கோடி ரூபாய்க்கு வாங்குன காரை சில லட்சங்களுக்கு விக்குறாங்க! தமிழ்நாட்ல இருந்து இந்த கார்களை வாங்க முடியுமா?

டில்லியில் காற்று மாசு காரணமாக பழைய கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாநிலத்தில் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்தி வரும் பலர் அதை ஸ்கிராப்பிற்கு போடுவதற்கு பதிலாக வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் டில்லியில் உள்ள பழைய கார்கள் குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வருகிறது. தமிழகத்தில் இருந்து கொண்டு இந்த காரை வாங்க முடியுமா? அப்படி வாங்க வேண்டும் என்றால் அதற்கான வழி முறைகள் என்ன ? விரிவாக காணலாம் வாருங்கள்.

டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒவ்வாரு ஆண்டும் காற்று மாசு அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டின் தலைநகர் திண்டாடி வருகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய டில்லியில் இயங்கும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

Delhi old Vehicle Ban

தற்போது அதற்கு அதிக கட்டுப்பாடு விதிக்கும் வகையில் தடை விதிக்கப்பட்ட வாகனங்கள் பெட்ரோல் பங்களுக்கு பெட்ரோல் போட வந்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது. தற்போது டில்லியில் பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் அதை ஸ்கிராப் செய்யவோ அல்லது வெளி மாநிலங்களுக்கு விற்கவோ முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்தி வருபவர்கள் அதை மிக குறைவான விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கார்கள் தற்போது செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இந்த கார்களை தமிழகத்திலிருந்து வாங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

Delhi old Vehicle Ban

நிச்சயமாக வாங்கலாம். டில்லியில் அந்த வாகனத்தின் பதிவெண்ணை நீக்கம் செய்து அதற்கான தடையில்லாத சான்றை பெற்ற வேண்டும். தடையில்லாத சான்று பெற்ற வாகனங்களை மட்டுமே நீங்கள் வாங்க வேண்டும். நீங்கள் குறைந்த விலைக்கு அந்த காரை வாங்கிய பிறகு அதை தமிழக்திற்கு கொண்டு வந்து டில்லியில் வாங்கிய தடையில்லா சான்றை வைத்து தமிழகத்தில் அந்த வாகனத்தை பதிவு செய்து கொள்ள முடியும்.

இப்படியாக பதிவு செய்யும் போது அதற்கான கட்டணம் வரும். ஒவ்வொரு வாகனத்திற்கும் கட்டணம் மாறுபடும். இப்படியாக பதிவு செய்தால் தமிழகத்தில் அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டதற்கான பதிவெண் வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் வாங்கிய வாகனத்தில் தமிழக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பொருத்தி அந்த வாகனத்தை பயன்படுத்தலாம்.

Delhi old Vehicle Ban

தற்போது டில்லியில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட கார்கள் சில லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. ஸ்கிராப் செய்தால் பெரிய அளவில் பணம் கிடைக்காது என்பதால் மக்கள் இதை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்கிறனர். இது மட்டுமல்ல பலர் மிக குறைவாகவே இந்த வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கண்டிஷன்களும் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டில்லியில் இருந்து காரை குறைந்த விலைக்கு வாங்கும் போது காரின் கண்டிஷனை உறுதி செய்து கொள்வது நல்லது. பழைய கார்கள் பெரும்பாலும் கண்டிஷன்கள் சிறப்பாக இருக்காது. வெகு சிலர் மட்டுமே வாகனத்தை நல்ல கண்டிஷனில் பராமரித்து வைத்திருப்பார்கள். நன்கு பராமரிக்கப்பட்ட கார் உங்களுக்கு கிடைத்தால் நல்ல அதிர்ஷ்டம் தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 23:45 [IST]
English summary
Is that possible to buy old delhi vehicles in tamilnadu in cheap price
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X