிருக்கே கவசமாக இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 4.61 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.68 லட்சம் உயிர்கள் பலியாகி உள்ளன. இதில் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை மட்டும் 50,000 தாண்டுகிறது. சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்களில் 70 சதவீதமானவர்கள் டூவீலர் வாகன ஓட்டிகள் ஆகவே இருக்கின்றனர் என சமீபத்தில் வெளியான மத்திய போக்குவரத்து துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இது மட்டுமல்ல இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கார்களை விட டூவீலர்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. ஆனால் இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர். சிறு சிறு நகரங்கள் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் கூட டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலேயே பயணம் செய்து வருகின்றனர்.

டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கு ஹெல்மெட் விலையும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக குறைந்த விலையில் தரமற்ற ஹெல்மெட்களை வாங்கி அணிந்து வருகின்றனர். இந்த தரமற்ற ஹெல்மெட்டுகளை அணிந்து எந்த பயனும் இல்லை.
இதனால் சர்வதேச சாலை மையம் என்ற அமைப்பு சார்பில் மத்திய அரசுக்கு தற்போது புதிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் ஹெல்மெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஹெல்மெட்டிற்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

சர்வதேச சாலை மையம் மத்திய அரசிடம் ஹெல்மெட் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இன்று டூ வீலர் ஓட்டிகள் தங்கள் உயிரை பாதுகாக்க கட்டாயம் ஹெல்மெட் அவசியமாக இருக்கிறது. இந்த அத்தியாவசிய தேவைக்கான பொருளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது. ஹெல்மெட் மீதான ஜிஎஸ்டி வலியை முற்றிலுமாக நீக்கினால் ஹெல்மெட்டின் விலை பெருமளவு குறையும்.
இதனால் ஹெல்மெட் வாங்க தயங்கும் பல வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் சாலையின் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதனால் சாலையில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் குறையும். இது இந்தியாவை சாலை பாதுகாப்பு நிறைந்த நாடுகளின் பட்டியலில் இது இந்தியாவை சாலை பாதுகாப்பு நிறைந்த நாடுகளின் பட்டியலில் ரேங்கிங் பெற செய்யும் வாய்ப்பை கூட வழங்கும்.

தற்போது இந்தியா முழுவதும் மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 1000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மீது ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் என்பது மிக அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. ஹெல்மெட் அணியாமல் டூ வீலரில் பயணித்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஹெல்மெட் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
