டாடா மோட்டார்ஸ் ஐடியாவை கொண்டு வெற்றியை ருசித்த கார் மாடல்கள்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ், பயணிகள் வாகன விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை கொண்டிருக்கிறுத. ஆனால், தனி நபர் வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கவர முடியவில்லை.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், இன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கும், அதன் செக்மென்ட்டுக்கும் அச்சாரம் போட்டது டாடா மோட்டார்ஸாகத்தான் இருக்கிறது.

ஆம், சமீபத்தில் வந்த ரெனோ க்விட் முதல் மாருதி டிசையர் வரை பல வெற்றிகரமான மாடல்களுக்கு அடிப்படை ஐடியாவை வழங்கியதே டாடா மோட்டார்ஸ் நிறுவனமாகத்தான் இருக்கிறது. ஆனால், பயணிகள் வாகன விற்பனையில், ஐடியா கொடுத்த டாடா மோட்டார்ஸ் நிலைமை மிக மோசமாக இருப்பதும், அதனை வைத்து பிற நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை நிலைநாட்டியிருப்பதையும் தொடர்ந்து காணலாம்.

டாடா நானோ

டாடா நானோ

ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பிரகடனத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ கார் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்று பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், முன்பதிவும் பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. டாடா நானோ காரின் தோற்றம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதுடன், ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பிரகடனத்தால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கவுரவ குறைச்சலாக நினைத்துவிட்டனர். இதனால், தோல்வியான மாடலாக மாறிவிட்டது. மேலும், டிசைனிலும் டாடா கோட்டை விட்டு விட்டது. ஆனால், டாடா நானோவுக்கு எதிர்பார்த்த, கிடைத்திருக்க வேண்டிய ஒரு வரவேற்பை ஓர் புதிய மாடல் பெற்றிருக்கிறது.

 ரெனோ க்விட்

ரெனோ க்விட்

டாடா நானோ காரில் டாடா செய்த தவறுகளை மிக சாதுர்யமாக சரிசெய்து, இந்தியர்களின் டிசைன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தற்போது ரெனோ க்விட் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட விலையில் கூட டாடா நானோவுக்கும், ரெனோ க்விட் காருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால், டிசைனை வைத்து கேம் ஆடிவிட்டது ரெனோ கார் நிறுவனம். இதனால், இன்றைய நிலவரப்படி, ரெனோ க்விட் காருக்கு கிடைத்திருக்கும் முன்பதிவு எண்ணிக்கை 50,000ஐ கடந்துவிட்டது. ஆனால், இந்த வரவேற்பும், விற்பனையும் டாடா நானோ காருக்குத்தான் கிடைத்திருக்க வேண்டியதாக கூறலாம். அது மட்டுமல்ல, விற்பனைக்கு பிந்தைய சேவையிலும், உதிரிபாகங்கள் சப்ளையிலும் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து நம்பகத்தன்மையை பெறுவதில் தவறி வருவதும் முக்கிய காரணமாக கூறலாம்.

மினி செடான் கார்

மினி செடான் கார்

முதல்முதலாக 2006ம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் ஓர் ஸ்மார்ட்டான ஐடியாவுடன் ஓர் புதிய செடான் காரை அறிமுகம் செய்தது. அதுவரை, செடான் கார் என்றால் மிக நீளமாக, விசாலமாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளை உடைத்து, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக நகர்ப்புறத்துக்கு ஏற்ற, டாடா இண்டிகோ காரை அறிமுகம் செய்தது. அத்துடன், வரிச்சலுகை கிடைக்கும் என்பதால், மிக குறைவான விலையில் ஓர் செடான் காராக நிலைநிறுத்த முனைந்தது. மேலும், நகர்ப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருந்ததால், தனி நபர் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று டாடா மோட்டார்ஸ் நம்பியது. ஆனால், டாடா பிராண்டு மீதான நம்பகத்தன்மை, கட்டுமானத் தரம் உள்ளிட்டவை இந்த காருக்கான மார்க்கெட்டை கெடுத்துவிட்டது.

 மாருதி டிசையர்

மாருதி டிசையர்

ஆனால், டாடா இண்டிகோ சிஎஸ் செடான் காரின் டிசைனை மனதில் வைத்து கத்தரி போடப்பட்ட மாருதி டிசையர், மிக பெரும் வெற்றியை பதிவு செய்துவிட்டது. தோற்றத்தில் சுமாராக இருந்தாலும், மைலேஜ், விலை, மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க என்பதுடன், மிக குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்ட செடான் கார் என்ற அம்சங்கள் இந்த காரை விற்பனையில் உச்சத்தில் வைத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி இருந்து வருகிறது. ஆனால், டாடா எதிர்பார்ப்பு பொய்த்து போனது.

எஸ்யூவி

எஸ்யூவி

எஸ்யூவி செக்மென்ட்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் புதிய டிரென்ட்டை உருவாக்க முனைந்தது. வழக்கமான எஸ்யூவி மாடலாக இல்லாமல், டாடா சியாரா எஸ்யூவி மூலமாக ஓர் புதிய கோணத்தில் எஸ்யூவி மார்க்கெட்டை கொண்டு போக நினைத்தது. அத்துடன், அந்த நிறுவனத்தின் டாடா சஃபாரியும் இந்திய சாலைநிலைகளுக்கும், விலையிலும் மிகச் சிறப்பான மாடலாக இருந்தது. தொடர்ந்து வந்த டாடா சுமோ மூலமாக அதனை வலுப்படுத்த நினைத்தது. அந்த இடத்தை இப்போது பல நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டுவிட்டன.

மஹிந்திரா

மஹிந்திரா

குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி செக்மென்ட்டை அடித்து நொறுக்கி வருகிறது. எஸ்யூவி தயாரிப்பில் நீண்ட அனுபவம் இருந்தாலும், டாடா மோட்டார்ஸ் எஸ்யூவி மாடல்களை குறிவைத்தே மாடல்களை வடிவமைத்து மார்க்கெட்டை பிடித்திருக்கிறது. ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 போன்ற மாடல்கள் டாடா மோட்டார்ஸ் எஸ்யூவி மாடல்களின் மார்க்கெட்டை குறிவைத்தே களமிறக்கப்பட்டு வருகிறது. டாக்சி மார்க்கெட்டில் டாடா ஓகே. ஆனால், தனி நபர் மார்க்கெட்டில் மஹிந்திராதான் இப்போது கில்லி என்று சொல்ல வைத்துவிட்டது.

வர்த்தக வாகனங்கள்...

வர்த்தக வாகனங்கள்...

இலகு ரக வர்த்தக வாகனப் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா முந்தி விட்டதாக சமீபத்தில் ஒரு செய்தியை படித்திருப்பீர்கள். மினிடார் என்ற மூன்று சக்கர சரக்கு வாகனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், அதற்கு மாற்று தரும் வகையில், ஓர் சிறப்பான மாடலாக டாடா ஏஸ் அறிமுகம் செய்யப்பட்டது. நல்ல வரவேற்பை டாடா ஏஸ் பெற்றபோதிலும், அந்த மார்க்கெட்டில் தற்போது மஹிந்திரா கூடுதல் வலுவாக திகழ்கிறது.

முந்திய மஹிந்திரா

முந்திய மஹிந்திரா

டாடா ஏஸ் மினி டிரக்கை குறிவைத்து களமிறக்கப்பட்ட மஹிந்திரா மேக்ஸிமோ தற்போது சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அத்துடன், மஹிந்திரா மேக்ஸிமோவுக்கு துணை சேர்க்கும் விதத்தில், ஜீட்டோ உள்ளிட்ட மாடல்களையும் தொடர்ந்து களமிறக்கி மார்க்கெட்டை வலுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது மஹிந்திரா.

கோட்டை விட்டு தவிக்கும் டாடா...

கோட்டை விட்டு தவிக்கும் டாடா...

டாடாவின் கணிப்புகள் சரியாக இருந்தாலும், டிசைனிலும், விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. டாடா போல்ட், டாடா ஸெஸ்ட் கார்கள் டிசைனில் சிறப்பாக இருந்தும், டாடா பிராண்டு மீதான நம்பகத்தன்மை இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே, விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும், உதிரிபாகங்கள் சப்ளையிலும் டாடா மோட்டார்ஸ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. இந்திய தயாரிப்பு நிறுவனம் என்பதற்காகவே, பலர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை ஆதரிக்க ஏராளமான வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், அதனை பூர்த்தி செய்வது டாடா மோட்டார்ஸ் கையில்தான் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் சமூக வலை தள பக்கங்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

Most Read Articles
English summary
Tata Motors was known for affordable, reliable and innovative cars a few years ago. Now, the company has made an image for itself for being not so- reliable affordable and innovative. Cars such as the Tata Zest, Bolt and the Aria are very good, in terms of technology used, but has failed miserably in the Indian market in spite of a lot of investment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X