15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..

பெட்ரோல் டேங்கின் முழு கொள்ளளவு என பைக் தயாரிப்பு நிறுவனம் சொன்ன அளவை விட அதிகமான பெட்ரோலை டேங்கில் நிரப்ப முடியுமா? என்ற கேள்விக்கு இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம் வாருங்கள் காணலாம்

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சோனாலி, இவர் சமீபத்தில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட ஒரு பைக்கை வைத்திருக்கிறார். இவர் தன் பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காகச் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு என்ற பகுதியில் செயல்படும் ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அப்பொழுது அவர் தன் பைக்கிற்கு முழு டேங்க் பெட்ரோலை நிரப்பச் சொல்லி உங்கள் ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அங்குள்ள ஊழியர்களுக்கும் இவரது பைக்கிற்கு பெட்ரோலை நிரப்பி விட்டு இவருக்குப் பில்லை கொடுத்துள்ளனர். பில்லை பார்த்த இவருக்குப் பெரிய ஷாக் ஒன்று காரத்திருந்தது.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

15 லிட்டர் கொள்ளளவு கொண்ட தனது பைக்கிற்கு 18.4 லிட்டர் பெட்ரோல் போட்டுள்ளதாக கூறி பில்லை கொடுத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். தன்னை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஏமாற்ற முயற்சிப்பதாக கூறி அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். அவர்களும் தாங்கள் 18.4 லிட்டர் பெட்ரோல் தான் போட்டோம் ஏமாற்றவில்லை என வாதம் செய்துள்ளனர்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

இந்த பிரச்சனையை போலீசாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி சோனாலி அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசாரிடம் சோனாலி இது குறித்து புகார் அளித்தார். போலீசாரும் இது குறித்து விசாரிக்கச் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த பிரச்சனைகளை முதலில் கேட்டறிந்து பின்னர் வாகனத்தில் இருக்கும் பெட்ரோலை வெளியே எடுத்து அளந்து பார்க்க முடிவு செய்தனர்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அதன்படி பைக்கில் இருந்த பெட்ரோல் முழுவதும் வெளியே எடுக்கப்பட்டது. அப்பொழுது பைக்கிலிருந்து வெறும் 15 லிட்டர் பெட்ரோல் தான் வெளியேறியுள்ளது. இதைப் பார்த்து போலீசாருக்கு பெட்ரோல் பங்க் மீது சந்தேகம் வந்துள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் சார்பில் பைக்கின் பெட்ரோல் டேங்கை கழட்டி சோதனை செய்யும் படி கோரிக்கை விடுத்தனர்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அதன்படி பைக்கின் பெட்ரோல் டேக்கை கழட்டி சோதனை செய்த போது பெட்ரோல் டேங்க் உள்ளே மேலும் 3 லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது அதாவது 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பைக்கின் உள்ளிருந்து மொத்தம் 18 லிட்டர் பெட்ரோல் எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது சோனாலி தன்னிடம் ஏற்கனவே 3 லிட்டர் பெட்ரோலுடன் தான் பெட்ரோல் போட வந்ததாக வாதிட்டுள்ளார்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

தற்போது இந்த பிரச்சனைபோலீசார் விசாரணையில் இருக்கிறது. இது குறித்து போலீசார் தீர விசாரணை செய்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை சொல்லுவார்கள். அதே நேரத்தில் இந்த செய்தியைப் படிக்கும் ஆட்டோமொபைல் ஆர்வர்களான நமக்கு இது எப்படி 15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18 லிட்டர் பெட்ரோல் நிரப்ப முடிந்தது என்ற சந்தேகம் வரும். இது குறித்த காரணங்களைப் பற்றி அறியும் முன்பு இதே போல வேறு ஒரு சம்பவம் நடந்தது அதைப் பற்றிக் காணலாம்

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் டாக்டர் அப்துல் மன்சூர் என்பவர் தனது ஊழியர் ஒருவரிடம் தனது மாருதி ஸ்விஃப்ட் டீசல் காரை கொடுத்து டீசல் நிரப்பி வரச் சொல்லிக் கொடுத்துள்ளார். அந்த காரின் டீசல் டேங்கின் முழு கொள்ளளவு 42 லிட்டர் ஆகும். ஆனால் வாகனத்திற்கு முழு டீசலை நிரப்பி விட்டு 50 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டதாக பில் கொடுக்கப்பட்டுள்ளது.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் இது குறித்து மங்களூரூ கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது இரு தரப்பிலும் தவறு இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் எங்குத் தவறு நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் இந்த வழக்கு குறித்து விசாரிக்க போலீசார் அம்மாநிலத்தின் மெட்டலர்ஜிக்கல் துறை வல்லுநர்களின் உதவியை நாடினர். மெட்டலர்ஜிக்கல் துறை வல்லுநர் கஜேந்திரா தலைமையில் இதற்கான ஆய்வு நடந்தது.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அவர்கள் வந்து முதலில் பெட்ரோல் பங்கின் பம்பை சந்தேகப்பட்டு அதைச் சோதனை செய்தனர். அதன் K factor மற்றும் சிரீயல் நம்பர்களைச் சோதனை செய்த போது அது சரியாக இருந்தது. இதில் K factor என்பது எவ்வளவு பெட்ரோல் பம்பிலிருந்த வெளியாகிறது என்பதைக் கணக்கிடும் ஒரு முறை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இத்தனை பல்சஸ் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அதில் ஏதாவது குழப்படி இருந்தால் குறைவாக/ அதிகமாக பெட்ரோல் பம்பிலிருந்து வெளியானாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் தான் வெளியானதாகக் கணக்குக் காட்டும்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அதாவது பெட்ரோல் பம்பில் ஒரு சுழலும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த கருவி முறை சுற்றினால் இத்தனை லிட்டர் பெட்ரோல்/டீசல் வெளியேற்றப்பட்டுள்ளது. என கணக்குக் காட்டும். உதாரணமாக ஒரு முறை சுற்றினால் 10 மில்லி பெட்ரோல் வெளியேற்றப்படுகிறது. என்றால் 100 முறை சுற்றினால் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வெளியாகும் இதை பெட்ரோல்பங்க் வைத்திருப்பவர்கள் 90 முறை சுற்றினால் ஒரு லிட்டர் எனப் பம்பை ஹேக் செய்து மாற்றும்பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு 900 மி.லி பெட்ரோல் வெளியான போதே ஒரு லிட்டர் வெளியானதாகக் கணக்குக் காட்டும்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

பெட்ரோல் பங்கில் K factor -ஐ சோதனை செய்த போது அது சரியாக இருந்துள்ளது. அதன்பின் அதுவரை பெட்ரோல் பங்கின் மீது இருந்த சந்தேகம் தற்போது காரின் டீசல் டேங்கின் மீது மாறியது. அதிகாரிகள் உடனடியாக காரில் உள்ள டீசல் முழுவதையும் வெளியேற்றிவிட்டு அவர்கள் முன்னிலையில் டீசலை டேங்கை அதே பெட்ரோல் பங்கில் அதே பம்பில் நிரப்பச் சொல்லி சோதனை செய்தனர்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக மொத்தம் 51.36 லிட்டர் டீசலை இந்த டீசல் டேங்க் எடுத்துக்கொண்டது. அதாவது கார் தயாரிப்பு நிறுவனம் சொன்ன அளவைவிட 9.36 லிட்டர் டீசல் அதிகமாக நிரம்பியுள்ளது. அதன் பின்பு ஆட்டோமொபைல் வல்லுநர்களுடன் அது குறித்து மெட்டலர்ஜிக்கல் துறை வல்லுநர் கஜேந்திரா பேசிய போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் அல்லது பெட்ரோல் டேங்கின் முழு கொள்ளளவு எனக் கூறுவது எவ்வளவு பெட்ரோலை நிரப்பினால் பாதுகாப்பானது என்பதையே குறிக்கும்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

உண்மையில் காருக்கு கார் பெட்ரோல் டேங்கின் முழு கொள்ளளவு என்பது மாறுபடும். அதே போல பெட்ரோல் டேங்கில் முழு கொள்ளளவு என்பது டேங்கில் அளவு மட்டுமே சிலர் டேங்கின் பைப் நுனி வரை பெட்ரோலை நிரப்புவார்கள். அதைக் கணக்கில் கொள்ளக் கூடாது. அதே போல காலியாக இருக்கும் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் சென்றதும் அது நேரடியாக டியூப்வழியாக இன்ஜினை நோக்கிச் செல்ல முயற்சிக்கும். அந்த டியூப்பின் அளவையும் கணக்கிட வேண்டும்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

அப்படிப் பார்த்தாலும் 9 லிட்டர் என்பது மிக அதிகம் தான். ஆனால் இந்த வாகனத்தின் உண்மையான டீசல் டேங்கின் அளவு 51.36 லிட்டர் தான் மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள டேங்க் முழு கொள்ளளவு என்பது பாதுகாப்பான அளவு என மெட்டலர்ஜிக்கல் துறை வல்லுநர் கஜேந்திரன் அப்பொழுது விளக்கமளித்திருந்தார்.

15 லிட்டர் பெட்ரோல் டேங்கில் 18.4 லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியுமா? சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

சென்னை சோனாலி சம்பவத்திற்கும் இதே தீர்வு தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் வைத்திருக்கும் பைக்கின் முழு கொள்ளளவு என அந்த பைக்கை தயாரித்த நிறுவனம் கூறுவது அதன் பாதுகாப்பான அளவாக இருக்கக்கூடும் பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் கொள்ளளவு 18 லிட்டராக இருக்கக்கூடும். ஆனால் இதை உறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த பிரச்சனையை வல்லுநர்களே விசாரிக்க வேண்டும்.

*Images are Representative Purpose only

Article Published On: Thursday, May 5, 2022, 9:58 [IST]
English summary
Is it possible to fill fuel more than is tank capacity Fully Explained
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+