இ20 பெட்ரோல் போட்டா மைலேஜ் குறையுமா? நாமளே இதை எப்படி செக் செய்வது?
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது தற்போது 20 சதவீத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த பெட்ரோலை பயன்படுத்துபவர்கள் பலர் தங்கள் வாகனங்களில் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்ககு பிரச்சனை வருகிறதா இதை எப்படி சமாளிப்பது? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த தேவையை குறைக்க அரசு பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை செய்து வருகிறது. எத்தானலும் பெட்ரோலுக்கு இணையாக ஏன் மாற்றாக கூட செயல்படும். ஆனால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப எத்தனாலை தயாரிக்க இன்னும் தயாராகிவில்லை.

இதனால் இந்தியாவில் பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்தியா சதவீத எத்தனால் கலப்பை செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ள நிலையில் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பழைய வாகனங்களில் இந்த எத்தனால் கலந்த பெட்ரோல்கள் சேதம் ஏற்படுத்துவதாகவும், வாகனத்தின் மைலேஜ் மற்றும் ஃபெர்பார்மென்ஸை குறைப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதை அரசும், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் மறுத்துள்ளன.
ஆனால் உங்கள் வாகனம் எத்தனால் கலந்த பெட்ரோலால் உண்மையிலேயே பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய ஒரு சில வழி முறைகள் இருக்கிறது அதை தான் நாம் இங்கே காணபப்போகிறோம். இது வாகனத்தின் மைலேஜ், செயல்திறன், பாரமரிப்பு செலவுகள், மாசு உள்ளிட்ட விஷயங்களை வைத்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

முதலில் உங்கள் வாகனத்தின் மைலேஜ் குறைந்துள்ளதா என்பதை செக் செய்ய வேண்டும். கடந்தாண்டு உங்கள் வாகனங்களுக்கு எவ்வளவு மைலேஜ் கிடைத்தது? தற்போது எவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது. மைலேஜ் குறைந்ததிருந்தால் அதற்கு வேறு காரணிகள் ஏதாவது இருக்கிறதா என பார்க்க வேண்டும். அது இருந்தால் நிச்சயம் இ20 பெட்ரோலால் உங்கள் வாகனத்தின் மைலேஜ் குறைகிறது என அர்த்தம்
நீங்கள் காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது சிரமமாக இருந்தால் அதற்கு இ20 பெட்ரோல் காரணமாக இருக்கலாம். ஆனால் இது இ20 பெட்ரோலுக்கு பிறகு நடக்கம் நிகழ்வா அல்லது முன்னரே வேறு பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இ20 பெட்ரோல் அதற்கு ஏற்ற இன்ஜினில் இல்லாத போது காலையில் ஸ்டார்ட் செய்யும் போது பிரச்சனை வரும்.
எத்தானால் அதிக அரிப்பு தன்மையை கொண்டது. இதனால் பெட்ரோல் டேக், லைப் லைன், நாசில், ரப்பர் சீல் பகுதிகள் எல்லாம் அதிக அரிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.ஒரு முறை மெக்கானிக்கிடம் சென்று இவை அரிப்புக்கு ஆளாகிறதா என்பதை செய்தால் உங்கள் வாகனம் இ20 பெட்ரோலை ஏற்றதாக இருகு்கும்.
அதே நேரம் பெட்ரோலில் கழிவுகள் ஏதாவது இருந்தால் அதை பெட்ரோல் டேங்கிலோ அல்லது பைப் லைனிலேயே படிந்து போக வைக்க எத்தனால் உதவும்,இதனால் பெட்ரோல் டேங்கில் ஏதாவது கழிவுகள் படிந்துபோய்யுள்ளதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள்.
அதே நேரம் நீங்கள் மாசு கட்டுப்பாட்டிற்காக புகை சான்று பெறும் முன்பைவிட உங்கள் வாகனம் குறைவான மாசுவை ஏற்படுத்தினாலும், இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ~் சிறப்பாக இருந்தாலும், வாகனத்தின் இன்ஜின் வெப்பம் குறைவாக இருந்தாலும், இ20 பெட்ரோலை ஏற்று உங்கள் வாகனம் இன்னும் சிறப்பாக செயல்பட துவங்கிவிட்டது என அர்த்தம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் நலனுக்காக இ20 ரக பெட்ரோல் மிக அவசியமான ஒன்று இதனால் நீங்கள் இ20 குறித்து பரவும் வதந்திகளை நம்பாமல் நீங்களே உங்கள் வாகனத்தை சோதனை செய்து சரி பார்த்துக்கொள்வது நல்லது. இதனால் உங்களுக்கும் மன திருப்தி கிடைக்கும். சுற்றுசூழலுக்கும் நன்மை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








